September 02

Date:02 Sep, 2017

September 02

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 02

                                          தேசிய செய்திகள்

 

 

 • டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையராக “சுனில் அரோரா” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மந்திரி சபையை மாற்றி அமைத்தார் இதன் காரணமாக நாளை(செப்டம்பர் 03) புதிய மந்திரிகள் பதவி ஏற்க உள்ளனர்.

 

 • நாட்டின் மிகப் பெரிய நதிகளை(60) இணைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம்(அக்டோபர்) தொடங்கி வைக்கின்றார்.

 

 • டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்(டி.ஐ) என்ற அமைப்பு 16 நாடுகளில் ஊழல் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஊழல் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது என்று அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 

 • நிதி ஆயோக்(மத்திய கொள்கைக் குழு) அமைப்பின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் “ராஜீவ் குமார்” நியமனம் செய்யப்பட்டார்.

 

 • மத்திய மாநில அரசு துறைகள் மற்றும் வங்கிகளில் வேலைக்களுக்கான பயிற்சி மையம்(பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு) தமிழக அரசு சார்பில் வட சென்னையில் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

 

 • வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை செப்டம்பர் 5ம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஸ்வச்சதா பக்வாடா’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் செப்டம்பர் 15 வரை தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

 

 • கரூர், சேலம், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படாமல் உள்ள 360 சங்கங்களின் பெயர்களை சங்கப் பதிவேட்டிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக “கென்னத் ஜஸ்டர்” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • சிங்கப்பூரின் ஆக்டிங் ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த “ஜே.ஓ.பிள்ளை” நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 • 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் அதிசய விஷ்ணு சிலை – காட்மாண்டுவில(நேபாளம்) உள்ள புத்தானிகந்தா கோவிலில் உள்ளது.

 

 • இத்தாலியை தலைமையகமாக கொண்ட உலக அறிவியல் அகாடமி (TWAS – The Work Academy of Science) உமேஷ் ஹல்வத்துர்க்கு(இலங்கை) உலகின் சிறந்த இளம் விஞ்ஞானிக்கான விருது வழங்கியது.

 

 • ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போர் அன்று வீசப்பட்ட அபாயகரமான வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டை வரும் ஞாயிற்று கிழமை செயலிழக்க செய்ய அந்நாட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

 • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த (பிரிக்ஸ்) அமைப்பில் பிற நாடுகளை சேர்க்கும் முயற்சியை சீனா கைவிட்டுள்ளது.

 

 • கொழும்பு(இலங்கை) நகருக்குள் படகு போக்குவரத்து சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இலங்கை நகர அபிவிருத்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை “கழுகுகள் தினமாக” அனுசரிக்கப்படுகிறது. கழுகுகள் “இயற்கையின் துப்புரவு பணியாள்” என அழைக்கப்படுகின்றது.

 

 • உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கான பட்டியலில் ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன் முதலிடத்தில் உள்ளார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த ஐரோப்பியர் பட்டியலில் போர்ச்சுகல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

 • பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் “பெல்பின்ஸ் கோப்பைக்கான” 20வது மாநில அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

 

 • மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 15வது மாநில கூடைபந்து போட்டி சென்னையில் இன்று(செப்டம்பர் 02) தொடங்கி செப்டம்பர் 09ம் தேதி வரை நடக்கிறது.

 

 • கல்பாத்தி-ஏஜிஎஸ் அனைத்து இந்திய புச்சிபாபு கிரிக்கெட் தொடர் இன்று(செப்டம்பர் 02) தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெறும்.

 

 • சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா 4 இடங்கள் முன்னேறி 12வது இடத்தில் உள்ளார். ஸ்ரீகாந்த் 2 இடங்கள் முன்னேறி 8வது இடத்தில் உள்ளார்.

 

 • ஃபிஃபா கால்பந்து தரவரிசையில் இந்திய மகளிர் அணி 4 இடங்கள் முன்னேறி 56வது இடத்திற்கு வந்துள்ளது.

 

 • சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, மகளிர் ஒற்றையர் பிரிவில் 2 இடங்கள் முன்னேறி 12வது இடத்தில் உள்ளார்.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது என ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிகிறது.

 

 • நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கார் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 23.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • வங்கி அமைப்புகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் பொதுப்பங்கை(ஐபிஓ) செப்டம்பர் 11ம் தேதி வெளியிடவுள்ளது.

 

 • ஸ்கோடா ஆக்டேவியா, RS மாடல் காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

 

 • ரூ.5 முதல் ரூ.399 வரை 4 ஜிபி டேட்டா கட்டணத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது

 

 

Current Affairs

 

 • The civil aviation administration of china announced the country’s first test – flight base for civilian drones in Shanghai

 

 • The union minster of environmental, forest, climate change Dr. Harsh Vardhan addressed the Business and Climate Summit (BCS) 2017 in New Delhi.

 

 • PM Narendra Modi inaugurated the annual conference – Rajaswa Gyan Janagam, 2017 in New Delhi.

 

 • National Nutrition week : 1st to 7th September Theme : “Optimal Infant & young child feed practices : Better child health”

 

 • 5.7 % GDP growth rate in first quarter

 

 • Rajiv Mehrishi appointed as next CAG (Comptroller and Auditor General) of India

 

 • Sunil Arora has been appointed as Selection Commissioner of India.

   

Call Now
Message us on Whatsapp