September 01

Date:01 Sep, 2017

September 01

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 01

                                          தேசிய செய்திகள்

 

 

 • ஐஆர்என்எஸ்எஸ் – எச் 1 என்ற செயற்கைக் கோள் புவி வட்டப் பாதையில் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது என்றும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு செயற்கைக் கோள் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

 • மத்திய அரசின் உள்துறை செயலராக “ராஜீவ் கவுபா” நேற்று (ஆகஸ்ட் 31) பதவியேற்றார்.

 

 • பாரத் நெட் திட்டம் : நாட்டில் உள்ள 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில் 31,680 பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு இணையதள சேவை வழங்கியுள்ளது.

 

 • சிஏஜி(மத்திய கணக்கு மற்றும் தணிக்கை) தலைவராக முன்னாள் உள்துறை செயலர் ராஜீவ் மெகரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் எடுத்து செல்ல வேண்டும் என்ற புதிய சட்டம் இன்று(செப்டம்பர் 1) முதல் அமலுக்கு வந்தது.

 

 • தமிழகத்தில் கடந்த ஐம்பது வருடங்களில் 8வது அதிக மழையை பெற்ற மாதம் – ஆகஸ்ட் 2017, 425 மில்லிமீட்டர் மழை பெய்தது என்று தமிழ் நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” தெரிவித்துள்ளார்.

 

 • அரசு கேபிள் தொலைக்காட்சி சார்பில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் புதிய திட்டம் (செப்-1) இன்று தொடங்கியது.

 

 • வாக்குப்பதிவு தாமதமடைவதை தடுக்கும் வகையில், நகர்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1400 வாக்காளர்கள் என்றும் கிராமப்புறங்களில் ஒரு வாக்குசாவடிக்கு 1200 வாக்காளர்கள் மட்டும் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

 • காரைக்குடியில், ஆதார் எண் மற்றும் விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்யும் திட்டம் இன்று(செப்.1) முதல் அமல்படுத்தப்படுகிறது.

 

 • ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில், இந்தியா – அமெரிக்கா சார்பில் “சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு” நவம்பர் 28-30 நடைபெறுகிறது.

 

 • நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில், தமிழகத்தில் 670 பள்ளிகளில் ‘எல்காம் ஆங்கிலம், ஸ்டெம் அறிவியல், ஏரியல் கணிதம்’ ஆகிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ரஷியத் துணைத் தூதரகம் மற்றும் இரண்டு கூடுதல் தூதரக மையங்களை மூடும்படி அமெரிக்கா உத்தவிட்டுள்ளது.

 

 • கருப்பு பண ஒழிப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுவிட்சர்லாந்து அதிபர் “டோரிஸ் லூதர்ட” அறிவித்துள்ளனர்.

 

 • வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தைக் குறைக்க வேண்டுமென்று உலக வர்த்தக அமைப்பில் (டிபிள்யூ.டி.ஓ) இந்தியாவும் சீனாவும் வலியுறுத்தியுள்ளன.

 

 • அமேசான் காடுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், 381 புதிய உயிரினங்களை ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • தற்கொலைக்குத் தூண்டும் “ப்ளு வேல்” விளையாட்டுக்கு எதிராக சக மனிதர்கள் மீதான அன்பினை பரப்பும் ‘பிங்க் வேல்’ என்னும் விளையாட்டை பிரேசிலினை சேர்ந்த பனானா தேவ் என்ற அப் வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ளார்.

 

 • அமெரிக்காவின் டெக்சாஸ் நகரை தாக்கிய ஹார்வே புயல் கடந்த ஆயிரம் வருடங்களில் ஏற்படாத புயல் என்றும் இதனால் ரூ 10 லட்சம் கோடி இழப்பு ஏற்ப்பட்டதுள்ளது, இதுவரை 38 உயிர்கள் பலியாகியுள்ளனர் என்று அமெரிக்க பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

 

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சதம் அடித்தனர்.

 

 • கோவையில் நடைபெற்ற பி.எஸ்.ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி (ஐஓபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய விரர்கள் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.

 

 • ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி “அதிக அளவிலான நாட் அவுட்களைக் கொண்ட வீரர்” என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

 • துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மற்றும் கான்பூரில் 7ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டிக்கான இந்திய ரெட் அணிக்கு “அபினவ் முகுந்த்” கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருசா, ஷரபோவா ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • உலக குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் பிதுரி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை போட்டி வரலாற்றில் பதக்கம் வென்ற 4வது இந்தியராக கவுரவ் பிதுரியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • கிராமப்புறங்களில் டிஜிட்டல் வங்கி சேவையை வலுப்படுத்தும் நோக்கில் தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி, முதல் “கிராமப்புற டிஜிட்டல் மையத்தை” ஈரோடு மாவட்டத்தில் தொடங்கியது

 

 • அமெரிக்காவில் சிறுவர்களிடையே மிகவும் பிரபலமான ஷ்வின் ரக சைக்கிள்களை இந்தியாவில்(முதல் முதலாக) தயாரித்து விற்பனை செய்யும் வகையில் முருகப்பா குழுமத்தை சேர்ந்த “டிஐ சைக்கிள்ஸ், டோரல் குழுமத்தின் பசுபிக் சைக்கிள்ஸ்” நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

 

 • திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த 90 இடங்களில் நீர்மூழ்கி தடுப்பணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

 

 • பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசு இதுவரை ரூ 70000 கோடி முதலீடு செய்திருக்கிறது என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

 • ஏர் இந்தியா பங்கு விலகல் நடவடிக்கையில் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

 

 • இந்திய மோட்டார் வாகன உதிரிப்பாகத் துறையின் மதிப்பு ரூ 2.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

 

 • இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளுக்கு வெள்ள நிவாரணமாக 1 மில்லியன் டாலர் வழங்க இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

Current Affairs

 

 • India and Myanmar to sign MOU for conservation of quake damaged Pagodas at Bagan

 

 • During the 10th  India – European Union Counter Terrorism Dialogue on New Delhi the tour sides deliberated extensively on combating terror financing

 

 • The Indian Space Research Organization(ISRO) is all set to launch PSLV – C 39 carrying Indian Regional Navigation Satellite System (IRNSS – 1H)

 

 • Jammu and Kashmir got Rs.200 crore funds allocated for the winter capital of Jammu under Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT)

 

 • After Kalpana Chawla, Jalsean Kaur Josan becomes 2nd Indian women to fly for NASA’s Mars mission

 

 • NTPC signs Rs.3,000 crore term loan agreement with ICICI Bank

   

   

Call Now
Message us on Whatsapp