October 11

Date:11 Oct, 2017

October 11

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 11

தேசிய செய்திகள்

 

 

 • நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மிகப்பெரிய நிதித் தொகுப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக மத்திய நீர்வளங்கள், நதிநீர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியா தண்ணீர் வாரம் – 2017” டெல்லியில் நேற்று நடைபெற்றது.

 

 • மும்பை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

 • செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தால் (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணினித் தொழில்நுட்ப நிறுவனமான இன்டல் இந்தியாவின் தலைவர் நிவ்ருதி ராய் தெரிவித்துள்ளார்.

 

 • சென்னையில் முதல் முறையாக இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சி) அக்டோபர் 13ம் தேதி தொடங்குகிறது.

 

 • கடந்த 6 ஆண்டுகளில் தொழிலாளர் நலவாரியங்களைச் சேர்ந்த 28 லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.757 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

 

 • தமிழக அஞ்சல் துறை முதன் முறையாக நடமாடும் அஞ்சலகத்தை, சென்னையில் நேற்று (அக்டோபர் 10) தொடங்கியது

 

 • நேற்று (அக்டோபர் 10) அஞ்சல் துறை காப்பீட்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வழங்கப்பட்டது. இதனையொட்டி ‘சம்பூர்ணா டாக் ஜீவன் பீமா கிராம யோஜனா’ என்ற காப்பீட்டு திட்டம் புதிய மாற்றங்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • வடகொரியாவிற்கு விதிக்கப்பட்ட தடைகளை மீறிய நான்கு கப்பல்கள் சர்வதேச துறைமுகங்களுக்கு செல்ல ஐ.நா. சபை தடை விதித்துள்ளது.

 

 • இந்தியர்களுக்கான சர்வதேச இந்திய அழகிப் போட்டி(26வது) நியூஜெர்சியில்(அமெரிக்கா) நடைபெற்றது. இதில் விர்ஜினியாவை (அமெரிக்கா) சேர்ந்த சட்ட கல்லூரி மாணவியும், பிரபல பாடகியுமான மது வள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் 18 நாடுகளை சேர்ந்த, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

 

 • மீள் குடியேற்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து 10000 அகதிகளை பிரான்ஸ் நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

 

 • பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை $ 270,000 மதிப்பிலான பொருட்களை(மனிதாபிமான அடிப்படையில்) அனுப்பியுள்ளது.

 

 • ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டது என்ற பிரகடனத்தை கேட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டியமோன், பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர். எனினும், இந்த விடுதலைப் பிரகடனம் செயல்படுத்துவதை சில வாரங்கள் நிறுத்திவைப்பதாக பூஜ்டியமோன் அறிவித்தார். 

 

 • சுனாமியைத் தொடர்ந்து ஜப்பானின் ‘புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு அரசும், அந்த அணு உலை மூலம் மின்சார உற்பத்தி செய்து வந்த நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • 2009ம் ஆண்டு பொருளாதாரத்திற்காக வழங்கப்பட்ட நோபல் பரிசை “எலினோர் ஆஸ்ட்ரோம்” பெற்றார். இவர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் ஆவார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தெற்கு ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் பழனியைச்(திண்டுக்கல்) சேர்ந்த மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.

 

 • யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், ஈரான் அணிகள் 2வது சுற்றுக்கு முன்னேறியது.

 

 • ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் டாக்காவில் (வங்கதேசம்) இன்று(அக்டோபர் 11) தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதுகிறது.

 

 • 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடான ஐஸ்லாந்து உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாக விளையாட தகுதி பெற்றுள்ளது.

 

 • உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி (ஆடவர் ஒற்றையர் பிரிவில்) 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

 

 • 17 வயதிற்குட்பட்டோருக்கான(யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டி, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்பெயின் பெற்ற முதல் வெற்றியாகும் 

 

 • வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை), 2018ம் ஆண்டு சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் பங்கேற்கப்போவதாக தெரிவித்துள்ளார். இவர் இந்தப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்க உள்ளார்.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • 2017ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

 

 • வாராக் கடன் அதிகரிப்பு சௌத் இந்தியன் வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 96.09 சதவீதம் வீழ்ந்தது

 

 • ஐபோன் தயாரிப்பு (ஆப்பிள்) நிறுவனம் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

 

 • நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடாவின்; தொலைத்தொடர்பு சேவைப்பிரிவான ‘டாடா டெலி சர்வீசஸ்’ தொலை தொடர்பு சேவைத் துறையில் இருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறது.

 

 • காரைக்காலில் மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்குவதற்கு, புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் சார்பில் கடனுதவிகளை (ரூ.14,71,750) அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.

 

 • ஒன்பது பொதுத் துறை வங்கிகளின் புதிய செயல் இயக்குநர்கள் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவை
  • சென்டரல் பேங்க் ஆப் இந்தியா – பஜ்ரவ் சிங் ஷெகாவத்
  • பஞ்சாப் & சிந்த் வங்கி – கோவிந்த் என். டோங்ரி
  • இந்தியன் ஓவர்சிஸ் வங்கி – அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா
  • கனரா வங்கி – மடம் வெங்கட ராவ்
  • ஆந்திரா வங்கி – குல்பூஷண் ஜெயின்
  • தேனா வங்கி – ராஜேஷ் குமார் யதுவம்சி
  • பேங்க் ஆஃப் இந்தியா – சைதன்ய காயத்ரி சின்தப்பள்ளி
  • சிண்டிகேட் வங்கி – எஸ். கிருஷ்ணன்
  • பஞ்சாப் நேஷன் வங்கி – லிங்கம் வெங்கட் பிரபாகர்

 

 

 

Current Affairs

 

 

 National News

 

 • Gujarat, Maharashtra and Himachal Pradesh have cut value added tax (VAT) on petrol and diesel.

 

 • Gujarat on Oct 10 reduced VAT on petrol and diesel by 4% becoming the first state to give relief to customers from a recent surge in oil prices.

 

 • Rajasthan has become the first state to incorporate skill development programme in the higher education

 

 • Vice president M. Venkaiah Naidu inaugurated the third international conference on yoga in New Delhi.     
  • Theme : “Yoga for wellness”

 

 • India is second largest market for pharma, biotech workforce, a report by professional networking giant Linkedln has revealed.

 

 • Union information and Broadcasting Textiles Minister Smt Smirti Irani inaugurated several development scheme in Amethi

 

 • IIT kharagpur signs Memorandum of understanding with samsumg India for the setting up of a digital academy

 

 • India water week inaugurated by president Ram Nath Kovind

 

 • Theme for water week 2017: “Water and Energy for Inclusive growth”

 

 • Central government imposes anti-dumping duty on imports of steel wire rods from china.

 

Banking

 

 • The nation’s largest lender State Bank of India(SBI) is creating a 15,000 sqft innovation centre in Navi Mumbai investing around Rs.100 crore 

 

 

 

Economy

 

 

 • The international monetary fund(IMF) raised its global growth forecast for 2017-18 to a broad based recovery on Europe, China, Japan and the US.

 

 • IMF lower India’s growth forecast to 6.7% in 2017.

 

 

Sports

 

 • Dehradun, Uttarkhand will host its first ever Ranji Trophy cricket match.

 

 • Jeakson singh creates history by scoring India’s every goal in FIFA World Cup.

 

 

Appointments

 

 

 • Facebook Managing Director – “Umang Bedi” who joined “facebook India” in June 2016 has stepped down from his position.  After he quit, “Sandeep Bhusan” as interim MD.

 

 

 

Important Days

 

 • World Post Day: October 9
  • Theme: ‘Innovation, Integration and Inclusion’

 

 • World Mental Health Day: October 10.
  • Theme: ‘Mental health in the workplace’

 

 • India water week – 2017: October 10-14, 2017
  • Theme: Water and Energy for inclusive growth

 

 • BBBP Week=Beti Bachao Beti Padho Week – Oct 9th to Oct 14th 2017

 

 • International Girl Child Day: October 11
  • Theme: The Daughter of New India

Call Now
Message us on Whatsapp