October 02

Date:03 Oct, 2017

October 02

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 02

தேசிய செய்திகள்

 

 

 • ஓ.பி.சி உட்பிரிவை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவராக ரோகிணி (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 • ஐரின் என்று சுருக்கமாக அழைக்கப்படும் Indian Registry for Internet Names and Numbers  என்ற அமைப்பின் இணையங்கள் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

 

 • ஷீரடியில் (மகாராஷ்டிரா) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று(02-10-2017) திறந்து வைத்தார்.

 

 • சன்சத் ஆதர்ஷ் கிராம்’ திட்டத்தின் கீழ் திறந்தவெளியில், இயற்கை உபாதைகள் கழிக்காத பகுதியாக அம்பாலா கிராமம் (ஜிதேந்திர சிங் தத்தெடுத்த) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

 • உத்திபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம் பெறவில்லை.

 

 • தூய்மையை வலியுறுத்தி, விஷ்ணு (கோவை கல்லூரி) தயாரித்த குறும்படம், தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றது.

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • ஸ்வீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஜெப்ரி ஹால் (அமெரிக்கா), மிக்கேல் ராஸ்பாஷ் (அமெரிக்கா), மைக்கேல் யங் (மியாமி) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • இலங்கையில் புகைப் பிடிக்கும் பழக்கத்திலிருந்து ஆண்களை விடுவிக்க “ஐந்தாண்டு வேலைத் திட்டம்” சுகாதார அமைச்சகத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. 2030ம் ஆண்டு எடுக்கப்படும் விகித கணக்கில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதம் குறைக்கும் விகித்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த வேலைத்திட்டத்திற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்க பிரிட்டன் அரசு முன் வந்துள்ளது.

 

 • சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு பிரத்யேக ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்க உள்ளதாக “இளவரசி நூரா மகளிர் பல்கலைக்கழகம்” அறிவித்துள்ளது.

 

 • சீனா திபெத் மாகாண தலைநகர் லாசா மற்றும் நியின்சி ஆகிய 2 நகரங்களை இணைக்கும் வகையில் புதிய நெடுஞ்சாலை(409 கி.மீட்டர்) அமைத்துள்ளது. இதற்கு ‘வரி இல்லா எக்ஸ்பிரஸ் வே’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

 • ஜப்பான், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளிலும், சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுகளிலும் ஒலிபரப்பு சேவையைத் தொடங்க அகில இந்திய வானொலி திட்டமிட்டு வருகிறது.

 

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • “ஐல் ஆப் மேன்” செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

 

 • பிரான்சில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றில் பிரிட்டன் வீரர் சாஸ் டேவிஸ் வெற்றி பெற்றார்.

 

 • ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒன்பது நாடுகளுக்கு (ரஷியா, சீனா, ஆர்மேனியா, அஜர்பைஜான், பெல்லாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன்) அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (ஐடபிள்யுஎஃப்) தெரிவித்துள்ளது.

 

 • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

 

 • மலேசியாவில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் 15-வது சுற்றில் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி இந்திய அளவில் நடைபெற்ற மலையேறுதல் போட்டியில் 5,345 மீட்டர் (17,825 அடி) உயரமுள்ள் லடாக் சிகரத்தை (ஹிமாச்சலப் பிரதேசம்) ஏறி சாதனை படைத்துள்ளார்.

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக (ஜப்பானில் வெளியான அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2017 வரை உற்பத்தி செய்யப்பட்ட) 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறுகிறது.

 

 • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு (பிஎப் படிவம்) தகவல்களை தாக்கல் செய்யாத 700 பிஎப் டிரஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக “வருங்கால வைப்பு நிதி ஆணையம்” அறிவித்துள்ளது.

 

 • முதல் காலாண்டில் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வருவாய் 25 சதவீதம் சரிந்துள்ளதாக இந்தியா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

 

 • வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் சிம் கார்டை செயலிழக்க வைத்த பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு ஹைதராபாத் நுகர்வோர் நல வாரியம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

 

 • இந்தியாவின் கோடீஸ்வரர்கள் முதல் 10 இடங்களில் டீமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் தமானி 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

 • அதிக வேகத்தில் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கிய “எலான் மஸ்க்” பூமியின் எந்த மூலையில் இருந்தும் ஒரு மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவிடும் பயணிகள் வாகனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

 

 • வணிக ரகசியங்கள், தகவல்ளைத் திருடியதற்காக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.2,740 கோடி (42 கோடி டாலர்) அபராதம் அமெரிக்க நீதிமன்றம் விதித்தது.

 

 

 

 

Current Affairs  

 

 

National

 

 • “No helmet, No petrol” rule comes into force in Andhra Pradesh for two-wheelers riders.

 

 • Rajghat, the Samadhi of Mahatma Gandhi in Delhi gets Mahatma’s statue for the first time on occasion of the 148th birth anniversary of Gandhi
  • Height: 1.80 metre
  • Made up of bronze
  • Sculpted by Indian Sculptor, Mr. Ram Sutar
  • Cost : Rs.8.73 lakh
  • Famous message of Gandhiji “Be the change you wish to see” is inscribed on the front side of pedestal
  • Inaugurated by Vice-President Venkaiah Naidu

 

 • President Ram Nath Kovind Launches Incredible India 2.0 Campaign and ‘Adopt a Heritage’ project on the occasion of “World Tourism Day” which is celebrated on Sep.27 annually.  Also on 37th edition of World Tourism day, he launched “New Incredible India website”.

 

 

 • “Incredible India 2.0 Campaign “will be focusing on Specific promotional plans with greater emphasis to be given to social media.

 

 • “Adopt a Heritage Project” plans to entrust heritage sites to the public sector and private sector companies and individual for the development of tourist amenities

 

 

 • Cabinet approves bilateral MOU between India and Afghanistan on Technical Co-operation on police training and development.

 

 • India opens two border crossing points “Myanmar and Bangladesh”

 

 • Nepal and India conduct joint tiger census in November along the International border.

 

 • Karnataka unveils “Mathru Purna” scheme to feed 12 lakh pregnant women.

 

 

 • Gurugram based VVDN (Voice Video Data Network) in a partnership with Ireland’s embedded Downloads unveiled black chain Smartphone technology Bit Vault for Rs.75000.

 

 

 • All cities and towns in 5 more states Madhya Pradesh, Maharashtra, Chattisgarh, Jharkhand and Haryana declared open defecation free.

 

 

 • Andhra Pradesh C.M. “M. Chandrababu Naidu” launches “Swachh Andhra Mission”.  P.V. Sindhu chosen as brand ambassador.

 

 

 

International

 

 • China opens a 409 km new expressway linking Tibet’s provincial capital Lhasa with Nyingchi which is close to Arunachal Pradesh border.

 

 

Awards

 

 • Madurai’s Meenakshi temple named best Swachh Iconic place (Cleanest Iconic place) in India.  This award was given by the Central government as a part of the ‘Swachh Bharat Abhiyan’ (Clean India Mission).

 

 • Jeffrey C Hall, Michael Rosbash and Michael W Young awarded 2017 Nobel Prize in Medicine.

 

 

Sports

 

 • Female Assistant referrers (7) have been chosen by FIFA U-17 world cup for the first time for a men’s tournament.
  • Host Country: India
  • Date: 6th – 28th Oct 2017

 

 

Days

 

 • International Day of Non-Violence – Oct 2

 

 • World Habitat Day – Oct 2 (1st Monday of every October)
  • Theme: Housing Policies: Affordable Homes.

 

 

Call Now
Message us on Whatsapp