November 23

Date:23 Nov, 2017

November 23

 

We Shine Daily News

நவம்பர் 23

தமிழ்

 

தேசிய செய்திகள் 

 

 

 

 • 15-ஆவது நிதிக்குழுவை அமைக்க (வருவாய் மற்றும் வரிப் பகிர்வு சார்ந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

 • அகில இந்திய 83வது கன்னட இலக்கிய மாநாடு மைசூரில் துவங்குகிறது. இதை சித்தராமையா (முதல்வர்) துவக்கி வைக்கிறார்.

 

 • குழந்தைகளின் உரிமைக்காக கனகா (17- சேரி) “குழந்தைகள் தின விழாவில்” பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

 

 • ஹிந்து மதத் தலைவர்கள், 3,000 சாதுக்கள் பங்கேற்கும் “தரம் சன்சத்” என்ற மாநாடு உடுப்பியில் தொடங்குகிறது.

 

 • 24 காரட் தங்க நகைகளுக்கும் தர மதிப்பீடுகளை வகுக்குமாறு இந்திய தர ஆணையத்துக்கு (பிஐஎஸ்) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

உலக செய்திகள்

 

 

 • ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளை ரத்து செய்யும் (வீட்டோ) அதிகாரத்தை பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்த அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கிறது.

 

 • ஹார்வர்டு (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு சோமசுந்தரம் (கோலாம்பூர்) ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

 

 • இரட்டை கோபுர தாக்குதல் (உலக வர்த்தக மையம் – அமெரிக்கா) தொடர்பான வழக்கில் கட்டிட உரிமையாளருக்கு ரூ.625 கோடி இழப்பீடு வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் “ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்” என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர்) பெற்றுள்ளார்.

 

 • அடுத்தாண்டு முதல் கிரான்ட் ஸ்லாம்களில், அரங்குக்குள் நுழைந்து, ஏழு நிமிடங்களுக்குள் விளையாடத் தயாராகவிட்டால் 20,000 ஐக்கிய அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

 

 • ஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா, ஜோதி குலியா, நேஹா யாதவ் மற்றும் அனுபமா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • அவுஸ்திரேலிய தேசிய கால் பந்தாட்ட அணியின் பயிற்றியாளர் “இஞ் பொஸ்டாகுகு” தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

 

 • 2014 ஆம் ஆண்டு சோச்சி (ரஷ்யா) நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஊக்க மருந்து உட்கொண்ட : டிரெட்யாகோவ், நிகிடினா, ஒர்லோவா, பொடிலிட்சினா ஆகியோருக்கு ஒலிம்பிக் சம்மேளனம் வாழ்நாள் தடைவிதித்துள்ளது.

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்து திருத்தியமைப்பதற்காக சிறப்புக் குழுவை (அரவிந்த் சுப்ரமணியன் – நிரந்தரப் பிரதிநிதி) மத்திய அரசு அமைத்துள்ளது.

 

 • நேரடி விற்பனை துறைக்கான மாதிரி விதிமுறைகளை, சிக்கிம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது

 

 • இந்தியாவில், 2018ல் நிதிசாரா நிறுவனங்களின் கடன் தகுதி மேம்படும், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீளும் என அமெரிக்காவைச் சேர்ந்த மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 

 • ராஜ்நாத்சிங் (மத்திய உள்துறை அமைச்சர் – இந்தியா) 3 நாள் பயணமாக வரும் 27 ம் தேதி ரஷ்யா செல்கிறார்.

 

 • நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் “ரணில் விக்கிரமசிங்கே”, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார்.

 

 • இஸ்ரேல் பிரதமர் “பெஞ்சமின் நேதன்யாகு” இந்தியாவில் ஜனவரி 14 முதல் 4 நாள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.

 

 

இறப்பு செய்தி

 

 • அசாமின் பிரபலமான நடிகர் பிஜூ ஃபுகான் காலமானார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • வங்காள விரிகுடா கடலில் இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானத்தை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது.

 

 • ஜியோமி நிறுவனம், ஹை-பாட் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, செல்லிடப்பேசிக்கு மின்னூட்டம் அளிக்க உதவும் ‘பவர் பேங்க்’ தயாரிப்பு ஆலையை இந்தியாவில் அமைக்க உள்ளது.

 

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூன்றே நாட்களில் தயாரிக்கக்கூடிய, சிறிய வகை ராக்கெட்டுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

 

 • சிம் கார்டே இல்லாத அலைபேசி வழியாக இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்க திட்டமிட்டுள்ளது.

 

 • 2018-ல் பேஸ்புக் வாட்ச் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

 

ஒப்பந்தம்

 

 

 • பெங்களுருவில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு காஸ் – பைப் இணைப்பு வழங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் கெய்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 

 

புதிய நியமனம்

 

 • ஜிம்பாவேயின் புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எமர்சன் நங்கக்வா வெள்ளிக்கிழமை (25-11-2017) பதவியேற்க உள்ளார்.

 

 

English Current Affair

National News 

 

 • Cabinet approves establishment of 15th Finance Commissions which will assess the tax resource of the nation and suggest a formula for their devolution among states.

 

 • The cabinet has given approval to the new scheme called ‘Mahila Sakthi Kendra’ which will empower rural women through community participation to create an environment in which they realize their full potential.

 

 • The union cabinet approved India’s membership for European Bank for Reconstruction and Development (EBRD) a more which will help in obtain funding in various areas including service and Manufacturing.

 

 • The government constituted a task force for redrafting the 50yr old income tax law.

 

 • Face book Aims to train 15 lakh Indians on Digital skills by 2020.

 

 • India successfully tests worlds fastest supersonic ‘Brahmos’ from the Indian Airforce frontline fighter aircraft Sukhoi-30MK1 against a sea based target in the Bay of Bengal.

 

 • Rajasthan government has launched ‘Dishari’ an educational mobile application that provides free study materials for youths preparing for competitive examinations.

 

 • Union Agriculture minister Radha Mohan Singh has sent a proposal to UN for declaring 2018 as “Year of Millets” to raise awareness among consumers, policy makers industry and research sector.

 

 • The union Ministry of Health and family Welfare observed vasectomy fortnight to raise awareness about male sterilization and to promote men participate in family planning.

 

 • Conference of Commanders of Eastern Air command commence shilling in Meghalaya.

 

 • Andhra Bank Launches Sitaramayya — Self Business Group (PS-SBG) to encourage Enterpreneurship.

 

 • Jp Nadda inaugurates the 1st world conference on Access to medical products in New Delhi.

 

Banking and Finance

 

 • The Shanghai-based Brics New Development Bank (NDB) has approved two infrastructure and sustainable development projects in India and Russia with loans of $400 millions.

 

 • USA president Donald Trump and putting agree to support UN in Syrian peace process to resolve the seven year long Syrian civil war.

 

Appointments and Resigns

 

 • Robert Mugabe Resigns as Zimbabwe’s president, Ending 37 year Rule after lawmakers began impeachment proceedings against him.

 

 • Zimbabwe’s former vice president Emmerson Mnangagwa sworn in as president.

 

Sports

 

 • AIBA World Boxing championship at Quwahati, Astha Pahwa entered quarterfinals, while Sashi Chapra beat bulgaria’s Melis Yonuzova in the opening round 69 kg category to reach quarter finals.

 

Obituary

 

 • Assam’s prominent film actor Biju phukan has passed away.

 

National

 

 • Telangana makes Telugu compulsory till Intermediate, including CBSE and ICSE schools from next academic year.

 

Business

 

 • Paytm has acquired stake in online loans firm creditMate to create a loan management system.

Call Now
Message us on Whatsapp