November 03

Date:03 Nov, 2017

November 03

 

We Shine Daily News

தமிழ்

  நவம்பர் 03

தேசிய செய்திகள்

 

 

 • மத்திய பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் பட்டியலை வெளியிட்டது. இதில் கோவா முதலிடத்திலும், கேரளா 2வது இடத்திலும் உள்ளது. தமிழ்நாடு 11வது இடத்தில் உள்ளது

 

 • மத்திய அரசு ஊழியர்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு இருமடங்கு(ரூ. 54000) உயர்த்தியுள்ளது.

 

 • ஹஜ் மானியத்ததை அடுத்த ஆண்டு முதல் நிறுத்திவிடவும் அதே வேளையில் சிறுபான்மையினரின் கல்வி மற்றும் நலவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • இந்திய இராணுவத்தில் முதல் முறையாக நாட்டு நாய்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னட் ஜஸ்டரின் நியமனத்தை அமெரிக்க சென்ட் சபை உறுதி செய்துள்ளது

 

 • 2017ம் ஆண்டுக்கான சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 108வது இடத்தில் உள்ளது

 

 • உலகில் மிகவும் செல்வாக்கான பெண்கள் பட்டயலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் ஏஞ்சலா மெர்கல்(ஜெர்மனி பிரதமர்) முதலிடத்தில்(7 ஆண்டுகள்) உள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் 32வது இடத்திலும் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97வது இடத்திலும் உள்ளனர்

 

 • மறைந்த பிறகும் அதிக அளவில் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இதில் மைக்கேல் ஜாக்சன் முதலிடத்தில்(75 மில்லியன் அமெரிக்க டாலர்) உள்ளார்

 

 • ஜப்பானைச் சேர்ந்த பியாலா இன்க் நிறுவனம் ‘வேலை நேரத்தில் புகைப்பிடிக்கச் செல்லாத ஊழியர்களுக்கு’ ஒரு ஆண்டுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது

 

 • ஷார்ஜாவில் உள்ள எக்ஸ்போ செண்டரில் (நவம்பர் 1ம் தேதி) 36வது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது

 

 • பாகிஸ்தானில் குருநானக் ஜெயந்தியை(கார்த்திக்கை மாதம் பௌர்ணமி) முன்னிட்டு சீக்கிய மதக்குரு குருநானக் பிறந்த இடத்திற்கு செல்ல விண்ணப்பித்த 2600 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கியுள்ளது

 

 • இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கிடையேயான 14 நாள் கூட்டு ராணுவப் பயிற்சி ஹிமாச்சலப் பிரதேசத்தில் நேற்று(நவம்பர் 02) தொடங்கியது

 

 

மாநில செய்திகள் 

 

 

 • தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றை சாளர முறையை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

 

 • மழைக்காலங்களில் ஆற்றுப்பாலங்களில் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்ய நவீன ரேடார் சென்சார் கருவியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இந்த கருவி சோதனை முயற்சியாக சென்னையில் 6 ஆற்றுப்பாலங்களில் நிறுவப்பட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ‘ககன்நரங்’ வெள்ளிப்பதக்கம் வென்றார்

 

 • புஜரா, உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்துவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்

 

 • தேசிய சீனியர் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ‘கேரம் போட்டியில்தமிழக அணிகள்(ஆடவர் மற்றும் மகளிர்) வெற்றி பெற்றது

 

 • ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒலிம்பிக் போட்டியின் பனிச்சறுக்கு பிரிவில் தங்கம் வென்ற ரஷிய வீரர் அலெக்சாண்டர் லெகோவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 

 • விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பிய ‘கெப்ளர் டெலஸ் கோப்’ மூலம் உயிரினங்கள் வாழத் தகுதியற்ற 20 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • கனடா – இந்தியா கூட்டு ஆராயச்சி மையம் நிலநடுக்கத்தில் கட்டிடங்களை பாதுகாக்கும் புதிய கான்கிரீட் பூச்சை(சுற்றுச்சூழல் பாதுகாப்பு டக்டைல் சிமெண்ட்டிசியஸ் காம்போசிட்) உருவாக்கியுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக அஜய் பிஸாரியா நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • பிரிட்டனின் புதிய பாதுகாப்புதுறை மந்திரியாக கேவின் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தமிழ்நாடு வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளராக ஆர்.மாஷல் ஆன்டனி லியோ நியமனம் செய்யப்பட்டார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • சிண்டிகேட் வங்கி செயல் இயக்குநராக எஸ்.கிருஷ்ணன் பொறுப்பேற்றார்

 

 • வால்மார்ட் நிறுவனம் முதன் முதலாக மும்பை பிந்த்வாடியில் விற்பனை மையம் நிறுவியுள்ளது

 

 • இலங்கையில் மிக உறுதியான வங்கியாக(2017) ‘கொமர்ஷல் வங்கி’ தெரிவு செய்யப்பட்டுள்ளது

 

 

Current Affairs

National News

 

 • The president of India Shri. Ram Nath Govind inaugurated the 2017 world congress of Mental health in New Delhi

 

 • The Inter –State council which is mandated to investigate and advise on disputes between states has been reconstituted with Prime Minister Narendra Modi as its chairman

 

 • According to a joint study by ASSOCHAM and EY, India is home to the largest number of malnourished children in the world

 

 • The restored ‘Royal Opera House’ located at Mumbai has received the Award of merit from the 2017 UNESCO Asia – Pacific awards for Cultural heritage Conservation

 

 • Odisha development Authority (ODSA)  and Singapore bared education services signed a MOU for skill development in the state

 

 • Walmart stores has opened a fulfillment centre or ‘dark store’ in India one of its first globally in an effort to speed up operations in the country.

 

 International News

 

 • “FAKE NEWS”, a term heavily popularized by US president Donald Trump has been named the ‘word of the year’ by Collins dictionary

 

Banking

 

 • AU Small Finance Bank received approval from Reserved bank of India(RBI) to operate as scheduled Commercial Bank

 

 • ICICI Bank announced the launch of India’s first vice –based international remittance service to enable (NRIS) to send money to any bank in India

 

Sports

 

 • Indian Ace Shuttler Srikanth Kidmabi has risen to the Zenith of his career as he established himself as world number 2 is the latest BWF men’s singles

 

 • Indian Wrestler Geeta phogat who won India’s first ever gold medal in women’s wrestling has won a gold medal at the All India Police Championship 2017.

 

Appointment

 

 • Ajay Bisaria has been appointed as the next High Commissioner of India to the Pakistan.

 

 • Neelamani N.Raju  is named as Karnataka’s first woman Director general and Inspector general of Police.

 

Recognitions

 

 • CEO of ICICI Bank Chanda Kochhar was named the most powerful woman in India as she ranked 32nd in world’s 100 most powerful women list by forbes

 

Call Now
Message us on Whatsapp