December 18

Date:18 Dec, 2017

December 18

 

We Shine Daily News

டிசம்பர் 18

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலக அளவில் எந்த நாட்டை சேர்ந்த மக்கள் அதிக அளவில் புலம்பெயர்ந்துள்ளனர் என்ற கணக்கெடுப்பை ஐ.நா. வெளியிட்டது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

 

 • முதல், பயணிகள் ஜெட் விமானத்தை (சி1919) உருவாக்கி சீனா சாதனைப் படைத்துள்ளது

 

 • பிலிப்பைன்ஸை கய்-தக் புயல் தாக்கியுள்ளது

 

 • பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற நினைவிடத்தில் முதல் உலகப்போரில் உயிரிழந்த பிரான்ஸ் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி(16-12-2017) செய்யப்பட்டது

 

 • ஹோண்டுராஸ் அதிபராக ‘ஆர்லேண்டா ஹெர்னாண்டஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • பிரான்காயிஸ் கபார்ட்’ (பிரான்ஸ்) கடல் வழிப் பயணமாக 45 நாட்களில் உலகை சுற்றி வந்து சாதனைப் படைத்துள்ளார்

 

 • சுவிட்சர்லாந்தில் ஜுபின் என்ற புயல்’ தாக்கியுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதார் எண் வழங்காத ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது

 

 • 2வது பன்னாட்டு புத்தக கண்காட்சி புதுச்சேரியில் டிசம்பர் 22ம் தேதி தொடங்குகிறது

 

 • ஆந்திர மாநிலத்தில் டிசம்பர் 27ம் தேதி முதல் 1.40 கோடி வீடுகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்

 

 • விமான நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை போல் இரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் பிளக்சி பேர் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 • ஜோகாபாத்(சத்தீஸ்கர்) கிராமத்திற்கு 71 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

 

 • சோவியத் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட ‘எம்.ஐ. 18’ என்ற ஹெலிகாப்டர்களின் சேவை நிறைவு பெற்றது. இந்திய விமானப்படை எம்.ஐ. 18 ஹெலிகாப்டர்களின் சேவையை விலக்கிக் கொண்டது

 

 • 70 கோடி வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்கள் இதுவரை இணைக்கப்பட்டிருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது

 

 • 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது

 

 • மதுராவில் (உத்தரபிரதேசம்) ‘பகவத் கீதை ஆராய்ச்சி’ நிறுவனத்தை மாநில அரசு அமைக்க  உள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • காமன்வெல்த் மல்யுத்த போட்டியில்  சுஷில்குமார் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்

 

 • உலக சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்

 

 • உக்ரைனில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய ஜுனியர் மகளிர் 8 பதக்கங்களை(4 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றுள்ளனர்

 

 • இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது

 

 • கொல்கத்தாவில் நடைபெற்ற பிரேம்ஜித் லால் இன்விடேஷனல் டென்னிஸ் தொடரில் ராம்குமார் ராமநாதன்(தமிழகம்) சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை எட்டிய
  வீரர்கள் பட்டியலில் தவான் (இந்திய கிரிக்கெட் அணி) இரண்டாவது இந்திய வீரர்  என்ற சாதனை படைத்துள்ளார்

 

 • 67வது மாநில சீனியர் கைப்பந்து போட்டியில் ஐ.ஒ.பி அணி (இந்தியன் ஓவர்சிஸ் வங்கி) சாம்பியன் பட்டம் வென்றது

 

 

புதிய நியமனம்

 

 • மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) உறுப்பினராக ஸ்மிதா நாகராஜ்(தமிழ்நாடு) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 18 – சர்வதேச குடியேறுபவர்களின் நாள், தேசிய சிறுபான்மை உரிமைகள் தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2017ம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்துள்ளது

 

 • மாநிலங்களுக்கு இடையேயும், ஒரே மாநிலத்திற்குள்ளும் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான மின்னணு அடிப்படையில் பில் வழங்கும் வசதி அடுத்த ஆண்டு ஜுன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அருண் ஜெட்லி(மத்திய நிதி அமைச்சர்) தெரிவித்துள்ளார்

 

 • ரியல் எஸ்டேட் திட்டங்களை கையகப்படுத்த ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் ரூ.1,600 கோடி முதலீடு செய்ய உள்ளது

 

 • பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை உயர்த்துவதற்காக நடப்பு ஆண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் முதலீடு கிடையாது சிறப்பாக செயல்படும் வங்கிகளில் மட்டும் முதலீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • India is the Second largest producer of horticultural crops and Fruits after China

 

 • Preparations are on in full suing across Haryana for the earthquake mock exercise to be held on 21,2017 across the State

 

 • International Herbal Fair was started in Bhopal from Dec 14 and it is inaugurated by Union Minister from Environment, Forest and Climate change Dr Harsh Vardhan

 

 • A research institute for the study of the ‘Bhagavad Gita’ will be soon set up by Utter Pradesh government in temple town Mathura

 

 • Jokapatha Village, a tribal village is Chhattisgarh’s Balrampur district has got electricity connection for the first time

 

 • Samsung India has entered into a partnership with UNESCO MGIEP (Mahatma Institute of Education for Peace and Sustainable Development) to launch 360 video and virtual Reality(VR) content of two magnificent Indian heritage sites the sun Temple in Konark and Taj Mahal in Area 

 

International News

 

 • Switzerland unveils world’s steepest funicular railway lies 1,300 meters above sea level in Central Switzerland

 

Appointments

 

 • Czech Billionaire businessman Andrej Babis was appointed prime minister after his ANO Party came first in an October election

 

 • Shri Ravindra Jaiswal has been appointed as the next ambassador of India to Sudan

 

 • Shri Pradeep Kumar Gupta has been appointed as the next ambassador of India to the Republic of Mali

 

Sports

 

 • PV Sindhu won Silver at the Dubai World Super Series Finals after losing a Titanic contest against Japan top reed Akane  Yamaguchi

 

 

 

Call Now
Message us on Whatsapp