December 13

Date:13 Dec, 2017

December 13

 

We Shine Daily News

டிசம்பர் 13

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சீனாவில், பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகன விற்பனையை 2025ம் ஆண்டு முதல் நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது

 

 • கலிபோர்னியாவில் (அமெரிக்கா) ‘தாமஸ்காட்டுத் தீ மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 • சிங்கப்பூரில் மக்கள் அரசு போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக ‘மின்சார கார் பகிர்வு திட்டம்’ இன்று தொடங்கப்பட்டுள்ளது. ‘ப்ளுஎஸ்ஜி’ என்ற நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 •  உலகில் முதல் மின்சார கார் பகிர்வு திட்டம் பாரீஸ், 2வது மின்சார கார் பகிர்வு திட்டம் சிங்கப்பூர்

 

 • ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதிக்குழு(யூனிசெப் அமைப்பு) உலகம் முழுவதும் இணையதளம் பயன்பாடு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், உலக அளவில் இணையதள பயன்பாட்டில் பெண்களை விட  ஆண்கள் 12 சதவீதம் முன்னிலை வகிக்கின்றனர் மற்றும் மூன்றில் ஒரு பங்கை சிறுவர்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

 

 • அமெரிக்க விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் படி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவிற்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • சாலை விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனியார் மருத்துமனைகளில் அரசின் சார்பில் சிகிச்சை அளிக்கும் புதிய திட்டத்தை டெல்லி மாநில அரசு உருவாக்கியுள்ளது 

 

 •  நாடு முழுவதும் இது வரை 14 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

 • 2018ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான வினாத்தாள் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது

 

 • இரயில்வேயில் ஓய்வுபெற்ற பிறகு, தொகுப்பூதியத்தில் பணியாற்றுவதற்கான வயது வரம்பு 62ல் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று ‘உதய் அமைப்பு’ தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஆடவர் அணி 6வது இடத்தில் உள்ளது. இந்திய மகளிர் அணி 10வது இடத்திலும் உள்ளது.

 

 • 2021ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது

 

 • உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் போட்டி துபாயில் இன்று(டிசம்பர் 13) தொடங்குகிறது

 

 • ஐஐடி அணிகள் இடையேயான 52வது விளையாட்டு போட்டி, சென்னை ஐஐடி வளாகத்தில் டிசம்பர் 15ம் தேதி தொடங்குகிறது 

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • உலகிலேயே முதன் முதலாக காற்று சுத்திகரிப்பானை (மோல்குலே) ‘யோகி கோஸ்வாமி’ (பெங்களுரு) கண்டுபிடித்துள்ளார். 2017ம் ஆண்டிற்கான சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் இந்த ‘மோல்குலேவும்’ இடம் பிடித்துள்ளது

 

 • சூரிய மண்டலத்தில் ‘சுருட்டு வடிவில் விண்கல்’ ஒன்று பூமிக்கு அருகில் வந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • ‘கார்டோசாட் 2 எஃப்’ செயற்கைக்கோள் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது

 

விருதுகள் 

 

 

 •  பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ராவுக்கு ‘அன்னை தெரசா விருது’(சமூக நிதி பணிக்காக) வழங்கப்பட்டுள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 13 – பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்(16வது)

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • லெகடும் இன்ஸ்டிடியூட்(லண்டன்) வெளியிட்டுள்ள வளமான நாடுகள் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது

 

 • அனைத்திந்திய அளவில் 10வது ‘பிளாஸ்டிக் இந்தியா 2018’ வர்த்தக கண்காட்சி பிப்ரவரி 7ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது

 

 • உலக அளவில் 4ஜி சேவை மற்றும் இணைய பயன்பாடு குறித்த ஆய்வை ஓக்லா என்ற நிறுவனம் வெளியிட்டது இதில் இந்தியா 109வது இடத்தில் உள்ளது. பிராப்பேண்ட் எனப்படும் கம்பி இணைய இணைப்பு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 76வது இடத்தில் உள்ளது

 

 •  கூடுதலாக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ள நிறுவனங்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது

 

 • நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது

 

 • நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.88 சதவீதமாக உயர்ந்துள்ளது 

 

 

English Current Affairs

 

National News

 

 • India to host 3rd Annual meeting of Board of governors of Asian infrastructure Investment Bank at Mumbai. Theme: Mobilizing finance for infrastructure 

 

 • The 14th Inclusive Finance India Summit began in New Delhi

 

 • Road Transport and Highways minister Nitin Gadkari said the government is aiming to construct 40 km of road every day  in the country next year

 

 • Utter Pradesh and Maharashtra tops in highest number of Cyber Crimes

 

 • The Finance minister holds his 5th pre – Budget consultation meeting with the leading economists in New Delhi

 

 • Union government Fixed Rs.2,890 per grams as the price of new series of Sovereign gold bonds

 

 • Rajasthan, First in India to offer e-mail ID’s in Hindi   

 

 • The second Un world Tourism Organization/UNESCO world conference on Tourism and culture was held in Muscat, capital city of Oman

 

Science and Technology

 

 • Researchers at the University of Illinois have announced an exciting finding – The discovery of a new form of matter excitonium.

 

Important Days

 

 • Universal Health Coverage Day on 12th December, 2017

 

Economy

 

 • Global Investment bank Nomura has predicted India’s economy to register a 7.5% growth rate in 2018

 

 • India ranks 100th on the list of prosperous countries among 149 countries

 

 • Norway heads the global prosperity Index followed by New Zealand  

Business

 

 • Apple announced that it has acquired song recognition company Shazam. The deal is worth $ 400 million

 

 • The Asian Development Bank has announced and approved USD 346 million to Karnadaka to build their upgradation project of highways to the state government

 

Awards

 

 • Priyanka Chopra receives Mother Terasa Memorial award for Social Justice

 

 • India bags 21 medal including 6 gold, 8 silver and 7 Bronze at Asian Airgun shooting championships

 

Appointments

 

 • Nakul Chopra elected as the next chairman of  BARC India

 

International News

 

 • Sri Lanka has officially handed over Hambantota port to China for a 99yr lease   

   

Call Now
Message us on Whatsapp