December 09

Date:09 Dec, 2017

December 09

 

We Shine Daily News

டிசம்பர் 09

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க இங்கிலாந்து ஒப்புதல் அளித்துள்ளது

 

 • 2018ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நிறம் ‘கத்திரிப்பூ(பர்பில்) என அமெரிக்காவின் ‘பேண்டான் நிறுவனம்’ அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நிறம் பச்சை என்பது குறிப்பிடத்தக்கது

 

 • அமெரிக்காவின் சாப்பாடு வகைகளில் முக்கிய உணவாக கருதப்படும் ‘நஹ்ஹட்ஸ்’ என்னும் உணவு வகை இந்த ஆண்டு (2017) டிவிட்டரில் அதிக அளவில் டிவிட் செய்யப்பட்ட பகுதியில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ‘பாரக் ஒபாமாவின்’ நிற பாகுபாடு குறித்த டிவிட் 2ம் இடத்தில் உள்ளது

 

 • 2017ம் ஆண்டிற்கான சி.என்.என். ஹீரோ விருதுக்கு(அமெரிக்கா) இந்திய வம்சாவளியை சேர்ந்த ‘சமீர் லகானி’ மற்றும் ‘மோனா படேல்’ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

 

 • இரவில் பொழுதை கழிப்பதற்கான(Night Out) சிறந்த நகரமாக ஜெர்மனியின், ஹாம்பர்க்(உலகளவில்) நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 • Fasnacht என்னும் திருவிழாவை ‘சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய கலாச்சார விழா’ என யுனெஸ்கோ அறிவித்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • அறுபது நாடுகள் கலந்து கொள்ளும் 22வது சர்வதேச திரைப்பட விழா திருவனந்தப்புரத்தில்(கேரளா) நேற்று (டிசம்பர் 08) தொடங்கியது

 

 • குஜராத் மாநில தேர்தல் அறிக்கை‘சங்கல்ப பத்ரா 2017’ நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளார்

 

 • பாண் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது

 

 • சென்னையில் இயங்கி வரும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, முழு அதிகாரம் பெற்ற ‘ஒற்றை உறுப்பினர் கொண்ட அமர்வு’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

 • திருப்பூரில் ‘மூன்றாவது கண்’ எனப்படும் சிசிடிவி கேமரா செயல்பாட்டை போலீஸ் கமிஷனர் நாகராஜன் துவக்கி வைத்தார்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • 10வது  ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நாளில் 5 பதக்கங்களை(4 வெள்ளிப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கம்) இந்திய வீரர்கள் பெற்றுள்ளனர்

 

 • இளையோர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.6.50 லட்சமும் வெண்கலம் வென்றவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்துள்ளார்

 

 • எஃப்ஐஏ உலக மோட்டார் விளையாட்டு கவுன்சிலுக்கான 14 உறுப்பினர்களில் ஒருவராக இந்தியாவின் ‘கௌதம் சிங்கானியா’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • தேசிய ஜுனியர் கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வடுவூரை சேர்ந்த (திருவாரூர்) ‘ஜெயப்பிரகாஷ்’ தேர்வு செய்யப்படுள்ளார்

 

 • 88 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் டிசம்பர் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய புதிய ஜெல்லை(மீட்ரோ) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 09 – சர்வதேச ஊழல் எதிப்பு தினம்

 

 • டிசம்பர் 09 – ‘ஹொமாய் வையரவெல்லாவின்’(நாட்டின் முதல் பெண் புகைப்பட நிருபர்) பிறந்த நாள்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • உலகிலேயே முதல் முறையாக ட்விட்டரை பயன்படுத்துவதற்கான ஏ.ஆர் மொபைல் அப்ளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • ஜனவரி 1 முதல் (OTB)ஓடிபி மூலம் ஆதார் எண்னை மொபைல் எண்ணுடன் இணைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • ஏர் இந்தியா நிறுவனம் நடைமுறை மூலதனத் தேவைகளுக்காக ரூ.1,500 கோடி கடன் திரட்ட திட்டமிட்டுள்ளது

 

 • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வாகன விற்பனை நவம்பர் மாதத்தில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது

 

 • தனியார் துறையை சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 91 சதவீதம் சரிவடைந்துள்ளது

 

 • நியர்பை மற்றும் லிட்டில் இன்டர்நெட் நிறுவனங்கள் இணைந்துள்ளது. இந்த புதிய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ‘பேடிஎம்’ நிறுவனம் பெற்றுள்ளது

 

 

English Current Affairs

National News

 

 • India has been declared free from infective trachoma which is a contagious bacterial infection of the eye.

 

 • President Ram Nath Govind inaugurated the Naval Maritime Aircraft Museum in Visakhapatnam, Andhra Pradesh.

 

 • A public procurement portal ‘MSME Sambandh’ was launched by Shri Giriraj Singh, Minister of state (Independent Charge) for MSME in New Delhi.

 

 • The Waste Management system being implemented in Kerala’s coastal town of Alappuzha, often called ‘the Venice of East’ has been recognized by UNEP as one of the five models across the world for fighting the pollution menace.

 

 • Kacheguda Railway Station under the South Central Railway (SCR) has earned the unique distinction of being the first energy efficient ‘A1 category’ Railway station

 

 • The first International Conference of sports Medicine and Sports Science SAICON 2017 was inaugurated in New Delhi.

 

 • India has been admitted as the 42nd member of the Wassenaar Arrangement, a global export control regime.

 

 • According to the World Energy Access report released by the International Energy Agency (IEA) puts India on course to achieving access to electricity for all in the early 2020.

Economy

 

 • According to global financial services major Morgan Stanley, the Indian Economy is expected to witness cyclical growth recovery with 6.4% to 7.5% in 2018.

Sports

 

 • Visually impaired swimmer Kanchanamala Pande scripted history by becoming the first Indian to win gold at the world Para Swimming Championship takes place in Mexico.

Obituary

 

 • Noted South Indian Music director Adithyan has passed away following a Kidney problem

 

 • Senior Tamil journalist and humourist Ja Ra Sundaresan has passed away.

Awards

 

 • Dangal Movie has won the Best Asian Film at the seventh Australian Academy of cinema and Television Arts (AACTA) 2017.

Call Now
Message us on Whatsapp