August01

Date:01 Aug, 2017

August01

                                                                                                                                                                                                   

                                               We Shine Daily News

                                                           தமிழ்

                                                         Mf];l; 01

                                                   தேசிய செய்திகள்

 • சிறு வியாபாரிகள் : சரக்கு மற்றும் சேவை வரியின்(ஜிஎஸ்டி) கிழ் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

 • மாநிலகங்கள் அவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் வினய் டி. டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

 

 • பான் எண்ணுடன் ஆதார் எண்ணை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு நீட்டியுள்ளது.

 

 • மலேசியாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விஜிபி தமிழ் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர் உருவச் சிலை நிறுவப்பட உள்ளது என விஜிபி தமிழ் சங்கத்தின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தெரிவித்துள்ளார்.

 

 • கப்பலில் இருந்து சிந்தும் கச்சா எண்ணெய் படலத்தை சுலபமாகவும் விரைவாகவும் நீக்கும் “ஹைட்ரோபோபிக்” உறிஞ்சியை திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கழக, கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஐஐஎஸ்இஆர்) மைய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

 

 • ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் (2016-2017) 5.12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • குறிப்பிட்ட காலத்கெடுக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று வருவாய்த் துறை செயராளர் ஹஸ்முக் ஆத்யா தெரிவித்துள்ளார்.

 

 • ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களை பொது விநியோகத் திட்டத்தில் இருந்து விலக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவது இன்னும் ஒரு மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறியுள்ளார்.

 

                                                                                                                 பன்னாட்டு   செய்திகள்

 • அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் இயக்குநர் ஸ்காராமுசி பதவி விலகினார்.

 

 • வடகொரியாவின் அணு ஆயுத விவகாரமும், சீனா,அமெரிக்கா இடையேயான வர்த்தகமும் வேறு வேறு களங்கள், இவை இரண்டையும் இணைத்து அமெரிக்கா பிரச்சனையாக்கக் கூடாது என்று அமெரிக்காவிடம் சீனா கேட்டு கொண்டது.

 

 • பிரிட்டனை சேர்ந்த “ஹென்னஸி” கண்பார்வையில்லாதவர், இவர் கேம்பிரிட்ஜி பல்கலைக்கழகத்தில் முதல்வகுப்பில் சாதனைப் படைத்துள்ளார்.

 

 • உலக தாய்பால் வாரம் : ஆகஸ்ட் 1 – 7ம் தேதி

 

 • ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான ஊதிய வித்தியாசத்தை சரி செய்யவேண்டும் என்று பேஸ்புக் மூத்த அதிகாரி ஷெரில்  சாண்ட்பர்க் கூறியுள்ளார்.

 

 • உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளும் வடகொரியாவுடன் இனி பேச்சு வார்த்தை நடத்தப்படமாட்டாது, என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 123 சதவீதம் அதிகரித்;துள்ளது.

 

                                                                                                                 விளையாட்டு செய்திகள்

 • 91-வது எம்.சி.சி. முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5வது நாளாக நேற்று(31.07.2017) நடந்த ஒரு ஆட்டத்தில் ஹாக்கி பெங்களுரு அணி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அணியை வீழ்த்தியது, மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே அணி, ஹாக்கி தமிழ்நாடு அணியை வீழ்த்தியது.

 

 • மாநில அளவிளான பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று(01.08.2017) தொடங்கி, ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கிறது.

 

 • நைஜிரியாவில் நடைபெற்ற லேகோஸ் ஓபன் இன்டர்நேஷன்ஸ் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராகுல் யாதவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முதலிடத்தில் உள்ளார்.

 

 • உலக சதுரங்க போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை பி.வி. நந்திதாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

 

 • நியூசிலாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மிண்டன் தொடர் இன்று(01.08.1017) தொடங்குகிறது, இதில் அமெரிக்க ஓபன் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை வென்ற இந்திய வீரர் பிணராய் கலந்து கொள்கிறார்.

 

 • மகளிர் யுரோ கால்பந்து போட்டியில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் அணியை, இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதும் ரத்து செய்யவும், மானிய விலை சிலிண்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 உயர்த்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • பிளிப்கார்ட் நிறுவனத்துடனான இணைப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்நாப்டீல் நிறவனம் தெரிவித்துள்ளது.

 

 • தமழ்நாட்டில் உள்ள சேலம் உருக்காலையை பகுதியளது பங்கு விலக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உருக்காலை அமைச்சர் சவுந்திரி பிரேந்தர் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 12 முதல் 18 மாதங்களில் 6.5 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் கூறியுள்ளது.

 

 • சென்னை முருகப்பா குழுமத்தை சேர்ந்த கார்பரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகரலாபம் ரூ.40 கோடியாக உள்ளது.

 

 • தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திராவின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.798.6 கோடியாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியானது பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றாதக் காரணத்தால், ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.

 

 • பாரத் ஸ்டேட் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

Current Affairs

 

 • Shri Mukhtar Abbas launches ‘Jiyo Parsi publicity phase -2’ function in Mumbai , it was initiated to increase the small minority population of Parsi community

 

 • ‘Rajaswa Gyasangam’ is going to be held in New Delhi

 

 • World’s longest pedestrian suspension bridge ‘the Europabrucke (Europe Bridge) opens in Switzerland

 

 • Minister for steel Chanrdhary Birender Singh said that first time India has become a net export country in steel

 

 • Typhoon Haitang struck China, two lakh people evacuated from Fujian province

 

 • Indian Shuttler C.Rahul Yadav and men’s doubles pair of Manu Attri and B Sumeeth Reddy has won the men’s singles and men’s doubles titles at Lagus International Challenge

 

 • Sebastian Vettel wins Hungarian Grand Prix.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Call Now
Message us on Whatsapp