August 20

Date:20 Aug, 2017

August 20

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  20

                                          தேசிய செய்திகள்

                                       

 • சரக்கு – சேவை வரி செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 25ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

 

 • பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

 

 • இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ70000 ஆக உயர்த்தப்படவுள்ளது என மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் கேவல் குமார் சர்மா கூறினார்.

 

 • வாராக் கடன் காராணமாக வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் வரும் 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • மத்திய அரச சார்பில் விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர் வீராங்கனைகளை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படும். துரோணாச்சார்யா விருது பட்டியலில் இருந்து மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நீக்கம் செய்துள்ளது.

 

 • முதல் காகிதமில்லா மின்னணு நீதிமன்றங்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும், அதன் கிளையான லக்னோ நீதிமன்றத்திலும் துவக்கி வைக்கப்பட்டது.

 

 • பீகார் மாநிலத்தின் வடபகுதியில் சுமார் 1¼ கோடிக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.

 

 • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதிய ரயில் திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, காட்பாடி, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய 16 நகரங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை டெல்லியில் இருந்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 

பன்னாட்டு   செய்திகள்

                                                                                        

 • பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரசா என்றழைக்கப்பட்ட ருத் கேத்தரினா மார்த்தா ஆகஸ்ட் 10ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது அடக்கம் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைன் முன்னிலையில் 19 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

 •  தி எக்கனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் உலகளவில் 140 நகரங்களைத் தேர்ந்தெடுத்து ‘உலகளாவிய வாழ்வுரிமை அறிக்கை 2017’ என்ற தலைப்பில் உலகளவில் வாழத் தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற நகரங்களைப் பற்றி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் தான் உலகளவில் வாழ்வதற்கு உகந்த நகரம் என்று தெரிவித்துள்ளது.

 

 •  ஒவ்வொரு ஆண்டும் ‘செப்சிஸ்’ என்ற பாக்டீரியா நோய்க்கு உலகம் முழுவதும் சுமார் 6 லட்சம் குழந்தைகள் பலியாகி வருகின்றனர். செப்சிஸ் என்பது புண் ஏற்பட்டால் அதில் சில தீங்கான பாக்டீரியாக்கள் காணப்படும், இந்தக் கிருமித்தொற்று விரைவில் உடலில் பரவி ரத்தத்தில் நச்சுத் தன்மை ஏற்பட்டு உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் மோசமான நோயாகும். இந்த நோயினைக் கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை முறையினை டாக்டர் பானிகிரஹி கண்டுபிடித்துள்ளார்.

 

 •  இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழரான ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  டான்ஸ்ரீ நல்லா கே.எஸ். சேவையை பாராட்டி மலேசிய அரசு சமீபத்தில் சேவை தன்னார்வ படையின் சிறப்பு விருதான ‘ரேலா’ எனப்படும் துணை ஆணையர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

 

 •  யேமன் உள்நாட்டுப் போரில் கடந்த ஆண்டு பலியான குழந்தைகள் சிறார்களில் 51 சதவீதத்தினர் சவூதி கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதலுக்கு இறையாகினர் என ஐ.நா பொதுச்செயலர் சார்பிலான அறிக்கை தெரிவிக்கிறது.

 

 •  வெனிசூலாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசு தலைமை வக்கீல் லூயிசா தனக்கு அங்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி அண்டை நாடான கொலாம்பியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

                                                                                           

 • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வி கண்டு வெளியேறினார்.

 

 •  தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

 

 •  5ஆவது சீசன் புரோ கபடி போட்டியின் 36வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-32 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.

 

 •  இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இலங்கையின் தம்புல்லா நகரில் ஆகஸ்ட் 20ல் நடைபெறுகிறது.

 

 •  இங்கிலாந்து நாட்டில் நடந்த முதல் பகல் – இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

 

 •  9வது தென்மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் வருகிற 22ந் தேதி தொடங்குகிறது.

 

 •  புரோ கபடி லீக் தொடரில் லக்னோவில் தெலுங்கு டைட்டன்ஸ் மும்பையையும், அரியானா ஸ்டீலர்ஸ் அணி உத்திர பிரதேசத்தையும் தோற்கடித்தன.

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

                                                                                  

 

 • இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரி பதவியை விஷால் சிக்கா திடீரென ராஜினாமா செய்தார்.

 

 •  ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைஃப் காப்பீட்டு நிறுவனம் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

 

 •  நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிர்வாக குழு ரூ 13000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 •  பிலிப் மோரிஸ் பன்னாட்டு நிறுவனம் தனது சிகரெட் விற்பனை உத்திகளில் நாட்டின் ‘புகைப்பிடித்தல் தடுப்பு’ சட்டத்தை கண்டபடி மீறிவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் பிலிப் மோரிஸ் பன்னாட்டு ;நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததோடு நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.

 

 •  மருந்து நிறுவனங்களின் நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு தடை போட்டு மருந்து விலையை குறைக்க தனி கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 •  மத்திய வர்த்தக அமைச்சகம் உள்நாட்டு சரக்கு பெட்டக முனையங்களை அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்குட’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 

 Current Affairs

 • National Highways Authority of India (NHAI) has launched two mobile apps, MyFASTAG and FASTAG partner.  These mobile apps will be useful for Electronic Toll Collection (ETC)

 

 • As per National Aeronautics and Space Administration (NASA) a large near – Earth sized asteroid named ‘Asteroid Florence’ will pass safety by our planet on Sept. 1 2017 at a distance of about seven million kilometers.

 

 • India had won 15 Gold, 10 Silver and 12 Bronze medals in the world dwarf games.

 

 • Youth Indian Shuttler Lakshyasen has won the Bulgaria open International series.

 

 • Navika Sagar Parikrama which will commence in September, a team of women officers of the Indian Navy would circumnavigate the globe on an Indian – built Sail boat INSV Tarini.  This is the first ever Indian circumnavigation of the globe by an all women crew.

 

 • Smrity Iirani has Inaugurated Jharkhand’s first textile manufacturing and export unit ‘Orient craft limited’

 

 • China launched its first cyber court specializing in handling internet related causes in the e-commerce hub of Hangzhou amid a spike in the number of online disputes.

 

 • The First Regional Centre of the New Development Bank was opened by South African president Jacob Zuma and the banks Indian head K.V. Kamath.

 

 • Dr. Ms. Mamta Suri took charge as Executive Director, Insolvency and Bankruptcy Board of India (IBBI) in New Delhi.

 

 • Russian president Vladimir Putin has appointed career diplomat Nikolay Kudashev as Russia’s new ambassador to India.

 

 • Rear Admiral Travis Sinniah was appointed as the chief of Srilanka’s Navy forces.  He was the first Tamil Navy Chief after four decades.

   

Call Now
Message us on Whatsapp