August 19

Date:19 Aug, 2017

August 19

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  19

                                          தேசிய செய்திகள்

 

 • மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளி பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் குழந்தை பராமரிப்பு படி இருமடங்காக உயர்த்தி மாதந்தோறும் ரூ.3000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 8 மாணவர்கள், விண்வெளியில் பிரிண்டிங் செய்வது சாத்தியமா என்பதைக் கண்டறிய என்.எஸ்.எல்.வி. கலாம்-2 என்ற பலூன் செயற்கைக் கோளை கண்டுபிடித்துள்ளனர். இந்த செயற்கைக் கோள் (கலாம் சாட்)உலகின் எடை குறைந்த செயற்கைக் கோள் என்று நாசாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 • தமிழக பத்திரப் பதிவுத் தலைவராக (ஐ.ஜி) குமரகுருபரர் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக பி.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று(ஆகஸ்ட் 19) தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

 

 • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் “விக்டோரியா மகாராணி பதவியேற்பு பொன்விழா” கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

 

 • பிளஸ் 1 மதிப்பெண் முறையில் புதிய மாற்றம் : வருகைப் பதிவுக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை செயலாளர் த. உதய சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 • நாடு முழுவதும் உள்ள மொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தூத்துக்குடியில் நேற்று(18.08.2017) தொடங்கி வைத்தார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம்

 

 • ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, தென்கொரியா மற்றும் ஆசிய நாடுகளுடனான பாதுகாப்பு மற்றும் ராணுவ ரீதியான உறவு மேம்படத்தப்படும் என அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 2 நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளது.

 

 • மிகப் பெரிய விண்கல் ஒன்று செப்டம்பர் 1ம் தேதி பூமியை கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தெரிவித்துள்ளது.

 

 • தாய்லாந்து(பாங்காக்கில்) : ஒரு உணவு விடுதியானது சிறைசாலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற உணவு விடுதியைப் போன்று இல்லாமல் வேறுபட்டு காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 • இந்தியாவிற்கான ரஷ்ய தூதராக நிகோலாய் குடாஷெவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • 2014ம் ஆண்டில் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது.

 

 • ஜப்பானியர்கள் ரோபோட் தொழில்நுட்பம் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது ஒரு சோளக் கொல்லை பொம்மை ரோபோட்டை ஓநாய் வடிவத்தில் உருவாக்கியுள்ளனர்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கும் ரோகன் போபண்ணா இணை கால் இறுதிக்கும் முன்னேறியுள்ளது

 

 • ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தலைவர் விராட்கோலி முதலிடத்தில் உள்ளார்.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 2வது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

 • உயரம் குன்றியவர்களுக்கான உலக தடகளப் போட்டி : ஈட்டி எறிதலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டுப் பயிற்சி மைய வீரர் ஏ. செல்வராஜ் தங்கம் வென்றுள்ளார்.

 

 • ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசிய ஜுனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் 10 பேர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை நியுஸிலாந்தில் நடைபெறவுள்ளது.

 

 • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • மத்திய அரசு புதிய 50 ருபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • பி.எஸ்என்.எல் நிறுவனம், மொபிவிக் வால்ட் நிறுவனத்துடன் இணைந்து பேடிஎம் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையில் பணமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற இயற்கை எரிவாயு மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மாநிலங்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

 • மின் விநியோகம் மற்றும் தொலை தொடர்பு துறையில் சீன நிறுவனங்களை கட்டுபடுத்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

 

 • மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படத்தினால் படகுகளுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

Current Affairs 

 

 • Central government has approved a nearly Rs. 32,000 crore “definitive Five Year action programme” for the Indian Guard to enhance its capability in maintaining vigil on coastal waters.

   

 

 • The Prime Minister has interacted with young Entrepreneurs at the “Champions of Change” initiative organized by NITI Aayog at Pravasi Bharathi Kendra.

 

 • Union Minister for Environment, Forest and Climate Change, Dr. Harsh Vardhan has launched the “Harit Diwali, Swasth Diwali” campaign, He also administered a pledge for a Green and Heallthy Diwali to the gathering of the students.  The message of celebrating this is children should buy earthen lamps and other such environment friendly products.

 

 • Chief Minister Deverndra Fadnavis has inaugurated Dr. Vishwanath Karad MIT World Peace University.

 

 • World Humanitarian Day – August 19 Theme: # Not A Target.

 

 • The government has banned exports of gold jewellery, medallions and other articles above 22 carat purity in a bid to check round stumbling of the precious metal.  India is the world second biggest consumer after China.

 

 • The US and Japan have agreed to advance their Multilateral Security and defense co-operation with countries like India, South Korea and Australia.

 

 • Qatar has launched a new direct route between the country’s Hamad Port and Pakistan’s port of Karachi to boost trade between the two countries.

 

 • Dr. Nanda Kumar Jairam, CEO Chairman and Group medical Director, Columbia Asia Hospitals, India has been awarded the ‘Healthcare Personality of the year’ award

 

 • TRIFED (Tribal Co-operative Marketing Development Federation of India limited is celebrating World Honey Bee day on Aug 19 Theme: To save Indian Honey Bee.

   

Call Now
Message us on Whatsapp