August 16

Date:17 Aug, 2017

August 16

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  16

                                          தேசிய செய்திகள்

                                            

 • சுதந்திர தினத்தையொட்டி தில்லி காவல்துறை அதிகாரிகள் 21 பேருக்கு அவர்களது சிறப்பான சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. இதில் 6 பெண் அதிகாரிகளும் அடங்குவர்.

 

 • சிறுவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அபாயகரமான புளுவேல் இணையதள விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

 

 • உத்தரப் பிரதேசத்தில் 66 குழந்தைகள் இறப்புக்கு காதரணமாக கூறப்படும் மூளைவீக்க நோய்களான ஏஇஎஸ் (Acute encephalitis syndrome)  மற்றும் ஜே.இ. (Japanese encephalitis)  நோய்களின் தாக்குதலால் நாட்டில் நிகழாண்டில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர்.

 

 • இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மன்பஸார் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் 103 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி பிஜய் குமார் தத்தா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

 

 • 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 • இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏர்இந்தியா விமானங்கள் சேவையில் ராணுவம், கடற்படை, விமானப்படையினருக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

 

 • கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 101 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டது. இந்த உணவகத்தில் ரூ5க்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய, இரவு உணவு ரூ10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் இந்த மலிவு விலை உணவகங்களுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

 • மாநில தலைமைச் செயலக பிரதான கட்டிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரும், தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் அலுவலக கட்டிடத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரும் சூட்டப்படுவதாக உத்திரகாண்ட் மாநில முதல்மந்திரி திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

 

 • ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்க்க நிதியுதவி வழங்கியது தொடர்பாக பிரிவினைவாதிகளுக்கு தொடர்புடைய 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியுள்ளது.

 

 • இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கூகுள் முகப்பு பக்கத்தில் நமது நாடாளுமன்றத்தின் முகப்பு தோற்றம் டூடுலாக இடம் பெற்றது. தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், நாட்டின் தேசியப் பறவையான மயில் ஆகியவை தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

 

                                                                                                               பன்னாட்டு   செய்திகள்

 

                                                                                                         

 

 • இனவாத வன்முறைக்கும் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் சமூகத்தில் இடமளிக்கக் கூடாது என ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.

 

 •  அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடியது, நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டது குறித்து சீனாவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

 

 •  நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 15 நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நேபாளத்துக்கான தூதர் மஞ்சீவ் சிங் பூரி தேசியக்கொடி ஏற்றினார்.

 

 •  இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை காரணமாக ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் எல்லையில் பதட்டமும் பரபரபப்பும் ஏற்பட்டுள்ளது. இதை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும் சீனாவும் அமர்ந்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது.

 

 •  ஆப்கானிஸ்தானில் 16 ஆண்டுகள் போரிட்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து அமெரிக்க படைகள் விலகிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.

 

 •  ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என ஈரான் அதிபர் ருஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 •  சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், எகிப்து, இஸ்ரேல், தென்னாப்ரிக்கா உட்பட உலகம் முழுவதுமுள்ள இந்திய தூதரகங்களில் இந்;திய சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

 

 

                                                                                                        விளையாட்டு செய்திகள்

 

                                                                                               

 

 • 5வது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 28வது ஆட்டத்தில் புணேரி பால்டான் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

 

 •  ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 9வது இடத்துக்கும், ஷிகர்தவன் 28வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

 

 •  ஐரோப்பிய ஹாக்கி தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான 2வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.

 

 •  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் சைக்கிள் பந்தய வீரர் ஸ்டீபன் ஊல்ட்ரிட்ஜ் நேற்று மரணமடைந்தார்.

 

 •  தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தோற்கடித்தது.

 

 •  விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 •  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 28ந் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

                                                                                                    

 • ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் ரூ 20428 கோடி.

 

 •  பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தொலைத் தொடர்பு சேவைக்கான உரிமத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 •  நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி இருமடங்கு அதிகரித்து ரூ 86775 கோடியானது.

 

 •  பொதுத் துறையைச் சேர்ந்த ஐடிபிஐ வங்கி முதல் காலாண்டில் ரூ.853 கோடி இழப்பைக் கண்டுள்ளது.

 

 •  பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 1757 நபர்களின் வாரிசுகளுக்கு விபத்து காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

 •  பொதுத்துறை வங்கிகளின் கடன் 2017ம் ஆண்டின் ரூ.92 ஆயிரம் போடி அதிகரித்துள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி இது தெரிய வந்துள்ளது.

                                                                    Current Affairs

 

 • India’s first aviation university at Fursatganj in uttar pradesh’s Rae Bareli district is all set to open.

 

 • Indian coast Guard ship ‘Shaurya’ the fifth in the series of six 105 – metre. offshore petrol vessel commissioned in Goa by union minister for petroleum and Natural gas Dharmendra pradhan.

 

 • Chief minister Naveen patnaik launches ‘she means Business’ programme of facebook for women entrpreneus in Odisha. Under this scheme 25000 women entrepreneurs land self help group members will be given training on digital marketing skills within next one Year.

 

 • Union minister forest and climate change minister, Dr. Harsh Vardhan launched ‘Gaj Yatra’ a nationwide campaign to protect elephants on the occasion of World elephant day August 12.

 

 • India, Russia to Hold Major Tri-service ‘Indra’ combat exercise in October will primarily focus on achieving co-ordination between forces of the two countries in a triservices integrated theatre command scenario.

 

 • India’s first railway disaster management village will be setup at a cost of Rs. 44.42 crore of Hejjala

 

 • International Maritime search and Rescue exercise (IMMSAREX) will be held in Bay of Bengal. China to join the Indian ocean exercise in November.

 

 • Infusion nurses society (INS) is a global authority in Infusion therapy has launched India’s first online course on Infusion therapy for nurses under this.

 

 

Call Now
Message us on Whatsapp