August 14

Date:14 Aug, 2017

August 14

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  14

                                          தேசிய செய்திகள்

 

 • நாட்டின் 71வது சுதந்திர தினவிழா நாளை (15.08.2017) கொண்டாடப்படுகிறது.

 

 • அகில இந்திய அளவில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து இரண்டாது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.

 

 • ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி “மெட்ராஸ் டே” கொண்டாடப்படுகிறது. தற்போதைய கணக்கு படி சென்னை நகரத்தின் வயது 378 என கருதப்படுகிறது.

 

 • வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழையும் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளை எளிதில் மீட்க ஹைட்ராலக் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை தமிழக வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • சென்னையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் விரைவில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 • பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழில் விவரம் குறிப்பிடும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி கூறியுள்ளார்.

 

 • மத்திய அரசின் “உதான் திட்டத்தின்” கீழ் புதுச்சேரியில் வரும் 16ம் தேதி முதல் புதுச்சேரி – ஹைதராபாத் விமான சேவைத் தொடங்குவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 

 • உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் குழந்தைகள் நோய் குறித்த ஆராய்ச்சிக்காக மண்டல மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 • பாகிஸ்தானில் இன்று (14.08.2017) சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

 

 • மனிதர்களின் உடல் உறுப்புகளுக்கு மாற்றாக மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகளை பொருத்தலாம் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

 • மாஸ்கோவில்(ரஷ்யா) உள்ள அலபியா பகுதியில் சர்வதேச நாடுகளுக்கிடையேயான போர் பீரங்கி போட்டியில் ரஷ்யாவின் ராணுவ விமானம் முதலிடத்தை பிடித்ததுள்ளது.

 

 • கின்னஸ் சாதனைப் படைத்த  –  உலகில் மிக வயதான(114) மனிதர் – இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டல் மரணம் அடைந்தார்.

 

 • வடகொரியா பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா உதவ முடியும் என்று பசுபிக் பகுதிகளுக்கான அமெரிக்க ராணுவத் தளபதி ஹாரி ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியா, சீனா இடையிலான டோக்லாம் எல்லைப் பிரச்சனைக்கு அமெரிக்கா இந்தியாவிற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • உலக தடகள போட்டி – பெண்களுக்கான 200 மிட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை டப்னே ஸ்சிப்பர்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

 • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி – நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னி ரீஸ் தங்கப்பதக்கத்தை வென்றார்.

 

 • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்று ஹார்திக் பாண்ட்யா அழைக்கப்படுகிறார்.

 

 • மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஜெர்மணியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

 

 • இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று அழைக்கப்படும் கேப்டன் மகேந்திர சிங் டோனியை – “3 AM கேப்டன்” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் விரர் ஸ்டைரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

 • டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் 27வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 

 • சூப்பர் பைக் வாங்குவதற்காக ஹெச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ், ஆக்ஸிஸ் வங்கி; கடன் வழங்குகின்றன.

 

 • ஸ்கூட்டர் நிறுவனமான பஜாஜ் தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த டிரையம்ப் நிறுவனத்துடன் சேர்ந்துள்ளது.

 

 • சொகுசு கார்கள் மற்றும் எஸ்யுவி கார்களுக்கு ஜிஎஸ்டி செஜ் வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • அணுமின் திட்டங்கள் மூலம் மின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மின்சார மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 • செல்லிடைப்பேசி கட்டணங்களில் இனி வெளிப்படைத் தன்மை இருக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது.

 

 • நாட்டில் அதிகப்பட்சமாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த வணிகர்கள் 56.000 பேர் ஜிஎஸ்டி திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் தெரிவித்துள்ளார்.

  Current Affairs

 

 • Jharkhand assembly has passed Religious Freedom Bill 2017. It aims to stop the forced conversions in the state.

 

 • Flipkart World third most funded private limited with the Rs 2.4 billion it just received from Japanese technology and telecom giant Softbank.

 

 • IV Subba Rao has appointed the Secretary to vice president M Venkaiah Naidu.

 

 • David Rasquinha who is currently deputy managing director of Exim Bank India has been appointed as the Managing Director of the Bank.

 

 • Bollywood star Aishwarya Rai Bachchan has become the first female actor ever to hoist the Indian National Flag at the Indian Film Festival of Melbourne.

 

 • Shooter Maheswari Chauhan bagged a bronze medal at the Asian shot gun championship to earn India’s first women’s skeet Individual medal in Astana, Kazakhstan.

 

 • The Government of India has decided to launch a new sub- scheme named ‘Aajeevika Grameen Express Yojana as part of Deendayal Antodaya Yojana. It will be implemented in 250 blocks in the country. It will help to provide safe, affordable and community monitored rural transport service to connect remote villages with key service and amenities.

 

 • Legendary Indian athlete milkha singh has been appointed WHO goodwill ambassador for physical activity in South East Asia Region

 

 • Israeli Holocaust Survivor Yisrael Krislal certified by Guinness world record as the world oldest man died aged 113.

   

   

   

   

Call Now
Message us on Whatsapp