August 10

Date:10 Aug, 2017

August 10

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட்  10

                                          தேசிய செய்திகள்

 • ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடங்கப்பட்டு 75வது ஆண்டு தினத்தையொட்டி, வலிமையான, மதச்சார்பற்ற, தன்னிறைவு பெற்ற, ஜனநாயக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மாநிலங்கள் அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 • நாட்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாவட்ட ஆட்சியர்கள் அனைவரிடமும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊரையும் நேரில் சென்று பார்வையிட்டு குறைபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் 2022ம் ஆண்டிற்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்க்கான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 • காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களுக்கு தடை விதித்தும் மாநில தேர்வு வாரியத்திறகு ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது

 

 • சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் தங்களுக்கு தேவையான என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை வாங்குவதற்கு புதிய இணைய தளத்தை வெளியிட்டுள்ளது.

 

 • கொசுக்களை ஒழிக்க ‘ஆயில் உருண்டை’ வீசும் திட்டத்தை தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • உலக அஞ்சல் தினத்தை(அக்டோபர் 09) முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சலக வளாகங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு அஞ்சல் துறை நிர்ணயித்துள்ளது.

 

 • தஞ்சை மாவட்டத்தில் கிராமங்களில் “தண்ணீர் சிக்கன விழிப்புணர்வு” ஏற்படுத்தி வரும் நடுப்படுகையை(கிராமம்) சேர்ந்த மாரியம்மாளுக்கு நபார்டு வங்கி “தண்ணீர் தூதர் விருது”வழங்கியுள்ளது.

 

 • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

  பன்னாட்டு   செய்திகள்

 • இந்தியா உள்பட 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசா இல்லாமல் கர்த்தாருக்கு பயணம் செய்யலாம் என்று கத்தார் சுற்றுலாத்துறை சேர்மன் ஹாசன் அல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 

 • திசு நானோ மாற்றியமைத்தல் “டி.என்.டி” என அழைக்கப்படும், மனித உடலில் சேதமடைந்த உறுப்பை குணமாக்கி மீண்டும் செயல்;பட செய்யும் புதிய தொழில் நுட்பத்தை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • கென்யா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மனித கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்து வருகிறது. இந்த எரிபொருள்கள் சமையல் செய்யவும், வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

 • லண்டனில் தபால் மற்றும் பார்சல்களை கொண்டு செல்லும் இரயில் சேவை 14 ஆண்டுகளுக்கு பிறகு மேம்படுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படவுள்ளது.

 

 • அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண அரசு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவின் பிறந்த நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

 

 • கனடா நாட்டின் தூதரக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரானா சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் ஈடுபடும் வடகொரியா, அமெரிக்காவின் பிராந்தியம் அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 • சினாவில் நடந்து வரும் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் வர்தன் மற்றும் ஸ்ரீராம் முன்னேறியுள்ளனர்.

 

 • உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் வான் நீகெர்க் தங்கப் பதக்கம் வென்றார்

 

 • உலக பாட்மிண்ட்ன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் 2வது சுற்றுக்கு நேரடி தகுதி பெற்றனர்.

 

 • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் பிரான்ஸ் வீரர் அம்ப்ராய்ஸ் பாஸீ தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • முத்தரப்பு ஒரு நாள் போட்டித்தொடரின் பைனலில் தென் ஆப்பிரிக்கா அணியை, இந்தியா ஏ அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது

 

 • பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜம் சேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • 5வது சீசன் புரோ கபடி போட்டியில் 20வது லீக் ஆட்டத்தில் பெங்களுர் புல்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 13.6 சதவீதம் அதிகரித்து ரூ.140.32 கோடியாக உள்ளது.

 

 • லாரி ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில்  ஈசி டிரக்   என்ற பெயரில் புதிய செயலியை (ஆப்) ஈசிவே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றை அறியலாம்

 

 • தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க வேண்டும் எனில் ஏர் இந்தியாவின் சில கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார்

 

 • லெனோவா கே8 நோட் ஸ்மார்ட் போன் ஆகஸ்ட் 18ம் தேதி முதன் முதலாக இந்தியாவின் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் விற்பனை செய்யவுள்ளது.

 

 • வாட்ஸ்அப் செயலியில் இனி மெசேஜ் அனுப்புவதைப் போல பணத்தையும் இன்ஸ்டன்ட் முறையில் அனுப்பும் புதிய சேவையை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது.

 

 • அமெரிக்காவைச் சேர்ந்த உணவகமான மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் சீனாவில் 2000 புதிய விடுதிகளை திறக்க உள்ளது.

 

 

Current Affairs

 

 • NITI Aayog has chosen three states for transformative changes in health sector under its”Sustainable Action for Transforming Human capital “(SATH) Initiative.  The states are – Uttar Pradesh, Assam and Karnataka.

 

 • NITI Aayog has chosen on other three states for transformable change education sectors under ‘SATH’ initiative.  The states are – Madhya Pradesh, Jharkhand and Odisha.

 

 • Dilip Chauhan has been appointed as Deputy Comptroller for Minority Affairs in New York.

 

 • Mughalsarai Junction railway station has been renamed after Pandit Deen Dayal Upadhyaya.

 

 • Sanwar Lal Jat former Union Minister and BJP MP from Ajmer passed away.

 

 • India celebrated 75th anniversary of historic Movement Quit India Movement on 9th August 2017.

 

 • India finished the Asian Junior Boxing Tournament in Puerto Princesa, Philippines with total 8 medals (2 silver, 6 bronze).

 

 • Former West Bengal Minister Gyan Singh Sohanpal fondly called ‘Chacha’ died.

 

 • The National Skill Development Corporation and Google India launched Android skill Development programme to Improve Mobile Developers Ecosystem.

 

Call Now
Message us on Whatsapp