August 08

Date:08 Aug, 2017

August 08

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட் 08

                                          தேசிய செய்திகள்

 • நாட்டின் இயற்கை வளமான சதுப்பு நிலங்களை பாதுகாக்க தனி ஆணையத்தை ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • மனிதர்களுக்கு தனி நபர் அடையாள அட்டை (ஆதார்), வழங்குவதைப் போலவே மாடுகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • தமிழகத்தில் ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை உருவாக்கப்படும் என்று சென்னையில் நேற்று(07.08.2017) நடைபெற்ற தேசிய கைத்தறி தின விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

 • பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

 

 • பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் கலந்து கொள்கின்றனர்.

 

 • ஆகஸ்ட் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 

 • பி.எஸ்.என்.எல். மூலம் பிரிபெய்டு மற்றும் போஸ்டு பெய்டு செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணி டிசம்பர் மாதத்துடன் நிறைவடைவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 • 2020ம் ஆண்டுக்குள் சென்னை, கோவை மாநகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

                                                                                                                பன்னாட்டு   செய்திகள்

 • சனி, யுரேனஸ், வியாழன் மற்றும் நெப்டியூன் கிரக நட்சத்திரங்கள் குறித்து ஆராய நாசா அனுப்பிய மிஷன் “வாயேஜர் – 2” அதன் 40வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. இந்த விண்கலம் இந்தியாவின் பாரம்பரிய இசையை விண்வெளியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

 

 • தென் சீனக் கடல் பகுதியை சீனா இராணுவமயமாக்கி வருவதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 • சவுதி அரேபியாவைச் சேர்ந்த பொறியாளர் முகமது ஹமீத் சையக் என்பவர் குடைக்குள் ஏசி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். அந்த தொழில்நுட்பம் “மெக்கா குடை” என்று அழைக்கப்படுகிறது.

 

 • பாகிஸ்தான் அரசில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்து மதத்தை சேர்ந்த டாக்டர்.தார்ஷன் லால் என்பவர் மத்திய அமைச்சரவையில் அமைச்சரானார்.

 

 • எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் நாட்டின் பொருளாதாரத்தை பரவலாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஐம்பது தீவுகள் மற்றும் செங்கடலில் உள்ள பிற பகுதிகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றும் மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தினை சௌதி அரேபியா தொடங்கியுள்ளது.

 

 • சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தின் துணைத் தூதராக ராபர்ட் பர்ஜெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சர்வதேச அணு ஆயுதத் தடை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

 

 • ஆசிய ஜுனியர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றது.

 

 • இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

 

 • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி – அமெரிக்க வீராங்கனை டோரி போவி தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

 • உலக பேட்மிண்டேன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சார்பாக சஞ்சனா பங்கேற்க உள்ளார்.

 

 • சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை ரத்து செய்யுமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

 • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்றார்.

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • ஏழைகளுக்கு சமையல் கியாஸ்(கேஸ்) மானியம் நீடிக்கும் என்று பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

 

 • நடுத்தர ரக கார்கள், சொகுசு கார்கள் மீதான கூடுதல் வரியை 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் சிபாரிசு செய்துள்ளது.

 

 • சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் சாப்ட்பேங்க் நிறுவனம் ஆகும்.

 

 • ஏவரெடி இண்டஸ்ட்ரீஸ் ஏப்ரல் – ஜுன் காலாண்டு வருவாய் ரூ.357.66 கோடியாக உள்ளது.

 

 • வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் முதல் காலாண்டு லாபம் 1.40 சதவீதம் சரிவடைந்தது.

 

 • டாடா ஸ்டீல் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.921.09 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

Current affairs

 

 • Union Home Ministry passed on order to merge the three decade old   National Crime Records Bureau (NCRB) with Bureau of Police Research and Development (BPRD) to improve administrative efficiency and optimal     utilization of resources.

 

 • Master Card and PayPal have announced an extension of their partnership into Asia Pacific for making Master card a clear payment option within PayPal.

 

 • Firoz merchant, an Indian businessman in the United Arab Emirates (UAE)  honoured with UAE’s prestigious community service Medal.

 

 • Aparna appointed an Executive Director of World Bank.

 

 • Indian Institute of Science (IISC) researchers from Bangalore have developed a highly sensitive, low cost nanometer – scale carbon Monoxide    (Co) sensor with possible application in environmental pollution Monitoring.

 

 • Oil and Natural Gas Corporation (ONGC) has beaten Bangalore Hockey   Association in the final in 91st All India MCC – Murugappa Gold cup    hockey – tournament.

 

 • Indian Shooter Ankur Mittal has won the individual as well as the team gold medal in Men’s double trap at the 7th Asian Shotgun Championship.

 

 • National Handloom day is observed on 7th August to encourage people to use handmade loom in the country.

 

 • M.Venkaiah Naidu, was chosen as the 13th Vice president of India, will succeeded incumbed Hamid Ansari.

Call Now
Message us on Whatsapp