August 07

Date:07 Aug, 2017

August 07

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட் 07

                                          தேசிய செய்திகள்

                                          

 • 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜனதா இப்போதே தயாராகி வருவதாகவும், விரைவில் மந்திரி சபை மாற்றி அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 • பொது மக்கள் நலன் கருதி, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 • பொதுமக்கள் நலன் கருதி “e services.tn police.gov.in” என்ற இணையவழி மூலம், வீட்டில் இருந்தபடியே போலீஸ் நிலையத்தில் புகார்களை பதிவு செய்வது, தமிழக போலீஸ் துறையின் கைபேசி செயலி(play store), (TN Police Website) ல் பதிவிறக்கம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கலாம்.

 

 • இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் – டாக்சி சேவை பெங்களுருவில் தொடங்க உள்ளது. இந்த சேவை பெங்களுருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லவோ அல்லது விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்குப் போகவோ பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • இறப்பு பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை எனவும், ஆதார் எண்ணுடன் ஆன இணைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கும் என இந்திய தலைமை பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 • தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் கடந்த 2 நாட்களாக 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்த பயன்பாட்டில் சுமார் 35 சதவீதத்தை காற்றாலைகள் பூர்த்தி செய்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி உயர்ந்துள்ளதாக காற்றாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • முன்னணி ஐ.டி. நிறுவனமான காக்னிசண்டில் இருந்து மூத்த பணியாளர்கள் 400 பேர் விருப்ப ஓய்வு பிரிவு திட்டத்தின் கீழ் ராஜிநாமா செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

                                                                                                                பன்னாட்டு   செய்திகள்

 • ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு இழப்பீடாக 4000 கோடி யூரோ(சுமார் ரூ.3 லட்சம் கோடி) வழங்குவதாக பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

 

 • கிழக்கு ஆப்பிரிக்கா நாடான ருவாண்டாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் “பால் ககாமே” தொடர்ந்து 3 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

 

 • கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள வடகொரியாவின் நிலக்கரி, இரும்பு, இரும்புதாது உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் புதிய தடை விதித்ததுள்ளது

 

 • டோக்கியோ(ஜப்பான்) பகுதியில் ‘நொரு’ என்ற புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது.

 

 • அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட அனைத்து நாடுகளும் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் குட்டரேஸ் வலியுறுத்தினார்.

 

 • இஸ்ரேல் நாட்டில் தீவிரவாத அமைப்புக்கு முக்கிய கருவியாக திகழும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் அலுவலகங்களை மூடுவதற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹ உத்தரவிட்டுள்ளார்.

 

 • மின்சாரத்தை பிரதானமாக கொண்டு உணவு தயாரிக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • “அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நிறுத்தி, அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடகொரியா முன்வர வேண்டும்” என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ வலியுறுத்தி உள்ளார்.  

 

விளையாட்டு செய்திகள்

 • கேரள மாநிலம், ஆலப்புழா அருகில் உள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் நடக்கும் நேரு ட்ராபி படகுப் போட்டி, இந்த ஆண்டு 12-08-2017ம் தேதி நடைபெற உள்ளது.

 

 • இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ந்து 4வது முறை வெற்றி பெற்றது.

 

 • 91வது எம்.சி.சி.முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி – ஓ.என்.ஜி.சி.அணி, பெங்களுரு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

 • மும்பையில் நடைபெற்ற டயிள்யூபிஓ ஒரியண்டரல் சூப்பர் மத்திய எடைப் பிரிவு போட்டியில் இந்திய ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இவர் தாம் பெற்ற சாம்பியன்ஷிப் பட்டத்தை(பெல்ட்டை) திரும்ப சீனாவுக்கே தருவதாக தெரிவித்துள்ளார்.

 

 • உலக தடகள போட்டியின் 100 மீட்டர் – ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் நட்சத்திர வீரர் உசேன் போல்டை அமெரிக்காவின் ஜஸ்டின் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

 

 • 5வது சீசன் புரோ கபடி போட்டியின் 16வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி, யு.பி.யோதா அணியைத் தோற்கடித்தது.

 

 • “பேட்ஸ்மென்னை அச்சுறுத்தும் விதமாக” பந்துகளை வீசியதாக கூறப்பட்டு 3வது டெஸ்ட் போட்டியல் ஆடுவதற்கு இந்திய பந்து வீச்சாளர் ஜடஜாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

 • எண்ணெய் வளம் குறைந்து வருவதாலும், தூய்மையான சுற்றுக் சூழலை உருவாக்க வேண்டியதாலும் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனத்தை நோக்கி ஆட்டாமொபைல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது என ஆட்டோமொபைல் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • டிராய் அமைப்புக்கு சொந்தமான மைஸ்பீடு செயலியை வைத்து இணைய சோதனை செயலிகளை ஆராய்ந்தது. இதில் 4ஜி இணைய சேவையை வழங்குவதில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

 

 • மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் – ‘ஐஹெச்பி’ முத்திரையில் கைத்தறிப் பொருள்களை பிரபலப்படுத்தவுள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் ரூ.95.63 கோடிக்கு கைத்தறி பொருள்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

 • ஜவுளி சார்ந்த தொழில்களுக்கான ஜி.எஸ்.டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

 • டெல்லி : பேங்க் ஆப் பரோடா – 50 லட்சம் வரையில் சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கான வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதமாக குறைத்தது.

 

Current affairs

 

 • Maharashtra Government has launched two online Portals MahaDBT and MahaVASTU to ease the process of direct benefit transfer (DBT).
  • Maha DBT portal :  It is an Aadhaar – authenticated    electronic mechanism that will enable direct transfer of benefits for    over 40 schemes currently implemented.
  • MahaVASTU : It is an online building permission management through which construction approvals will be sanctioned with full transparency.

 

 • Two satellites have been launched by Israel that is one dedicated to monitor the effects of climate change on vegetation.  The satellites were launches from Korou, in French Guiana.

 

 • The Archaeological survey of India has declared all ASI protected Monuments and Archaeological sites as ‘Polythene free zone’.

 

 • Neymer has become the most expensive player in football history after  completing his blockbuster transfer to Paris – Saint Germain from  Barcelona for 222 Million Euros (262 Million).

 

 • A high level committee headed by former Supreme Court judge Justice B.N. Srikrishna setup to review the Institutionalization of Arbitration Mechanism.

 

 • The Cochin International Airport Limited (CIAL) became the first Airport in the world, to be completely powered by solar energy.

 

 • Kotak Mahindra Bank has launched a new service called “Kotak Remit”. This service is an Aadhaar – based integrated outward Forex remittance solution for both customers and non – customers.

 

 • Tata Memorial centre as joined with the Indian Dental Association (IDA) t0  initiate India’s first digital initiative for prevention and early detection of oral cancer.

 

 • Uttar Pradesh CM yogi Adityanath declared the Bollywood actor Akshay Kumar becomes the brand Ambassador of the Swachh Bharat Mission.

 

 • Indian doubles pair of Joshna Chinappa and Dipika Pallikal Karthik bagged for a bronze medal at the WSF World doubles Squash championship. 

   

   

 

Call Now
Message us on Whatsapp