August 05

Date:05 Aug, 2017

August 05

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட் 05

                                          தேசிய செய்திகள்

                                          

 • இந்தியாவில் தற்போது 780 மொழிகள் உள்ளன. அவற்றில் 400 மொழிகள் அழியக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. பன்மொழி அறிஞர் கணேஷ் என்.டேவி இந்தியாவின் மக்கள் மொழியியல் ஆய்வில் இந்த முடிவினை வெளியிட்டார்.

 

 •  டோக்லாம் எல்லை பிரச்சனையில் இரு தரப்பும் ஏற்றக் கொள்ளத்தக்க தீர்வை எட்ட சீனாவுடன் தூதரகரீதியாக பேசி வருகிறோம் என இந்தியா கூறியது.

 

 •  தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2016-17 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை இன்று நள்ளிரவு வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 •  அக்டோபர் 1-ந் தேதி முதல் இறப்பை பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 •  ராணுவ வீரர்களுக்கு விரைவில் காதியில் சீருடை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

 

 •  கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த நடைமுறையைக் கொண்டு வரக்கூடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 •  அமெரிக்காவுடனான ராணுவ உறவுகளை மேம்படுத்துவதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆர்வம் கொண்டிருந்தார் என அந்நாட்டின் உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது.

 

 •  துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீ அன்சாரியின் பதவி காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10ந் தேதியுடன் முடிவடைதால் அவருக்கு பதிலாக புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க ஆகஸ்ட் 5ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

                                                                                                                 பன்னாட்டு   செய்திகள்

                                                                                                                    

 

 • அமெரிக்காவில் சிக்கிய 2 டன் அளவிலான யானைத் தந்தப் பொருள்களை வனப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.

 

 •  அமெரிக்காவுடனான ராணுவ உறவுகளை மேம்படுத்துவதில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காற்தி ஆர்வம் கொண்டிருந்தார் என அந்நாட்டின் உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது.

 

 •  பாகிஸ்தான் அமைச்சரவையை பிரதமர் அப்பாஸி ஆகஸ்ட் 4 அன்று விரிவாக்கம் செய்தார். புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக காஜா ஆசிஃப் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது தான் முதல் முறையாக முழு நேர வெளியுறவுத் துறை அமைச்சர் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 •  வேற்றுகிரகவாசிகளிடமிருந்து (ஏலியன்) பூமியை பாதுகாப்பதற்காக ஒரு அதிகாரியை நியமிக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நாசா வரவேற்கிறது.

 

 •  அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் உதவியாளரும் உளவுப் பிரிவு இயக்குநருமான இஸ்ரா கோஹென்-வாட்னிக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 •  இந்த நூற்றாண்டில் இறுதியில் ஐரோப்பாவில் கடும் வெப்பத்தினால் வருடத்திற்கு 1.5 லட்சம் பேர் மரணிக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போதுள்ள ஆண்டிற்கு சராசரியாக 3000 பேர் வெப்பத்தினால் இறக்கும் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் சுமார் 50 மடங்கு அதிகரிக்கக்கூடும் என்பதே இதன் பொருள்.

 

 •  ஜப்பானில் டோக்கியோவில் உள்ள சுகிஜி மீன் சந்தைதான் உலகின் மிகப்பெரிய மீன் சந்தை. அங்கு நேற்று முன்தினம் தீ விபத்து நேரிட்டது.

 

 •  பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள அரசு பல்கலைக்கழகங்களில் கட்டணமில்லா கல்வி வழங்குவதற்கான சட்ட மசோதாவில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே கையெழுத்துப் போட்டார்.

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                     விளையாட்டு செய்திகள்

                                                                                                   

 • பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா, ஆக்கி வீரர் சர்தார்சிங் ஆகியோரின் பெயர்கள் கேல்ரத்னா விருதுக்கும், தமிழக வீரர்கள் ஆரோக்ய ராஜீவ், அமல்ராஜ், மாரியப்பன் உள்பட 17 பேர்கள் அர்ஜூனா விருதுக்கும் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 

 •  பிரேசில் வீரர் நெய்மரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ரூ. 1680 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 •  தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தோற்கடித்தது.

 

 •  வாஷிங்டனில் நடைபெற்று வரும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

 •  அரியானா மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீராங்கனை ஜோதி குப்தா (20) தற்கொலை செய்து கொண்டார்.

 

 •  இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அஸ்வின் மொத்தமாக 2000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் என்ற இரட்டை இலக்கை விரைவில் எட்டிய 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

 •  இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான நுவான் பிரதீப் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் நாளில் தசைப்பிடிப்பால் வெளியேறினார்.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

                                                                                       

 

 • டிஜிட்டல் நோக்கங்களில் வரவேற்கத்தக்க முயற்சிகளை கொண்ட தலைவராக மோடி உள்ளார் என சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ் கூறியுள்ளார்.

 

 •  பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நான்கு பொதுத்துறை நிறுவனங்களில் 25 சதவீPத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 •  ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மூலம் ஒரே நாளில் வாரன்பஃபெட்டுக்கு 100 கோடி டாலர் ஆதாயம் கிடைத்துள்ளது.

 

 •  இந்தியாவின் வேகமான நெட்வொர்க் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

 •  லாஜிஸ்டிக்ஸ் துறையில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட்ஷிப்ட் நிறுவனம் சென்னையில் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே மும்பை, ஹைதராபாத், பெங்களுரு மற்றும் அகமதாபாத் நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

 

 •  முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி நிறுவனம் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் ரூ20.33 கோடி லாபம் ஈட்டியது.

 

Current affairs

 

 • To promote innovation and entrepreneurship in agriculture, Government  launched “AGRI UDAAN” – Food and agribusiness Accelerator 2.0 programme in New Delhi.

 

 • The Bihar Government has informed that it has decided to compulsory  retirement for non – performing teachers, head master and education  department officials above the age of 50 years.  The committee is headed by      R.k. Mahajan.

 

 • India’s First Heli – Taxi service launched by Mos for civil Aviation Jayanth  Sinha in Bangalore.

 

 • First meeting of JICF for development of North – Eastern Region held in  New Delhi.

 

 • Qatar becomes first Arab country to offer permanent residency to         non – citizens.

 

 • India’s first private sector missile Sub Systems manufacturing facility  inaugurated at Hyderabad.

 

 • J.K. Rowling, the creator of Harry potter tops the ranking of the highest paid by Forbes with earnings of £72.

Call Now
Message us on Whatsapp