August 04

Date:04 Aug, 2017

August 04

                                                                                                                                                                                                   

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட் 04

                                          தேசிய செய்திகள்

 • ஜம்மு – காஷ்மிரை ஒட்டியுள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நவீன வேலிகள் அடுத்த ஆண்டு அமைக்கப்படும் என்று எல்லை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி கே.கே. சர்மா தெரிவித்துள்ளார்.

 

 • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள முகுந்த்புரா கிராமத்தில் கடந்த மாதம், விண்ணிலிருந்து பாறை வடிவில் ஒரு சிறிய கல் விழுந்தது, அக்கல் விண்கல் என்று விஞ்ஞானிகள் ஆராய்சி மூலம் உறுதியளித்தனர்.

 

 • திருவனந்தபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

 • குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள டெல்லி மேல் – சபை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது, தேர்தலில் நோட்டாவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

 

 • பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்வு செய்யும் வல்லுநர் குழுவுக்கு தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு 2100ம் ஆண்டில் இந்தியாவை வெப்ப அலைகள் தாக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வரிக்கையில் தெரியவந்துள்ளது.

 

 • நாடு முழுவதும் உள்ள 1.6 லட்சம் பாலங்களின் உறுதிதன்மை குறித்து நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் 100 பாலங்கள் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை போக்கு வரத்து துறை அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்.

                                                                                                                 பன்னாட்டு   செய்திகள்

 

 • ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்வதற்கு சுற்றுலா விசாவை இந்தியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய தூதரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 • ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் அரசு சிந்து நதிக்கு குறுக்கே 6 அணைகளை கட்டி வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய சட்ட விரோதமான செயலுக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.

 

 • இருளில் ஒளிரக் கூடிய நாணயத்தினை உலகிலேயே முதன்முறையாக கனடா வெளியிட்டுள்ளது. கனடாவின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு கனேடிய நாணய வாரியத்தினால் இந்த நாணயம் வெளியிடப்பட்டது.

 

 • வடகொரியாவை விட்டு அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 1ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

 • மாஸ்கோவுக்கு எதிராக புதிய தடகைளை அமெரிக்க நாடாளுமன்றம் விதித்துள்ள நிலையில், ரஷ்யாவுடான அமெரிக்க உறவு ‘ஆபத்தான நிலையில்’ இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

 

 • இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளது. இதனால் வெற்றிலை இறக்குமதி வீழ்ச்சியடைந்து விட்டதாக இலங்கை வெற்றிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • பூமிக்கு வெளியே வியாழனைப் போன்று பிறிதொர பிரமாண்ட கிரகத்தையும், அதன் வளிடண்டலத்தில் ஒளிரும் நீர் மூலக்கூறுகள் இருப்பதாகவும் (வாஷிங்டன்) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • சென்னையை சேர்ந்த அனந்த் பி.சந்திரஹாசன், அமெரிக்காவின் எம்.ஐ.டி யின் இன்ஜினியரிங் ஸ்கூல் டீனாக பதிவியேற்றுள்ளார்.

 

                                                                                                                                                                                                                                                                                          விளையாட்டு செய்திகள்

 • மத்திய விளையாட்டுத் துறையில் சிறந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய விருதான “அர்ஜுனா விருது” வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விருதுக்கு17 பேர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேல் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ,அமல்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

 • விளையாட்டு துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான “கேல் ரத்னா விருது” – பாரா ஒலிம்பியன் தேவேந்திர ஜஜாரியா, இந்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

 

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணியை, தூத்துக்குடி அணி வீழ்த்தியது, தொடர்ந்து 5முறை வெற்றி பெற்ற இவ்வணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

 

 • தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த சாதனையை ஐ.பி.எல் தொடரில் மேற்கிந்திய தீவுகள் நட்சத்திர வீரர் “கிறிஸ் கெய்ஸ” 30 பந்துகளில் சதம் அடித்து முறியடித்தார்.

 

 • டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று(04.08.2017) நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் கில்லீஸ் காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

 

 • 5வது புரோ கபடி 11வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

 

 • 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் “இப்போதும் நான் உலகின் அதிவேக மனிதன்” எனது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு விற்பனை 5.75 சதவீதம் அதிகரித்தது.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஒசி) லாபம் முதல் காலாண்டில் 45 சதவிதம் சரிவடைந்திருக்கிறது.

 

 • நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த கோல்கேட் – பாமோலிவ் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.136.38 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களுக்கான லாப வரம்பு தொகை(மார்ஜின்) உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், பிஎஃப், காப்பீடு, மின்னணு பணப்பரிமாற்ற மூலம் சம்பளம் ஆகிய வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் டி.ராஜ்குமார் தெரிவித்தார்

 

 • .எஸ்.டி-யில் முன்னேற்றம் இருக்கும் பற்றத்தில் வரி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

 

 • லெனோவா நிறுவனத்தின் (K8 நோட்) ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 • ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

 

Current affairs

 

 • Union Agriculture Ministry signed a memorandum of Association for setting up regional centre of International Rice Research Institute in Varanasi, Uttar Pradesh to develop high Yielding rice variety.

 

 • United States has issued a ban prohibiting its citizen travelling to North Korea.

 

 • Multi commodity exchange of India Limited (MCX) and Mahindra Agri Solution Limited signed a MOU to provide agriculture related price information.

 

 • Hassan Rouhani was officially sworn in as the president of Iran for second term.

 

 • InCred, the Mumbai – based new age financial services group, has signed up Rahul Dravid as it Brand ambassador.

 

 • The Punjab state government to the post of Deputy Superintendent of Police (DSP) in the state police.

 

 • The Indian Army has developed a mobile application app “Humraaz” through which serving soldiers can track their details posting and promotion.

 

 • Christopher Wray confirmed as the director of Federal Bureau of Investigation.

 

 • Lt. General Abhay Krishna appointed as the chief of Indian Army Eastern command.

Call Now
Message us on Whatsapp