August 03

Date:03 Aug, 2017

August 03

                                                                                                                                                                                                   

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    ஆகஸ்ட் 03

                                          தேசிய செய்திகள்   

 • கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை இனி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ‘பெயில்’ ஆக்கக் கூடாது என்றும் அவர்களை கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) பெறச் செய்ய வேண்டும் என்ற சட்டம் 2010ம் ஆண்டு அமலுக்கு வந்தது தற்போது அத்திட்டத்தை மத்திய அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளது.

 

 • வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில், லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி என்ற அமைப்பின் கிளையை தமிழகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஆர். சீனிவாசன் தெரிவித்தார்

 

 • ஆஸ்திரேலியா, பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழியை ஆஸ்திரேலிய மொழியாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

 • சோழிங்க நல்லூரில் ஆர்டிஓ அலுவலகம் கட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம அனுமதி வழங்கியுள்ளது.

 

 • ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகளின் ஆணையராக வி.கே. ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு எரிசக்தி நிதி மற்றும் கட்டமைப்பு தலைவர் பதவி விக்ரம் கபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 • மதுரை வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி இடையே இரட்டை மின்சார ரயில்பாதை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அறிவியல் அமைப்புடன் இணைந்து ரஷியா கூட்டு செயற்கைக்கோள் திட்டம் செயல்படத்தப்பட உள்ளதாக ரஷிய துணைத் தூதரக இயக்குநர் மிக்கேல் கோர்போடா தெரிவித்துள்ளார்.

 

 • காவிரியில் கழிவு நீர் கலப்பதை ஆய்வு செய்ய கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட கூட்டுக்குழு அறிமுகம் செய்யப்பட்டது. இக்கூட்டுக்குழு நேரில் சென்று காவிரி பாயும் இடங்களை ஆய்வு செய்து அவ்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 பன்னாட்டு   செய்திகள்
 • அமெரிக்கபுலனாய்வுஅமைப்பின்(எஃப்.பி.ஐ) புதிய இயக்குனராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • அமெரிக்க பணியாளர்களுக்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டினரை பணியமர்த்தும் நோக்கில், ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு அந்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்துகின்றனர்.

 

 • தென் கொரியா மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக (இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணி அமைப்பாளர்) உபுல் தேஷப்பரிய தெரிவித்துள்ளார். தொழில் வாய்ப்புகளை பெற்று, வேறு தொழில்சாலைகளில் சட்டவிரோதமாக செயல்படுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

 • எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமானால் சிக்கிம் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவிடம் சீனா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

 

 • தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பற்றாக்குறையான தாய்ப்பாலைக் கொடுத்தால் இந்திய பொருளாதாரம் 14 பில்லியன் (1400 கோடி) டாலர்கள் குறைக்கக் கூடும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பதாக கூறி கத்தார் உடனான தூதரக உறவை ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 4 அரபு நாடுகள் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கத்தார் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள இத்தடைகள், உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களை மீறி அமையவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

 

 • அமெரிக்காவின் பொருளாதார தடைகள் : முழுமையான வர்த்தக ரீதியிலான போர் ஒன்றை துவக்கும் மற்றும் பொருளாதார தடை விதிக்கும் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரஷ்ய பிரதமர் மெத்வதேவ் கூறியுள்ளார்.

 

 • வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை தடுப்பதற்கு பல திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   விளையாட்டு செய்திகள்

 • டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் பரப்பரப்பான ஆட்டத்தில் திருவள்ளுர் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

 

 • 91 வது எம்.சி.சி.முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி : நேற்று(02.08.2017) நடந்த ஒரு ஆட்டத்தில் ஹாக்கி தமிழ்நாடு அணி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அணியை வீழ்த்தியது.

 

 • ஆசிய தடகளப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கேரள வீராங்கனை சித்தராவுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவிதொகையாகவும் மற்றும் தினம் ரூ.500 படியாக வழங்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஏ.ஜி.அலுவலக பணியில் இருந்து கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட கேரள கால்பந்து வீரர் வினீத்துக்கு மாநில அரசு பணி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

 • 5-வது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் – ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் 27-27 என்ற புள்ளிகள் கணக்கில் ‘டை’யில் முடிந்தது.

 

 • நியூஸிலாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பாட்மிண்டன் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்திற்கு இந்தியாவின் பிரணாய், காஷ்யப், சவுரப் வர்மா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

 

 • 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சென்னை கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு, தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொருளாளர் வி.பி.நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

 

 • டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி தோல்வி அடைந்தது.

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • தக்காளியை பாதுகாக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘ஸ்டேட் பேங்க் ஆப் டொமாட்டா’ என்ற பெயரில் தக்காளிக்கான வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

 

 • ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் சர்வதேச அளவிலான உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • நீல வண்ணத்தில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

 

 • பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஜுன் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.343 கோடியாக இருக்கிறது.

 

 • சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.

 

 

Current affairs

 • The ministry of Electronics and Information Technology has appointed an expert headed by Justice B.N. Srikrishna to study issues related to data protection.

 

 • India and Somalia signed an agreement on transfer of sentenced person.

 

 • World Bank has said that India is allowed to construct hydroelectric power facilities on tributaries of Jhelum and Chenab River.

 

 • BRICS trade ministers meeting held in shanghai.

 

 • SEBI has set up a committee on fair market conduct it will suggest measures for improving Surveillance of the markets and strengthen rules for trade.

 

 • Former Indian captain hockey Dhanraj Pillay was honoured with ‘Bharat Gaurav’ by East Bengal football club.

 

 • SEBI has approved the appointment of Dhirendra swarup as the chairman of a Board of directors of the Bombay stock Exchange.

 

 • Sanjay Baru appointed as secretary General of the Federation of Indian chambers of commerce and Industry.

 

 • Peter O’ Neill has been reappointed as prime minister of Papua New Guinea.

 

 • Scientist is U.S has found a method to use curcumin the bioactive compounds of turmeric to treat cancer in children.

 

 • Government launched e – RAKAM Portal (Rashtriya Kisan Agri Mandi) to provide a platform to sell agricultural produce and strengthen the agriculture oriented Indian economy.

 

Call Now
Message us on Whatsapp