August 02

Date:02 Aug, 2017

August 02

                                                                                                                                                                                                   

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    Mf];l; 02

                                          தேசிய செய்திகள்

 • கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான மூன்று ஒப்பதங்கள் : இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.

 

 • ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வரி மற்றும் தீர்வையில் 90 சதவீதம் (7 நாட்களுக்குள்) அவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என மத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் துறை முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் கூறியுள்ளார்.

 

 • கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள், குறைந்தப்பட்சத் தகுதியான பி.எட். படிப்பை நிறைவு செய்ய கூடுதல் மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

 • சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஃபெப்சி தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

 

 • பால் நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது என்ற தடையை மீறி, ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தால், சம்பந்த பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 • தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான உத்தேச அட்டவணையை உயர் நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் வைத்து தேர்தல் அணையம் நேற்று (01.08.17) தாக்கல் செய்தது.

 

 • இந்திய சாலைகளில் அதிவேகமாக இயங்கும் வாகனங்களை தடை செய்யவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற கருத்திற்கிணங்க, அதிவேகமாக செயல்படும் வாகனங்களை அல்ல அதிவேக திறன் கொண்ட எஞ்சின்களை தயாரிக்கும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களை தடை செய்யலாம் என்று மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

 

                                                                                                                 பன்னாட்டு   செய்திகள்

 • பாகிஸ்தானின் இடைகாலப் பிரதமராக “ஷாஹித் அப்பாஸி” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • வறட்சி காரணமாக காட்டு மிருகங்களும் குடிநீர் பிரச்சனையை எதிர்கொள்கிறது. எனவே காட்டு மிருகங்களுக்கு உதவீடும் வகையில் தகர மற்றும் பிளாஸ்டிக் பரல்கள் மூலம் குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை அரசு அறிமுகம் செய்துள்ளது.

 

 • கடந்த 2007ம் ஆண்டிலிருந்து, 2017 ஜுன் காலம் வரைக்கும் ஹெச்-1பி விசாவுக்காக (யுஎஸ்சிஐஎஸ்)  அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைப் பிரிவிடம் 34 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 21 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

 

 • சீனாவின் ஜாங்ஜியாகு நகரில் 2022ஆம் ஆண்டு பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு நகரை மேம்படுத்தும் விதமாக போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் பாதாள புல்லட் ரயில் பாதையை சீனா அமைத்து வருகிறது.

 

 • அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக “ஜான் கெல்லி” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • நியூசிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஜெசிந்தா ஆன்டர்ன் நியமிக்கப்பட்டுள்ளார்

 

                                                                                                                 விளையாட்டு செய்திகள்

 • டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் கில்லீசை வீழ்த்திய தூத்துக்குடி அணி தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றது

 

 • ஐ.சி.சி. டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

 

 • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜுக்கு ஐதராபாத் பேட்மிண்டன் சங்க துணைத்தலைவர் சாமுண்டேஸ்வரநாத் சொகுசு காரை பரிசாக வழங்கினார்.

 

 • 91வது எம்.சி.சி.முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி, ஓ.என்.ஜி.சி. அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 முறை வெற்றிப் பெற்றது.

 

 • புரோ கபடி லீக் போட்டி – 7 ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியை, குஜராத் ஃபார்ச்சூன்ஸ் அணி வீழ்த்தியது

 

 • நியூஸிலாந்து ஓபன் கிராண்ட் ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிணராய், பி.காஷ்யப் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • மலேசிய அணிக்கு எதிரான மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

 

 • துருக்கியில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான 23வது சம்மர் ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம் உட்பட 4 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.

 

                                                                                           பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • ரேஷன் கடைகளில் அரிசி கிலோ ரூ.3, கோதுமை கிலோ ரூ.2, உமி நீக்கப்படாத பருப்பு உள்ளிட்ட வேறு சில தானியங்கள் கிலோ ரூ.1க்கும் அடுத்தாண்டு வரை வினியோகிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ.41 குறைந்துள்ளது.

 

 • புற்று நோயால் பாதிக்கப்படுவோர் பலன் அடைய குறைந்த பிரீமியம் தொகை கொண்ட புதிய காப்பீட்டு திட்டத்தை ‘எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • ஆசிய அளவில் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பாணி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 

 • ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 14.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 

 • ஐடிசி நிறுவனத்தின் சார்பில் (நாட்டு மாட்டு பால் சேர்த்து உருவாக்கிய)சன்ஃபீஸ்ட் ஏ2 பிஸ்கெட் அறிமுகம் செய்யப்பட்டது.

 

 • டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் விற்பனை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

Current Affairs

 

 • Border security force that signed MOU with National Skill Development Corporation on Skill Development

 

 • Sam Shepard Pulitzer Prize winning playwright and Oscar nominated actor passed away

 

 • The supreme court has imposed a ban on the use of these five harmful metals in firecrackers Lead, Mercury, Lithium, Arsenic and Alimony

 

 • Donald Trump honoured James Mecloughan with the medal of honour for Risking his life to Save the Wounded during the Vietnam War

 

 • India signed a new bilateral agreement on Trade commerce and Transit with Bhutan

 

 • Marian Diamond neuroscientist who studied Albert Einstein’s brain and died recently

 

 • The Union Ministry of Housing and Urban affairs released the Swachh Survekshan 2018’s anthem ‘Swachhata Ki Jyot Jagi Hai’ the anthem is scripted by Prasoon Joshi. 

 

Call Now
Message us on Whatsapp