Today TNPSC Current Affairs May 31 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

மே 31

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • ஐ.நா அமைதி படையில் உயிர் தியாகம் செய்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஐ.நா அமைதி படைக்கு அதிக வீரர்களை அனுப்பிய நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

 

 • உலகின் மிகப்பெரிய வணிக விமானத்தை சிங்கப்பூரில் இருந்து நியூஜெர்சி நகர் வரை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

 

 • நிபா வைரஸ் பரவி வரும் காரணத்தினால் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

 

 • பாக்டீரியா நோயை தடுக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பசுக்களை கொலை செய்ய நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • இலங்கையில், நிலா மற்றும் நிலா மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் இலங்கை சர்வே துறை 18 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை புவியியல் வரைபடத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டுள்ளது.

 

 • நேபாள பிரதமர், அந்நாட்டு அமைச்சர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் படி அமைச்சர்கள் அனைவரும் 6 மாத காலத்தில் மடிக்கணினிகளை இயக்க பழக வேண்டும். அவ்வாறு பழகாவிட்டால் அவர்களுடைய பதவி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அதிக பட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 3 லட்சம் ரியால்கள்(ரூ.54 லட்சம்) அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை சவுதி அரேபிய அரசு இயற்றியுள்ளது.

 

 • இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையே, பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அறிவியல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது, இரயில்வே, சுகாதாரத் துறை உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

 

 • சீனாவின் ஆழ்கடலில் 30 வகை புதிய உயிரினங்களை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

 • ஒரிஸாவில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இனி கட்டாயம் கைத்தறி சேலை உடுத்தி வர வேண்டும்(கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில்) அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • டெல்லியில் உள்ள வையு சேனா பவனில் இரண்டு நாள் விமானப் படை தளபதிகள் மாநாட்டை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

 

 • இந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் இணைந்து உத்தரகாண்டில் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டது. இந்த கூட்டு இராணு பயிற்சி சூரிய கிரண் என்று அழைக்கப்படுகிறது.

 

 • ஜுன் 15ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் தர்ஷன் வனத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலையில், தபால் வாயிலாக படித்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தகுதி பெற்றவர்கள் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

 

 • பெங்களுருவில் ஜுன் 16, 17ம் தேதிகளில் உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • போட்டி நடுவர்கள், ஸ்கோர் கணக்கிடுபவர்கள், இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு, விடியோ ஆய்வு நிபுணர்கள் ஆகியோருக்கு 2 மடங்கு ஊதிய உயர்வு வழங்க பிசிசிஐ தீர்மானித்துள்ளது.

 

 • சர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஆசிய டிவிஷன் 1’ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி களம் இறங்க உள்ளது.

 

 • இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா, அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 • இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • புரோ கபடி லீக், 6வது சீசன் அக்டோபர் மாதம் 19ம் தேதி துவங்குகிறது. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்றும், இன்றும் மும்பையில் நடந்து வருகிறது.

 

முக்கிய தினங்கள்

 

 • மே 31 – சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • இந்தியாவின் ஒட்டுமொத்த உள்ளநாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை (ஜிடிபி) தரச்சான்று நிறுவனவான ‘மூடி’ஸ் 7.3 சதவீதமாக குறைத்துள்ளது.

 

 • ஆர்-காம் நிறுவனம் மற்றும் துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்பிராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் போன்றவற்றின் திவால் நடவடிக்கைக்கு தேசிய நிறுவனங்கள் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

 

 • சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் மாத காலாண்டு நஷ்டம் ரூ.3,606.73 கோடியாக அதிகரித்துள்ளது.

 

 • இந்தியாவில், பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.79 ஆயிரம் கோடி இழப்பை அடைந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன்.

இறப்பு செய்தி

 

 • மகாராஷ்டிரா மாநில வேளாண்துறை அமைச்சர் பண்டுரங் புத்தலிக் பண்ட்கர் காலமனார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • Joint Military Exercise SURYA KIRAN-13 Begins in Uttarakhand
 1. The joint military exercise SURYA KIRAN-13 between India and Nepal began at Pithoragarh in Uttarakhand. The military exercise is a biannual event which is conducted alternatively in Nepal and India every six months.

 

 • India Releases Rs33.10 Cr to Nepal for 2 Road Projects
 1. India has released 33.10 Crore rupees to Nepal towards the cost of two road packages of Birgunj-Thori Road being implemented under Postal Highway Projects in Nepal with Government of India’s grant assistance.

 

 • India and World Bank Signs $500 Million Additional Financing for PMGSY
 1. The Government of India and the World Bank signed a $500 million loan agreement to provide additional financing for the Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) Rural Roads Project, implemented by Ministry of Rural Development, Govt. of India, which will build 7,000 km of climate resilient roads, out of which 3,500 km will be constructed using green technologies.

 

 • 3rd Meeting of India-UK Home Affairs’ Dialogue Held in New Delhi
 1. The Third Home Affairs’ Dialogue between India and U.K. was held in New Delhi. The Dialogue covered a wide range of issues including cybersecurity, women safety, organized crime, terror financing etc.

 

 • World No Tobacco Day: 31 May
 1. Every year, on 31 May, World Health Organization and partners mark World No Tobacco Day (WNTD).  The theme of World No Tobacco Day 2018 is “Tobacco and heart disease.”

 

 • World’s Largest International Maritime Exercise RIMPAC
 1. As many as 26 countries, including India, will participate in the biennial Rim of the Pacific, RIMPAC military exercise, in and around the Hawaiian Islands and Southern California. The announcement was made by the Pentagon.

 

Awards

 

 • Indian botanist Kamaljit S. Bawa (president of Bengaluru-based non-profit Ashoka Trust for Research in Ecology and the Environment) received the prestigious Linnean Medal in Botany from the Linnean Society of London.

 

 • Kerala cartoonist Thomas Antony has won an international award, in the best caricature category. Antony is among the nine winners at the 13th edition of the World Press Cartoon awards, instituted by an organisation based in Lisbon, Portugal.

 

 • Indian star cricketer Yuvraj Singh has been awarded the ‘most inspiring icon of the year for Social Welfare’ award by the Dadasaheb Phalke International Film Festival (DPIFF) for his exemplary contribution in the field of social welfare.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube