Today TNPSC Current Affairs May 28 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

மே 28

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.

 

 • சீனாவின் குயாங் நகரில் 2வது தொழில்நுட்ப(ஐ.டி) வளாகத்தை இந்தியாவின் நாஸ்காம்(மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம்) அமைத்துள்ளது.

 

 • சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட கூட்டணி நாடுகளுடன் ராஜீய ரீதியான மோதலில் ஈடுபட்டுள்ள கத்தார், அந்த நாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு தடை விதித்துள்ளது.

 

 • அமெரிக்காவில், 2019ம் ஆண்டு இராணு பட்ஜெட்டுக்கு ரூ.48,55,883 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 • எகிப்தில் இணையதளத்தில் யூடியுப் சேவை ஒரு மாதம் இயங்க கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • டெல்லி மற்றும் மீரட் இடையே ரூ.11,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது ஸ்மார்ட் நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

 

 • மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீராக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தகவல்களை அளிக்கத் தவறிய காரணத்தினால் டெல்லி அரசுக்கு தேசிய பசுமைத் தீர்பாயம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

 

 • ஆஸ்திரேலியாவின் ரோமெ 2 ரியொ என்ற அமைப்பு உலக அளவில் மிகக் குறைந்த மலிவு விலையில் பயணம் அளிக்கும் விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 2வது இடத்தையும், இண்டிகோ நிறுவனம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது.

 

 • மத்திய அரசு விரைவில் புதிய மின்னணுக் கொள்கையை இறுதி செய்ய உள்ளது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • 2018 ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

 

 • ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

 

 • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நேற்று(27.05.2018) தொடங்கியது. இந்த போட்டிகள் ஜுன் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: May 2018 – Science and Technology News Image

 

 • நியூயார்க்கில் ரெமஸ் 6000 என்ற நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 310 வருடம் பழைமை வாய்ந்த சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது.

 

 • 11 லட்சம் பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட விண்கலத்தை, சூரியனுக்கு அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • ஸ்டார் அப் எனப்படும் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்திக் கீழ் தெரியவந்துள்ளது.

 

 • ஹெலிகாப்டர் போல் தரையிறங்கி, ஏறும் விடிஓஎல் விமானத்தின் மாதிரியை உருவாக்க ஐஐடி-கான்பூர் ரூ.15 கோடிக்கு விடிஓஎல் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், முதல் கட்டமாக இயற்கை எரிவாயு மற்றும் விமான பெட்ரோலை ஜிஎஸ்டியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

இறப்பு செய்தி

 

 • நிலவில் நான்காவதாக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் ஆலன் பீன்(87) காலமானார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • Sangeeta Bahl Becomes Oldest Indian woman to Scale Mount Everest
 1. Sangeeta Bahl, a 53-year-old former model, has become the oldest Indian woman to conquer Mount Everest.
 2. Bahl, who currently resides in Gurugram, scaled the peak with the help of two Sherpas and was felicitated at the Indian embassy in Kathmandu.

 

 • Queen Maxima of the Kingdom of the Netherlands who is also the United Nations Secretary General’s Special Advocate for Inclusive Finance for Development has arrived in New Delhi on a four-day visit to India.

 

 • BCCI, UN Environment Sign Agreement To Promote ‘Green’ Cricket
 1. The BCCI and UN Environment signed an agreement to promote ‘green’ Cricket in India. BCCI acting Secretary Amitabh Choudhary and Erik Solheim, Executive Director of UN Environment, signed a letter of intent in Mumbai.

 

 • Film actor Akshay Kumar launched the twin pit toilet technology campaign in New Delhi. The actor appealed everybody to spread the awareness on the issue and make the cleanliness drive more effective.

 

International News

 

 • India Launches Its 2nd IT Corridor In China
 1. India launched its second IT corridor in China to cash in on the burgeoning Chinese software market. The National Association of Software and Services Companies (NASSCOM) has established one more Sino-Indian Digital Collaborative Opportunities Plaza (SIDCOP) platform in China.

 

 • Colombia to be NATO’s 1st Latin American ‘Gobal Partner’
 1. Colombia would be formally joining the North Atlantic Treaty Organization (NATO). The announcement was made by the Colombian President Juan Manuel Santos.

 

 • Hamburg To Host 2018 Global Wind Summit
 1. The first edition of the Global Wind Summit will be held in Hamburg, Germany in September 2018. The four-day event will see speakers from about 100 countries, including India, China, the US, Spain and Denmark.
 2. The conference on wind is the largest and most important meeting of the wind industry worldwide. The event combines two conferences, WindEnergy Hamburg and WindEurope.

 

 • Former Pakistan Chief Justice Nasirul Mulk was appointed as the interim Prime Minister of the country until the general elections are held on July 25.

 

Sports News

 • Australian Formula One racer Daniel Ricciardo handed Red Bull a victory in their 250th race in the Formula One at Monaco GP.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube