Today TNPSC Current Affairs May 24 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 24

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • உலகளவில் சுற்றுலா பயணியரை கவர்ந்த தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது. (கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் வாட் கோவில் முதல் இடத்தை பிடித்துள்ளது)

 

  • ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரில் வரும் 31-ம் தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 

  • சவூதி அரேபியாவில் இன்று முதல் ரியால் காயின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா நாணய ஏஜென்சி தெரிவித்துள்ளது.

 

  • தமிழகத்தின் விஜிபி உலக தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 36வது திருவள்ளுவர் சிலை நியூயார்க்கில் உள்ள மிடில் வில்லேஜ் கிறிஸ்தவ தமிழ்க்கோவில் வளாகத்தில் மே 12ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.

 

  • போரெய் நீர்மூழ்கி கப்பலில் இருந்து அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டு ரஷ்யா சோதனை செய்துள்ளது.

 

  • பொருளாதார மேதையும், கம்யூனிசத்தின் தந்தை என்றும் போற்றப்படும் கார்ல் மார்க்சின் ஒரே ஒரு கையெழுத்து இடம்பெற்ற ஒரு பக்கத்தின் பிரதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஏலத்தில் ரூ.3.58 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • பேருந்து நிறுத்தங்களில் இருந்தவாறே பேருந்துகளின் வருகை குறித்த நேரத்தை பயணிகள் தங்களது ஸ்மார்ட்போன்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய வகையில் மாற்றம் செய்யப்பட்ட ‘பூச்சோ” என்னும் செயலியை டெல்லி அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.

 

  • பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா நாடுகளுக்கு மே 29 முதல் ஜூன் 2ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

  • பிரதமர் அலுவலகமும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து சமூக ஊடகங்களை கண்காணிக்க தகுந்த வல்லுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

  • 2017-18ம் நிதி ஆண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 10 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

  • நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

  • ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் நாளை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் லிவர்பூல் அணிகள் மோத உள்ளன.

 

  • டென்னிஸ் விளையாட்டில் நடக்கும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் வரும் 27ம் தேதி துவங்க உள்ளன.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • வறட்சி, பனிமலைகள் உருகுவது, கடலில் நீரின் அறவு அதிகரித்து வருவது ஆகியவற்றை கண்காணிப்பதற்காக 2 செயற்கைக்கோள்களை நாஸா விண்ணுக்கு செலுத்தியுள்ளது.

 

  • வயல்களில் பயிர்களின் வளர்ச்சியை கண்காணிப்பது, கேஸ் டிக்கேஜை கண்டறிவது போன்ற பணிகளை செய்யும் விதத்தில் பூச்சு வடிவிலான ரோபோவை மும்பையைச் சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞன் கண்டுபிடித்துள்ளார்

 

முக்கிய தினங்கள்

 

  • மே 24 – உலக தைராய்டு தினம்

 

விருதுகள்

 

  • போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஓல்கா தோக்கரசுக் இந்த ஆண்டின் புக்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • இந்திய அரசு கிரிப்டோகரன்சி டிரேடிங் சேவை மீது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்டி) வரி விதிக்கலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

 

  • ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, ஷெல் ஆகிய 3 நிறுவனங்களும் அரசின் பங்கீடான 3.8 பில்லியன் டாலர் தொகையை உடனடியாகச் செலுத்த எண்ணெய் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

  • உலகளவில் அதிகக் கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இன்னும் 10 ஆண்டுகளில் கூடுதலாக 238 தனிநபர் உருவாக இருப்பதாக அரப்ஆசியா பாங் குளோபல் வெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  • மாநிலத்துக்குள், ‘இ-வே பில்’ நடைமுறைக்கு வந்த பின் சரக்குகளை கொண்டு செல்ல ‘பில்’ இல்லையெனில் வரியுடன் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என வணிக வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

  • நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்ததை அடுத்து இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

 

 

English Current Affairs

 

National News

 

  • Prime Minister of the Kingdom of Netherlands Mark Rutte has arrived in India for a two-day official visit. Rutte is scheduled to meet a Business Delegation at Hotel Taj Diplomatic and then participate in the Clean Ganga Event.

 

  • Prime Minister had chaired twenty-sixth interaction through PRAGATI. He Reviewed progress of handling and grievance redressal related to post offices and railways.

 

  • India-Nepal Joint Military Exercise SURYA KIRAN To Be Held In Uttarakhand
  1. Joint Military Exercise SURYA KIRAN-XIII between India and Nepal will be conducted at Pithoragarh, Uttarakhand.
  2. Exercise SURYA KIRAN is a biannual event which is conducted alternatively in Nepal and India.  The aim of this exercise is to conduct battalion level joint training with emphasis on counter-terrorism operations in mountainous terrain.

 

  • NITI Aayog and Sushant Singh Rajput have decided to collaborate towards promoting two major initiatives of NITI Aayog, promotion of BHIM and the Women Entrepreneurship Platform.

 

  • A three-day Smart Cities India 2018 Expo, began in New Delhi.

 

Awards

 

  • Nari Shakti Puraskar 2017 Presented to INSV Tarini Team
  1. Minister for Women and Child Development, Smt. Maneka Sanjay Gandhi presented the prestigious Nari Shakti Puraskar 2017 to the members of the INSV Tarini team in New Delhi. The Six-member all-women team led by Lieutenant Commander Vartika Joshi have received the Puraskar from the Minister.       
  2. The crew of the Indian Navy Sailing Vessel ‘Tarini’ is a part of the Indian Navy’s unique project ‘Navika SagarParikrama’.

 

Ranks and Reports

 

  • India Stands 44th In Competitive Rankings, USA Tops: Report
  1. India ranks 145th among 195 countries in terms of quality and accessibility of healthcare, according to a Lancet study. In 2016, India’s healthcare access and quality scored at 41.2 (up from 24.7 in 1990).

 

  • The top 3 countries with the highest levels of healthcare access and quality in 2016:
  1. Iceland (97.1 points),
  2. Norway (96.6),
  3. The Netherlands (96.1).

­