Today TNPSC Current Affairs May 23 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 23

தமிழ்

உலக செய்திகள்

 

  • தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக லண்டனிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டின் முன்பு தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

  • மலேசியாவின் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமாரானார். இந்த நிலையில் மலேசிய அமைச்சரவையில் எம். குலசேகரன் என்ற தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது. இதைப் போலவே மலேசிய நாட்டின் முதல் சீக்கிய அமைச்சராகிறார் கோவிந்த் சிங் தியோ என்ற வழக்கறிஞர்.

 

  • தங்களது நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது வரலாறு காணாத அளவு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ சூளுரைத்துள்ளார்.

 

  • அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு பதிலடியாக அந்த நாட்டுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு மசோதாக்களை ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

 

  • நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்த ஷெர்பா இனத்தவர்கள் 2பேர் உயிரிழந்தனர். இத்துடன் இந்த எவரெஸ்ட் மலையேற்றப் பருவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

  • நாட்டின் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான ராஜா ராம் மோகன் ராயின் 246-வது பிறந்த நாளை முன்னிட்டு இணையதள தேடுபொறியான கூகுள் நேற்று டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது. கனடாவின் டொரன்டோ நகரைச் சேர்ந்த வடிவமைப்பாளர் பீனா மிஸ்திரி இந்த டூடுலை உருவாக்கியுள்ளார்.

 

  • இந்தியாவில் ஜாதி மத ரீதியிலான பாரபட்சத்துக்கு என்றுமே இடம் கிடையாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

  • கர்நாடக மாநிலத்தின் 24வது முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்கிறார்.

 

  • கர்நாடக எம்.பி. பதவியில் இருந்து விலகிய எடியூரப்பாவின் ராஜினாமா மனுவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

 

  • கடந்த 2016-17 நிதியாண்டில் 32 மாநிலக் கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வருவாய் ரூ.321 கோடியாக உள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த சமாஜவாதி கட்சி ரூ.82.76 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

 

  • தமிழக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குத் தேவையான 20 ரேக்குகள் நிலக்கரியை ஒதுக்க மத்திய நிலக்கரி ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

 

  • விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணப் பிடித்தம் கிடையாது என புதிய நடைமுறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான வரைவுத் திட்டத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

  • நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளத்தில் 10 பேர் பலியாகினர்.

 

  • உற்பத்தி பொருள்களின் விலை ஏற்ற, இறக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் தவிர்க்கும் நோக்கில் விவசாய ஒப்பந்த சட்ட மாதிரியை மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் வெளியிட்டார்.

 

  • பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை தொடர்ந்து 2வது நாளாக வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. ஒடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் இந்த ஏவுகணை சோதனை மே 22 காலை 11.45 மணிக்கு நடைபெற்றது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை தனது இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது.

 

  • மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரான திக் விஜய் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

விளையாட்டுச் செய்திகள்

 

  • சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

 

  • ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்று முதல் தகுதி ஆட்டத்தில் சென்னை அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

  • ரஷ்யாவில் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக டாட்டன்ஹாம் முன்னாள் வீரர் ஹாரி கேன் (24) கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

  • 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு பதக்கம் வெல்லும் சிறந்த வீரர்களை உருவாக்கும் வகையில் 135 இளம் வீரர்களுக்கு துப்பாக்கி சுடுதலில் சிறப்பு பயிற்சி அளிக்க வீரார் ககன் நரங் திட்டமிட்டுள்ளார். புணேயில் உள்ள ககன் நரங் விளையாட்டு வளர்ச்சி மையத்தில் இச்சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்

 

  • கரூரில் மே 22 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் புதுதில்லி இந்தியன் ரயில்வே அணி வென்றது.

 

  • மும்பையில் நடைபெற்ற மகளிர் டி20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் டிரையல்பிளேசர்ஸ் அணியை சூப்பர்நோவாஸ் அணி வென்றது.

 

  • ஐபிஎல் தொடரில் வெளியேற்றும் சுற்றில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

வணிகச் செய்திகள்

 

  • வராக்கடன் அதிகரிப்பால் கடந்த காலாண்டில் ரூ7718 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

 

  • யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.1003 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

 

  • கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஏழு மாதங்களில் 39.36 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் பாதிக்கு மேல் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உருவாக்கப்பட்டிருப்பதாக பிஎப் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

 

  • இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரி விஷhல் சிக்கா கடந்த நிதியாண்டில் ரூ 12.92 கோடி அளவுக்கு சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றிருக்கிறார்.

 

  • கிNhர் பியானி தலைமையிலான பியூச்சர் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பார்தி குழுமம் வெளியேறி உள்ளது

 

  • வாடகை கார் செயலி நிறுவனமான ஓலா ஆஸ்திரேலியாவில் மேலும் மூன்று நகரங்களில் விரிவாக்கம் செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஓலா நிறுவனம் ஆஸ்திரேலியாவில் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் மெல்பர்ன், பெர்த் உள்ளிட்ட ஆறு நகரங்களில் செயல்பாட்டை தொடங்கியது. அதனை தொடர்ந்து தற்போது பிரிஸ்பன், கோல்ட்கோஸ்ட் மற்றும் கான்பெரா ஆகிய 3 நகரங்களில் விரிவாக்கம் செய்திருக்கிறது.

 

  • மாநிலத்துக்குள் நடைபெறும் சரக்கு போக்குவரத்துக்கான இ-வே ரசீது நாடு முழுவதும் ஜூன் 3-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

 

 

English Current Affairs

 

National News

 

  • Important Cabinet Approvals- 23rd May 2018
  1. MoU between India and Angola for promoting bilateral cooperation in the field of Electronics and Information Technology.
  2. MoU signed between India and France in the field of Renewable Energy.
  3. MoU between India and Morocco on India-Morocco cooperation in Renewable Energy.
  4. MoU between India and Turkey on trade in poppy seeds to ensure quick and transparent processing for import of poppy seeds from Turkey.
  5. MoU between India and Singapore on Cooperation in the field of Personnel Management and Public Administration
  6. The Union Finance Ministry has tied up with 40 entities including Flipkart, Swiggy, Patanjali and Amul for extending loans to small entrepreneurs under the Pradhan Mantri Mudra Yojana (PMMY).

 

Appointments

 

  • State-run power equipment maker Bharat Heavy Electricals Ltd (BHEL) has appointed Pravin L. Agrawal as a part-time official director on its board.

 

Economy News

 

  • Bank of Baroda has successfully located most of its operational activities at a shared service centre (SSC) at the GIFT City near Ahmedabad.

 

Awards

 

  • English Translation of Polish Novel ‘Flights’ Wins Man Booker Prize
  1. Polish author Olga Tokarczuk has won the Man Booker International Prize for her novel ‘Flights’. The novel, translated by Jennifer Croft, interweaves narratives of travel with explorations of the human body.

­