Today TNPSC Current Affairs May 22 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 22

தமிழ்

உலக செய்திகள்

 

  • ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் திக் யாக் மாவட்டத்தில் 7 பேரும், ஜகாட்டு மாவட்டத்தில் 7 பேரும் பலியாகினர். இதில் பலியாகிய 7 பேரும் பாதுகாப்பு படையினர் என தெரிவிக்கப்பட்டது.

 

  • துருக்கியில் 2016- ஆம் ஆண்டு அதிபர் எர்டோகனுக்கு எதிராக நடத்தப்பட்ட ராணுவ புரட்சியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் 104 பேருக்கு ஆயள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

  • அருணாசல பிரதேச எல்லையில் லுன்சே என்ற இடத்தில் ரூ 4. லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தை சீனா அத்துமீறி தோண்டி சுரங்கம் வழியாக இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

  • நிலவின் மர்மமான பக்கங்களை ஆராய்ந்து பூமிக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் செயற்கைக் கோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இது மாபெரும் லட்சிய இலக்கின் ஒரு பகுதியாகும். இச்செயற்கைக் கோளுக்கு கியூகியோ (மக்பீ பாலம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. 400 கிலோ எடை கொண்ட இச்செயற்கைக்கோள் 3 ஆண்டுகளுக்கு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

  • தேயிலையிலிருந்து பெறப்படும் குவாண்டம் துகள்கள் மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கே.எஸ். ரங்கசாமி கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

 

  • பாகிஸ்தானில் கராச்சி நகரில் கடந்த 3 நாட்களாக அனல் காற்று வீசியதில் 65 பேர் பலியாகினர்.

 

  • ஏமன் நாட்டில் ஹவுதி இயக்கம் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஏமனின் மேரிப் நகரில் ஹவுதி இயக்கம் கத்யூஷா ரக ஏவுகணைகளை கொண்டு நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியாகி உள்ளனர்.

 

  • ரஷ்யாவின் சோச்சியில் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து சர்வதேச விவகாரங்கள் குறித்தும், இந்தியா – ரஷியா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

 

  • சீனாவிலுள்ள அனைத்து மசூதிகளிலும் கட்டாயமாக அந்த நாட்டு தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். சீன அரசியல் சாசனம், பொதுவுடைமை கொள்கைகள் ஆகியவை பயிலப்பட வேண்டும் என சீன அரசுக்கு சொந்தமான இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.

 

  • மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மீதான “1 மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் (1எம்டிபி)’ புகார் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சிறப்புக் குழுவை அந்நாட்டு மத்திய அரசு அமைத்துள்ளது.

 

  • அமெரிக்காவைப் பின்பற்றி பராகுவேயும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை ஜெருசேலம் நகருக்கு மாற்றியுள்ளது.

 

  • மலேசியாவின் முதல் சீக்கிய அமைச்சர் என்ற பெருமையை கோவிந்த் சிங் தேவ் (45) பெற்றுள்ளார். இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட இவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

  • கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் கபீல்கான் விருப்பம் தெரிவித்துள்ளதை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார்.

 

  • மேற்கு திரிபுராவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

  • வலைதளங்களில் இருக்கும் ஆபாச வீடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்யாத காரணத்தினால் கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

 

  • முதல் முறையாக நிபா வைரஸ் (விலங்குகள் வாயிலாக மனிதர்களுக்கு பரவுவது) மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தாக்குதல் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டது. 1998ம் ஆண்டு மலேசியாவின் காம்பங் சுங்காய் நிபா என்ற கிராமத்தில் முதல் முறையாக வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டது. உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதனால் கிராமத்தின் பெயரில் வைரசுக்கு நிபா என பெயர் வந்துள்ளது. ‘நிபா’ வைரசுக்கு எதிரான போராட்டத்தில் கேரளா உலக சுகாதார அமைப்பின் உதவியை நாட பரிசீலனை செய்து வருகிறது.

 

  • எம்டிஎச் என்ற மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தர்மபால் குலாத்தி (94) இந்திய நுகர்பொருள் துறையில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை செயலதிகாரி ஆவார். 5ம் வகுப்பை கூட நிறைவு செய்யாத இவர் வருடத்திற்கு வாங்கும் ஊதியம் 21 கோடி ஆகும்.

 

  • புதுடெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டது.

 

  • நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2016-17 ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

 

  • ஹரியாணா மாநிலத்தில் ஹிஸார் என்ற பகுதியைச் சேர்ந்த ஷிவாங்கி பதக் (16) இமயமலையின் சிகரம் தொட்ட இளம் இந்தியர் என்ற சாதனையை மே 20ஆம் தேதி படைத்தார்.

 

  • அருணாச்சல பிரதேசத்தில் முதன்முறையாக விமான சேவை மே 21அன்று துவங்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலைன்ஸ் ஏர் நிறுவனத்தில் 42 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் ஏர்கிராஃப்ட் விமானம் முதன்முறையாக இயக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள்

 

  • உலக துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியின் நடுவர் குழுத் தலைவராக இந்திய தேசிய பயிற்சியாளர் பவன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

 

  • 5-வது முறையாக ஐரோப்பிய தங்க காலணியை (கோல்டன் ஷீ) வென்றார் லியோனல் மெஸ்ஸி

 

  • தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.

 

  • எட்டையபுரம் அருகே படர்ந்தபுளியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை, கோவை அணிகள் வெற்றி பெற்றன

 

  • இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

 

  • ரஷ்யாவில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்தாட்டம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

  • வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக குறைத்துள்ளது. இது அடுத்த மாதம் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

 

  • பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் தரச்சான்றை மூடி’ஸ் நிறுவனம் குறைத்துள்ளது.

 

  • பி.கே.பிர்லா குழுமத்தைச் சேர்ந்த செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி பிரிவை கையகப்படுத்த அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

  • சமையலறைப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான டிடிகே பிரிஸ்டீஜ் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ 37.44 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

  • 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற பழைய குளிரூட்டும் இயந்திரங்களை 47 சதவீத தள்ளுபடியுடன் வரையறுக்கப்பட்ட கால திட்டத்தில் மாற்றுவதற்கான புதிய திட்டத்தை பிஎஸ்இஎஸ் ராஜ்தானி மின் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • Madhya Pradesh Launches ‘My MP Rojgar Portal
  1. The Chief Minister of Madhya Pradesh, Shivraj Singh Chouhan has launched ‘My MP Rojgar Portal’ to provide jobs to youths as per their educational qualification, skills and interest and ensure availability of able candidates to employers as per the need of their business.
  2. The portal was launched as a part of the ‘Ham Chhu Lenge Asman’ Mukhyamantri Career Counselling programme ‘Pahal’ in Model School of Bhopal.

 

International News

 

  • 71st World Health Assembly Held in Geneva, Switzerland
  1. The 71st World Health Assembly was held in Geneva, Switzerland. The Indian Delegation was led by Union Health Minister of India, Mr J P Nadda at World Health Assembl.
  2. The Event was held under the theme “Health for All: Commit To Universal Health Coverage”.  Mr Nadda also inaugurated ‘Walk the Talk’ event and gave a call ‘Health for all, Yoga for all’.

 

  • International Day for Biological Diversity: 22 May
  1. The International Day for Biological Diversity is observed across the world on May 22, with an aim to raise awareness about the conservation of biodiversity.
  2. The theme of International Day for Biological Diversity 2018 is ‘Celebrating 25 Years of Action for Biodiversity’ as the year 2018 marks the 25th anniversary of the Convention on Biological Diversity.

 

  • Indian Air Force Chief Marshal Birendra Singh Dhanoa left to Israel on a four-day tour of the country. In Israel, the Chief of the Air Staff will be attending a conference on ‘Air Superiority as a Bridge to Regional Stability’. The conference is part of the Israel Air Force’s 70th-anniversary celebrations.

 

Economy News

 

  • NITI Aayog vice-chairman Rajiv Kumar exuded confidence that Indian economy will achieve 9% growth rate on sustained basis by 2022 on the back of reforms like GST, demonetisation and the Insolvency and Bankruptcy Code (IBC)

 

Sports

 

  • In Tennis, Rafael Nadal of Spain has beaten Germany’s Alexander Zverev to win Italian Open title for a record eighth time.  With this win, Nadal regained the world number one ranking before the French Open beginning.

 

  • Coimbatore racer Bala Prasath has won the Formula Junior Racing Series 2018 Championship in Coimbatore, Tamil Nadu.

­