Today TNPSC Current Affairs May 17 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 17

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

 • அமெரிக்காவை தொடர்ந்து கவுதமலா நாடும் இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை ஜெருசலேமில் இன்று திறந்துள்ளது.

 

 • மலேசியாவில் முன்னாள் தலைமை காவல் அதிகாரி உட்பட பல முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • ஈராக்கில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

 • நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியிருப்பதாக முகநூல்(ஃபேஸ்புக்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • ரஷ்யா மற்றும் கிரீமியா நாடுகளை இணைக்கும் புதிய பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் திறந்து வைத்தார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

 • மத்திய அரசு இந்தியாவின் தூய்மை நகரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இதில் இந்தூர், போபால், சண்டிகர் ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளது.
  • மூன்று லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
  • மாநில தலைநகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
  • 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் விஜயவாடா முதலிடத்தில் உள்ளது.
  • தூய்மை நகரங்களின் பட்டியலில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட பட்டியலில் மைசூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

 

 • 2028ம் ஆண்ட தலைநகர், டெல்லி உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரமாக இருக்கும் என்று ஐ.நா ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • புவி அறிவியல் துறைக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று(16.05.2018) நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த விருதுகளை வழங்கினார்.

 

 • இராணுவ தகவல் தொடர்புக்கு மாற்றாக கொண்டுவரப்படும் ஸ்பெக்ட்ரம் நெட்வொர்க் திட்டத்துக்கு மேலும் ரூ.11, 330 கோடி வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார்.

 

 • புதுச்சேரியில் வசிக்காதவர்களின் பெயர்களை, ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்க குடிமை பொருள் துறை முடிவு செய்துள்ளது.

 

 • இந்திய இரயில்வே துறை, இரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் இரயில்களில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு அவசரகால பட்டன் பொருத்தியுள்ளது. ஆபத்தில் இருக்கும் பெண்கள் இந்த பட்டனை அழுத்தினால் உடனடி உதவி மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும்.

 

 • நாட்டில் ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் நாடு முழுவதும் எந்த இடத்திலும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

 • இங்கிலாந்து கால்பந்து பயிற்சியாளர்கள் சங்கத்தின் 26வது ஆண்டு விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் ஐஎஎஸ்எல் கால்பந்து கோப்பையை வென்ற சென்னையின் எப்சி அணி பயிற்சியாளர் ஜான் கிரிகோரிக்கு விருது வழங்கப்பட்டது.

 

 • புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ள உலக லெவன் அணியில், நேபாள நாட்டின் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லேமிகேன்(17வயது) சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 • 2018 ஐபிஎல் போட்டியில் 50வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை மும்பை அணி தக்க வைத்துள்ளது.

 

 • பெண்கள் டி20 போட்டியில் கலந்து கொள்ளும் 2 அணிகளுக்கு ஹர்மன் ப்ரீத் மற்றும் மந்தனா ஆகியோர் கேப்டனாக இருப்பார்கள் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • மே 17 – உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூகம் தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

 • தர மதிப்பீட்டு நிறுவனமான கேர் ரேட்டிங்ஸ் இந்தாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது. இதில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான் காலாண்டில், 20 வங்கிகளின் வாராக்கடன், 32 சதவீதம் அதிகரித்து 3.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 21.40 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

 

 • சிகரெட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் மார்ச் மாத நிகர லாபம் 9.86 சதவீதமாக அதிகரித்து 2,932.71 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

 • எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 கி.மீக்கு ஒரு சார்ஜ் மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • அன்னிய முதலீட்டாளர்கள், ‘பார்டிசிபேட்டரி நோட்’ வாயிலாக இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Quote of the Day

Call Now
Message us on Whatsapp