Today TNPSC Current Affairs May 08 2018

TNPSC Current Affairs: May 2018 – Featured Image

 

We Shine Daily News

மே 08

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – World News Image

 

  • ரஷ்யாவின் புதிய அதிபராக ‘விளாடிமீர் புதின்’ 4வது முறையாக நேற்று(07.05.2018) பொறுப்பேற்றுக் கொண்டார். 

 

  • ரஷ்யாவின் புதிய துணை பிரதமராக ‘அன்ட்டன் சிலுவனாவ்’ நியமிக்கப்பட்டுள்ளார். 

 

  • ஜெருசலேம் நகரில் அமெரிக்கா கட்டியுள்ள புதிய தூதரகம் அமைந்துள்ள இடத்துக்கு, ‘அமெரிக்க தூதரகம் சாலை’ என இஸ்ரேல் அரசு பெயர் சூட்டியுள்ளது. 

 

  • ஆஸ்திரேலியாவில் பல்வேறு சலுகைகள் அடங்கி ‘மத்திய பட்ஜெட்’ இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – National News Image

 

  • உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் எதிர்த்து வாதாட மத்திய அரசு செலவு செய்யும் தொகை ரூ.42.40 கோடியாக உயர்ந்துள்ளது. 

 

  • உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளில் வசிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

 

  • மின்சார திருட்டை தடுப்பதற்காக பிரீபெய்டு மீட்டர்கள் என்ற புதிய திட்டத்தினை உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

 

  • பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க 9 மாநிலங்களில் கூடுதல் உதவி மையங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

 

  • உத்தரகாண்டில் கடந்த 10 ஆண்டுகளில் 700 கிராமங்களுக்கும் மேல் வறண்டுவிட்டன என்றும் மொத்தம் 3.83 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் கிராமங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து விட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

  • இரயில் பயணத்தின் போது வாங்கும் உணவுக்கு ரசீது வழங்க இரயில்வே மண்டலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

  • அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களிடம் அபராதம் வசூலிக்க, சுங்கச் சாவடிகளுக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

  • காரைக்காலில், காரைக்கால் அம்மையார் புராணத்தின் பின்னணியில், மாம்பழ திருவிழா நடைபெறுகிறது. உலகத்தில் மாங்கனி திருவிழா நடக்கும் ஒரே இடம் காரைக்காலாகும்.

 

  • முதன் முதலாக கவுதமாலா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் ‘வெங்கையா நாயுடு’, இரு நாட்டு உறவை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டு அதிபர் ‘ஜிம்மி மொராலசை’ சந்தித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Sports News Image

 

  • ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

 

  • ன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான நான்கு நாடுகள்(சீனா, தைபே, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா) கால்பந்து போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு பதிலாக கென்யா அணி இடம் பெறும் ஏஐஎப்எப் தெரிவித்துள்ளது. 

 

  • 2018 ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ‘ராபின் உத்தப்பா’, ஐ.பி.எல் போட்டியில் 4000 ரன்களை கடந்த 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

 

  • ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் கார்த்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். 

 

  • சித்தூரில் நடைபெற்ற 32-வது பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், மகளிர் பிரிவில் கேரள அணியும் சாம்பியன் பட்டம் வென்றனர். 

 

  • ரஷ்யாவில், ஜுன் 14ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதி வரை நடைபெறவுள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியை காணுவதற்கு, கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து 6 குழந்தைகளை அழைத்து செல்கிறது. 

 

  • ஆர்சனல் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ‘ஆர்சன் வெங்கர்’ 22 ஆண்டுகள் பணியாற்றி கடந்த ஞாயிற்றுகிழமை பணி நிறைவு செய்தார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: May 2018 – Economic News Image

 

  • மத்திய அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம், 2022ம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

  • இந்தியாவின் உருக்குப் பொருட்கள் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டில் 16.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

  • கார்ப்பரேட் கடன், சிறு மற்றும் நடுந்தர தொழில் கடன், வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற சேவைகளை அளித்துவரும் இண்டோஸ்டார் கேபிடல் பைனான்ஸ் நிறுவனம், மே 9ம் தேதி பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

 

  • ஐசிஐசிஐ வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 50 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.

 

  • ‘முகேஷ் அம்பானியின்’ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமில் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

 

  • பேட்டரி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.189.56 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

 

English Current Affairs

National News

  • May 7 2018 marks the 157th birth anniversary of India’s first Nobel Award winner Rabindranath Tagore. He was born in 1861 in Calcutta.

 

  • On 7th May 2018, the Central Board of Direct Taxes (CBDT) notified the protocol amending the Double Taxation Avoidance Agreement (DTAA) between India and Kuwait.

 

  • An important peptide that can be used to create a new preventive vaccine against leptospirosis has been found out by researchers from the Gujarat Biotechnology Research Centre, Gandhinagar.

 

  • NITI Aayog and Google signed a Statement of Intent (SoI) to enhance growth in artificial intelligence (AI) and machine learning (ML) ecosystem in India.

 

  • India would be hosting the 15th Asia Media Summit (AMS-2018) in New Delhi. The theme of this summit is “Telling our Stories Asia and More”.

 

  • The Centre has approved setting up of 100 additional One Stop Centres in 9 states to help violence affected women.

 

  • Food Safety and Standards Authority of India (FSSAI) set new norms for labelling food planned.Moreover, foods that exceed norms of sugar and fat should carry ‘red’ and ‘green’ labels

 

International News

  • On 7th May 2018, Nokia said that, it has acquired SpaceTime Insight, a California-based startup, to expand its Internet of Things (IoT) portfolio and IoT analytics capabilities.

 

  • Iran’s president on Tuesday warned the country could face “some problems” ahead of President Donald Trump’s decision on whether to pull out of its nuclear deal with world powers

 

Science & Technology

  • On May 7 2018, Indian Space Research Organization has developed an atomic clock to be used in navigation satellites to measure clear-cut location data.Currently ISRO imports atomic clocks from European aerospace manufacturer Astrium for navigation satellites.
  • Scientists have discovered a mineral named Moganite, in a lunar meteorite that points to abundant hidden reserves of water ice under the surface of the Moon, which can be used for future human exploration.

 

Environment

  • Researchers have said that, the dense vegetation in the Western Ghats determines the amount of rainfall that Tamil Nadu gets during the summer monsoon.

 

Awards

  • Fiji’s Indian-origin former Prime Minister Mahendra Chaudhry has been selected for the V K Krishna Menon Award for his contribution to the Indian diaspora.

 

Sports

  • Olympic medalist Gagan Narang and Pooja Ghatkar bagged the silver medal in the mixed event at Grand Prix of Liberation international shooting competition held in Pilsen, Czech Republic.

 

Appointment

  • On May 7 2018 , Vladimir Putin became Russia’s president for a historic fourth term at a ceremony Kremlin. He will extend his power to another six years.

­