Today TNPSC Current Affairs May 03 2018

 

We Shine Daily News

மே 03

தமிழ்

உலக செய்திகள்

 

‘முகநூலில் உலகத் தலைவர்கள்’  என்ற பெயரில் பர்ஸன் கோன் அண்ட் வோல்ப் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் சமூக வலைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பைக் காட்டிலும் பிரதமர் மோடியைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக உள்ளது. இந்த ஆய்வு கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி வரை நடத்தப் பட்டது.

 

• இந்திய ராணுவமும், சீன ராணுவமும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவசர தொலைபேசி (ஹாட்லைன்) இணைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக சீன அரசின் செய்தி நிறுவனமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

 

• அமெரிக்க பல்கலைக் கழகங்களில் 2 லட்சம் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் மொத்த வெளிநாட்டு மாணவர்களை கணக்கிடும் போது இந்தியா இரண்டாவது இடத்திலும், சீனா முதலிடத்திலும் உள்ளது.

 

• அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள பெருந்தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பணியமர்த்தப்பட்டது. தற்போது ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

 

• இங்கிலாந்தில் பணி செய்து கொண்டு வசிப்பதற்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கேட்டு இந்திய பணியாளர்கள் இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

• ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளன.

 

• இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சீனாவுக்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகள் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

• அமெரிக்காவின் கலிபோர்னியாவில் போதையூட்டுகிற வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு சட்ட விரோதமாக பரிந்துரை செய்ததாக இந்திய டாக்டர் சுவதந்தர குமார் சோப்ரா கைது செய்யப்பட்டு உள்ளார்.

தேசிய செய்திகள்

 

 

• ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடங்கி 60 நாட்கள் நடைபெற உள்ளது.

 

• 65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று தில்லியில் நடக்கவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.

 

• காற்று வெளியிடைப் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும், மாம் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் பெறுகிறார்.

 

• பொய் மறஞ்ச காலம் மலையாள திரைப்பட பாடலுக்காக யேசுதாசுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

 

• நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ படத்தில் நடித்ததற்காக சிறப்புப் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

• சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது டூலெட் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

• ராஜஸ்தானில் நேற்றிரவில் வீசிய புழுதி புயலில் சிக்கி 18 பேர் பலியாகினர்.

 

• தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான நிலவர அறிக்கை நேற்று மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

 

• மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை ஓர் ஆண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடவும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 

• சென்னை, கவுகாத்தி மற்றும் லக்னோ ஆகிய 3 விமான நிலையங்களில் ரூ.5082 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் மேம்படுத்துதல் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

• பிரதமரின் மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதற்கு ரூ 14832 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் 2020 வரை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

 

• 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் 23866 மோசடி வழக்குகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள்

 

 

• ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக தற்காப்பு ஆட்ட வீராங்கனை சுனிதா லக்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கொரியாவின் டோங்கே நகரில் மே 13ஆம் தேதி ஆசிய சாம்பயின் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டிகள் தொடங்குகின்றன.

 

• பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்தியா மறுப்பு தெரிவித்து விட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமைச் செயலதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் தெரிவித்துள்ளார்.

 

• ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா 2வது இடத்திலும், தென்னாப்ரிக்கா 3வது இடத்திலும், நியூசிலாந்து அணி 4வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 5வது இடத்திலும் உள்ளது.

 

• டி-20 போட்டிகள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும், நியூசிலாந்து 4வது இடத்திலும், இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.

 

• சித்தூரில் தொடங்கிய 32வது பெடரே~ன் கோப்பை கூடைப்பந்து போட்டிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கேரள மகளிர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

 

• புதிய விளையாட்டுப் பாடத்திட்ட வரைவு எழுதவுள்ளதாக முன்னாள் பாட்மிண்டன் வீரர் கனிஷ்கர் பாண்டே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

• உடுமலையில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டிகள் மே 8 ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

• சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதிக்கு 3வது முறையாக ரியல் மாட்ரிட் அணி முன்னேறியுள்ளது.

 

வர்த்தகச் செய்திகள்

 

 

• மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப்பின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 34.78மூ உயர்ந்து ரூ 967.40 கோடியாக உயர்ந்துள்ளது.

 

• கனிம வளங்கள் துறையை சீர்திருத்தும் வகையில் இந்திய சுரங்கங்களின் செயல்பாடுகளை மறுசீரமைப்பு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

• ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் உள்ளிட்ட வரிகளைக் குறைப்பதற்காகவும் தொலைத் தொடர்புத் துறையின் கடனைக் குறைப்பதற்காகவும் புதிய தொலைத் தொடர்பு கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. ‘தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு திட்டம் 2018’ என இந்த வரைவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் 50 எம்பிபிஎஸ் வேகத்திலான 5ஜி பிராட்பேண்ட் சேவை அனவைருக்கும் கிடைக்க வழிவகை செய்தல், 40 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இந்த வரைவின் நோக்கமாகும்.

 

• அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்துள்ளது.

 

நியமனச் செய்திகள்

 

• இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக குந்த்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1981ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான இவர் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆவார். இதற்கு முன் தலைவராக இருந்த டி.எஸ்.விஜயனின் பதவிக் காலம் பிப்ரவரி 21ம் தேதியுடன் முடிவடைந்தது.

 

• ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஜஸ்டின் லாங்கர் (47) ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

English Current Affairs

 

National News

 

  • The Cabinet Committee on Economic Affairs has approved three major infrastructure projects – new terminal buildings at Guwahati, Chennai and Lucknow airports.

 

  • The Union Cabinet chaired by chaired by Prime Minister Shri Narendra Modi has given its approval for extending the investment limit from Rs 7.5 lakhs to Rs 15 lakhs under the Pradhan Mantri Vaya Vandan Yojana (PMVVY) as part of Government’s commitment for financial inclusion and social security.

 

  • The Cabinet has given its approval for the Umbrella Scheme, “Green Revolution – Krishonnati Yojana” in agriculture sector beyond 12th Five Year Plan for the period from 2017-18 to 2019-20.

 

  • The Cabinet Committee on Economic Affairs has approved the proposal for renaming and restructuring of Multi-sectoral Development Programme (MsDP) as Pradhan Mantri Jan Vikas Karyakram (PMJVK).

 

  • The Cabinet gave its nod to continuation of Pradhan Mantri Swasthya Suraksha Yojana beyond 12th Five Year Plan for a period 2017-18 to 2019-20. Under this 20 new AIIMS and up-gradation of 73 medical colleges will be undertaken.

 

  • The President of India, Shri Ram Nath Kovind, chaired the first meeting of the National Committee for the Commemoration of the 150th Birth Anniversary of Mahatma Gandhi, at Rashtrapati Bhavan today. (May 2, 2018).

 

  • 14 Indian cities have been figured in a list of 20 most polluted cities in the world in terms of PM2.5 levels in 2016, according to the data released by the WHO (May 2, 2018).

 

  • For the first time in the country, the renewable energy sector has added more capacity than the conventional power — thermal, gas and nuclear — in 2017-18.

 

  • The Gujarat government initiated a month-long state-wide water conservation campaign, on the occasion of the state’s Foundation Day on May 1, aiming to conserve an additional 1,100 million cubic feet of rain water.

 

  • The Union Government has announced to develop the country’s biggest airport, after only to Mumbai, in Mopa district of Goa.

 

International News

 

  • Minister of Commerce and Industry and Civil Aviation, Suresh Prabhu, attended India- South Africa business summit from April 29-30, 2018 in Johannesburg, South Africa. The visit began with a series of bilateral meetings

 

  • On 2nd May 2018, the Stockholm International Peace Research Institute (SIPRI) released a report, according to which India joined the United States and China as one of the world’s 5 biggest military spenders.

 

Economy

 

  • According to a BMI Research, a Fitch group company, the economic growth in India is expected to strengthen to 7.3% in financial year 2018-19 from 6.6 per cent in fiscal 2017-18, on the back of robust activity from construction, manufacturing, and services sectors.

 

Sports

 

  • England has overtaken India to seize the top spot in the MRF Tyres ICC ODI team rankings following the annual update, while Nepal has rejoined the T20I ratings.

 

Awards

 

  • On 2nd May 2018, President Ram Nath Kovind, hosted the meeting of Vice-Chancellors of Central Universities and presented the Visitor’s Awards at Rashtrapati Bhavan, New Delhi.

 

Appointment

 

  • Appointments Committee of the Cabinet (ACC) has approved Subhash Chandra Khuntia’s appointment as Chairman of Insurance Regulatory and Development Authority of India (IRDAI).

 

  • On 2nd May 2018, ICICI Bank’s board appointed Radhakrishnan Nair as an additional (independent) director of ICICI bank for five years.

­