Today TNPSC Current Affairs March 29 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

We Shine Daily News

மார்ச் 29

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • உலகில், அதிக அளவு தேசிய கடன் வைத்துள்ள டாப் 10 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சீனா மற்றும் ஜப்பான் 2,3வது இடத்தில் உள்ளது.

 

  • மியான்மரின் புதிய அதிபராக ‘ஊ வின் மியிந்த்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

  • சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘001 ஏ’ ரக முதல் விமானம் தாங்கி போர் கப்பலின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • எம்ஐசி எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • சிந்து நதி உள்பட 6 நதிகளின் நீரை பகிர்ந்து கொள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்ட சிந்து நதி கமிஷனின் 114வது கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

 

  • உத்திரப்பிரதேச ஆவணங்களில் ‘அம்பேத்காரின்’ பெயருடன் அவரது தந்தை பெயரையும்(பீமாராவ் அம்பேத்கார் என்ற பெயரை பீமாராம்ஜி அம்பேத்தார் என்று மாற்ற) சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

  • பத்தனம் திட்டா(கேரளா) மாவட்டத்தில் குன்னம் தனம் எனும் கிராமம் ‘யோகா கிராமம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது.

 

  • உள்நாட்டிலேயே ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்ட அதிநவீன இரயில் பெட்டிகளை(ட்ரைய்ன் 18) இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • கேரள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரது ஊதியத்தை இரு மடங்கு உயர்த்த கேரள சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

  • கர்நாடகம் கோலார் மாவட்ட ஆட்சியர் ‘சத்யவதி’, தேர்தல் வேட்பாளர்கள் ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கியில் பணம் எடுத்தால், அவர்களது வங்கிகணக்கை முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • டெல்லி, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ‘விராட் கோலியிக்கு’ மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

 

  • ஆசியாவில் தங்கள் துறைகளில் முன்னோடியாக உள்ள 30 வயதுக்குட்பட்ட பெண்களின் பெயர்களை போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டது. இதில் இந்தியாவிலிருந்து நடிகை ‘அனுஷ்கா ஷர்மா’ மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ‘பி.வி. சிந்து’ ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

 

  • ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதரபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்தின் ‘கேன் வில்லியம்சன்’ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2018 ஐபிஎல் தொடரில் நியமிக்கப்பட்டுள்ள ஒரே வெளிநாட்டு கேப்டன் ஆவார்.

 

  • வங்கதேச கிரிக்கெட் அணிக்கு, தென் ஆப்ரிக்காவின் ‘கிறிஸ்டன்’ பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார்.

 

  • அகில இந்திய டென்னிஸ் போட்டியில் பெரம்பலூர் போல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

 

அறிவியல் மற்றும் தொழல்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • கே-2 தொலைநோக்கியின் மூலம் பூமியை போன்ற மற்றொரு கோளை(கே2-229பி) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ), தகவல் தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ‘ஜிசோட்-6ஏ’ என்ற புதிய செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி.எப்8 என்ற ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது

 

  • மனித உடலுக்குள் சோதனைகளைச் செய்ய ‘வளைந்து கொடுக்கும் மீ ஒளி கருவியை’(அல்ட்ரா சவுண்ட்) கலிபோர்னியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

  • அமெரிக்காவில் உள்ள ட்ப்ட் பல்கலைக்கழக விஞ்ஞானகள், உடல் எடையை குறைக்கவும், வேறு உடல் நலக் குறைபாடுகளை கண்டறியவும், நோயாளிகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிய 2 சதுர மி.மீ அளவு உள்ள ஒரு மின்னணு உணரியை(பல்லில் ஒட்டிக் கொள்ளக் கூடிய சில்லு) கண்டுபிடித்துள்ளனர்.

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: March 2018 – New Appointment News Image

 

  • பேட்மிண்டன் வீரர் ‘கிடாம்பி ஸ்ரீகாந்தை’, தெலுங்கு மாநில முதல்வர் ‘சந்திரப்பாபு நாயுடு’ துணை ஆட்சியர் பதவிக்கு நியமித்துள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • எஸ்பிஐ, வங்கி, பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு 0.10 முதல் 0.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

 

  • நேரடி கடன் பத்திர விற்பனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தினால் ஐசிஐசிஐ வங்கிக்கு, ரிசர்வ் வங்கி ரூ.58.90 கோடியை அபராதம் விதித்துள்ளது.

 

  • இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளில் 76 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

 

  • இந்திய அளவில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படக் கூடிய ‘கிண்டில் லைட்’(டிஜிட்டல் முறையில் புத்தகங்கள் வெளியிடப்படும்) செயலியை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • ஹிமாச்சலப் பிரதேசத்தில் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை(TVET) நவீனமாக்குவதற்கும், திறன்களை மேம்படுத்தவும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 8 கோடி டாலரை(ரூ.520.28 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நடைபெற்றது.

 

English Current Affairs

National News

  • The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its approval for restructuring of National Skill Development Fund (NSDF) and National Skill Development Corporation (NSDC) to strengthen governance, implementation and monitoring framework.

 

  • Union Food Processing Industries Minister Harsimrat Kaur Badal will inaugurate the first mega food park at Roopangarh Village in Ajmer, Rajasthan. The Food Park is being set up at a cost of Rs 113.57 crore and will benefit around 25,000 farmers in Ajmer as well as neighboring districts.

 

  • In the wake of increasing crimes against women, Assam Chief Minister Sarbananda Sonowal launched‘181-Sakhi’, a toll-free helpline number for women. This service intends to provide 24-hour immediate and emergency response to women affected by violence.

 

  • Indian cricket captain Virat kohli’s wax figure will soon be unveiled at Madame Tussauds, Delhi. This museum is known for the portrayal of the famous names in the world of entertainment, sports, history and politics. The main museum is located in London.

International news

  • Pakistan conducted successful test fire of indigenously developed Submarine Launched Cruise Missile (SLCM) BABUR having a range of 450 KMs. SLCM BABUR is capable of delivering various types of payloads and incorporates state of the art technologies.

 

  • Scientists have identified a new organ in the human body, which they hope could help them understand the spread of cancer within the body. Layers long thought to be dense; connective tissues are actually a series of fluid-filled compartments that researchers have termed as “interstitium”.

Business

  • Government will come out with an Rs 350 commemorative coin to mark 350th birth anniversary of Guru Gobind Singh, the 10th and last Sikh Guru. The coin with standard weight of 35 gram will have 50 per cent silver, 40 per cent copper and 5 per cent each of nickel and zinc.

 

  • The Asian Development Bank (ADB) and the Government of India signed $80 million loan to help modernize technical and vocational education and training (TVET) institutions and improve the skills ecosystem in the State of Himachal Pradesh.

Appointments

  • K Vijay Raghavan, one of the most distinguished biologists of the country, was appointed Principal Scientific Advisor to the Government of India. He will succeed 81-year-old nuclear physicist R Chidambaram, who has been in the position for more than 16 years, having been appointed in

 

  • Myanmar’s parliament has elected Win Myint as the country’s next president, a week after the resignation of his predecessor Htin Kyaw.

Sports

  • Cricket Australia (CA) has banned Australian captain Steve Smith and Vice-captain David Warner for 12 months and handed a nine-month ban to Cameron Bancroft. Warner and Smith have also been banned from captaining Australia for two years. These players have been charged for deliberately trying to tamper with the condition of the ball in an orchestrated attempt to gain an advantage.

 

  • Tata Motors has entered into a three-year partnership with the BCCI under which its compact SUV Nexon will be an official partner for the popular T20 tourney, the Indian Premier League (IPL). The latest edition of the IPL begins on April 7.

­