Today TNPSC Current Affairs March 25 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 25

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 300 கோடி டாலர் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. (பன்றி இறைச்சி, ஆப்பிள் மற்றும் உலோகப் பொருட்களுக்கு 15 சதவீதம் முதல் 25 சதவீதம்)

 

  • போயிங் 787 விமானம் மூலம் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையேயான முதல் நேரடி விமான சேவை பெர்த் (ஆஸ்திரேலியா) விமான நிலையம் முதல் ஹித்ரூ (இங்கிலாந்து) வரை நடைபெற்றுள்ளது.

 

  • அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணிபுரிய தடை விதித்து டொனால்ட் டிரம்ப் (அதிபர்) உத்தரவிட்டுள்ளார்.

 

  • அமெரிக்காவின் “பூம்” நிறுவனம் அதி வேகமாக பறக்கும் சூப்பர்சானிக் பயணிகள் விமானத்தை விரைவில் இயக்க திட்டமிட்டுள்ளது.

 

  • தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வடகொரியா முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • ஸ்மார்ட் நகரங்களுக்கு இணையாக ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்க மத்திய அரசின் நேஷனல் ருர்பன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

  • நிலத்தடியில் மின்கம்பிகள் அமைக்கப்பட்டு உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி நகரம் முழுவதும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவின் ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியா வழியாக இஸ்ரேல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ஆஸ்திரேலியாவின் புதிய பொறுப்பு கேப்டனாக டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • ஆஸ்திரேலிய கேப்டன், துணை கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளனர். (கிரிக்கெட் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம்)

 

  • ஜேசி முகர்ஜி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

 

  • ஆசிய பில்லியர்ட்ஸ் தொடரில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்றுள்ளார்.

 

  • 11 சீசன் ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி நியூஸிலாந்து ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சனை ரூ.2 கோடிக்கு மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. (வேகபந்து வீச்சாளர் நாதன் கௌடர் நைலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக)

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • சுரங்கத் துறையில் ஈடுபட்டு வரும் வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக குழு கடன்பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.4,500 கோடி திரட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது.

 

  • இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்தும் அதிக நெட்டிசன்கள் 80 சதவீதம் பேர் யூடியூப் பயன்படுத்துகிறார்கள் என்று கூகுள் கணித்துள்ளது.

 

  • பஞ்சாப் சட்டப் பேரவையில் 2018-19ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் நேற்று (24-3-2018) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வாயில் பொறுத்தி உணவுப் பழக்கத்தை கண்காணிக்கும் மிகச் சிறிய சென்சாரை கண்டுபிடித்துள்ளனர்.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

  • 4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டெயின்மர் இன்று சென்னை வர உள்ளார்.

 

  • 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மர் புதுடெல்லியில்  பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

 

 

English Current Affairs

 

National

 

  • Andhra Pradesh Government launched ‘NAIPUNYA RATHAM’, a multi – utility vehicle which aims to bring technology to the remote corners. It is to improve digital literacy, digital skills and create and awareness on various government schemes.

 

  • INS Ganga, an indigenously built frigate of the Indian Navy was decommissioned in Mumbai after over three decades of service. This ship represented a big step forward in the nations worship building capability.

 

  • MHRD has approved ‘Study in India’ programme. The primary objective is to target foreign students by branding India as an attractive education destination.

 

  • The SARAS AajeevikaMela 2018 was organized by ministry of rural development in New Delhi. The mela provides rural women producers with a national platform and an opportunity to showcase their products and seek buyers.

 

  • Google commemorated the 45th anniversary of the Chipko Movement with a doodle on 25 March. The whole movement was taken forward by women participants who became a driving force in educating people on the deleterious effects of deforestation.

 

  • According to the latest 2018 global data show our nation has overtaken Germany and has become the fourth largest automobile market in the world.

 

International News

 

  • The world’s biggest cruise – line “Symphony of the Seas” has left the shipyard of Saint – Nazaire in France to embark on its maiden voyage in Mediterranean.

 

  • Martin Vizcarra served as Peru’s first Vice President and ambassador to Canada has been sworn country’s New President.

 

Sports

 

  • Star shuttler P V Sindhu has been named the flag – bearer of the Indian Contingent for the opening ceremony of the commonwealth Games in Gold Coast.

 

  • Teenager Manu Bhaker nailed her second world cup gold medal inside a month winning the women’s 10 m Air pistol title at the International Shooting Sport Federation (ISSF)

 

Business

 

  • Equitas Small Finance Bank has launched a new “Yellow Army Savings Account” to increase its customer base through its association with Chennai Super kings (CSK)

 

  • Bengaluru based startup Fisdom and Lakshmi Vilas Bank have entered into a partnership to enable investments in the National Pension Scheme (NPS)

­