Today TNPSC Current Affairs March 23 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மார்ச் 23

தமிழ்

உலக செய்திகள்


TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ‘ஜான் பால்டன்’(ஐ.நாவுக்கான முன்னாள் தூதர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சீனா தனது தொலைக்காட்சி(சிசிடிவி) மற்றும் சர்வதேச வானொலி நிலையத்தை ஒன்றிணைத்து ‘வாய்ஸ் ஆஃப் சீனா’ என்ற பெயரில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

 

 • பிரிட்டனின் புதிய நீல நிற பாஸ்போர்ட்டை அச்சடிக்கும் பணி, தற்போது பிரெஞ்சு-டச்சு கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

 • ஐஸ்லாந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாடாகும். இங்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டும் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து பாம்புகள் இல்லாத தேசமாகும்.

 

 • அலுவலகங்களில் கூடுதல் நேரம் வேலை பார்க்கும் முறையை முடிவுக்கு கொண்டு வர ‘forced shutdown’  (குறிப்பிட்ட நேரத்தில் ஊழியர்களின் கணினி ‘forced shutdown’ செய்யப்படும்) திட்டத்தை அமல்படுத்த தென் கொரிய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வந்த சீன எல்லைக் காவல் படையை, இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் சீன அரசு கொண்டு வந்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்துசேரும் இடங்களில் ‘புது டெல்லி’ 22வது(25 இடங்களில்) இடத்தை பிடித்துள்ளது. ஆசிய அளவில் 8வது இடத்தில் உள்ளது.

 

 • நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் நகரங்கள் பட்டியலில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது.

 

 • தொழுநோயாளிகள் அரசு மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

 

 • ‘ பிரதமர் மோடி’ அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கு(மோடி கேர்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் இத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

 

 • மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது பெறப்படும் பணிக்கொடையை ரூ.20 லட்சம் வரை உயர்த்த வழிவகுக்கும் பணிகொடை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

 • காச நோயாளிகள் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்காவிட்டால், டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பார்மசிஸ்ட் ஆகியோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டணை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • நாடு முழுவதும் சுமார் 4.13லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் இரவு நேர உணவகங்கள் திறக்க, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

 

 • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குட்டி விமானம் ‘சரஸ்’ விரைவில் சிறிய நகரங்களுக்கு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு வரவுள்ளது என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ‘ஹர்ஷ வர்தன்’ தெரிவித்துள்ளார்.

 

 • கேரள அரசு ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை ‘எம்கேரளா’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் அரசின் 20 துறைகளில் இருந்து 100 சேவைகளை பெற்று கொள்ளலாம்.

 

 • டெல்லி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், ரூ.53,000 கோடிக்கான பசுமை நிதிநிலை அறிக்கை இடம் பெற்றுள்ளது.

 

 • நாட்டில், 714 இரயில் நிலையங்களில் 86,291 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 • புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், ‘நிலையான பல்லுயிரிகளுக்கான மூலக்கூறு அணுகு முறைகள்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ‘ஹெச்.எஸ். பிரணாப்’ 12வது இடத்தில் உள்ளார்.

 

 • உலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில், இந்திய ஆண்கள் இரட்டையர் பிரிவு ஜோடியான ‘சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி’ அணி 20வது இடத்தில் உள்ளது.

 

 • இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘முகமது ஷமியை’, ‘பி’ க்ரேட் ஒப்பந்தத்தில் கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) சேர்த்துள்ளது.

 

 • நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ‘கேன் வில்லியம்சன்’, டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம்(18) எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளர்.

 

முக்கிய தினங்கள்

 

 • மார்ச் 23 பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் 87வது நினைவு தினம்.

 

 • மார்ச் 23 – உலக வானிலை ஆராய்ச்சி தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • மத்திய அரசு, பட்டு வளர்ப்பு துறைக்கு என ‘பட்டுத் தொழில் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த திட்டம்’ என்ற செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

 • ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ உடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ‘எல்லோ ஆர்மி’ என்ற சேமிப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமாக வாடகை செலுத்துகிறவர்கள், நிதி ஆண்டின் மொத்த வாடகையில் 5 சதவீதத்தினைடிடிஎஸ்’ ஆகப் பிடித்தம் செய்து வருமான வரித் துறையில் செலுத்த வேண்டும் டிடிஎஸ் அறிவித்துள்ளது.

 

 • சுந்தரம் பாசனர்ஸ் லிமிடெட்(எஸ்எப்எல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ‘ஆர்த்தி கிருஷ்ணா’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

English Current Affairs

 

 National news

 • The Minister of State for Home Affairs, Hansraj Gangaram Ahirinaugurated the two-day first National Conference on Drug Law Enforcement in Delhi. The conference is being organised by the Narcotics Control Bureau (NCB), Ministry of Home Affairs.

 

 • State-owned Indian Oil Corporation (IOC) has launched home-delivery of diesel on a pilot basisin Pune and plans to expand doorstep delivery of the fuel to other parts of the country in near future. 

 

 • India Post has paid tribute to theoretical physicist and cosmologist Stephen Hawking by issuing a special cover on him.

 

 • The National Biogas and Manure Management Programme (NBMMP) aims at setting up of family type biogas plants for providing biogas as clean cooking fuel and a source of lighting. The Ministry of New and Renewable Energy (MNRE) has fixed an annual physical target of setting up 65,180 biogas plants for the current year 2017-18 under the NBMMP.

 

 • The Ministry of Tourism has identified following 12 sites for development under Iconic Tourist Sites Project:
  • Taj Mahal & Fatehpur Sikri (Uttar Pradesh)
  • Ajanta and Ellora (Maharashtra)
  • Humayun Tomb, Qutub Minar and Red Fort (Delhi)
  • Colva Beach (Goa)
  • Amer Fort (Rajasthan)
  • Somnath and Dholavira (Gujarat)
  • Khajuraho (Madhya Pradesh)
  • Hampi (Karnataka)
  • Mahablipuram (Tamil Nadu)
  • Kaziranga (Assam)
  • Kumarakom (Kerala)
  • Mahabodhi Temple (Bihar) 

Awards

 • Defence Research & Development Organisation (DRDO) has received the ‘Most Informative Pavilion’ Award in Pride of India Expo organized as part of the 105th Indian Science Congress held from 16 to 20 March 2018 at Manipur University, Imphal.

 

 • National Mission for Clean Gangawas awarded Certificate of Appreciation for ‘Encouragement and Appreciation of the Efforts in Ganga Rejuvenation” during the Water Digest Water Awards 2017-18.

 

 • The “We Are Sikhs” campaign received the top 2018 PRWeek US award in the category of Public Cause. The PRWeek US awards are nicknamed the “Oscars of the Public Relations Industry”.

Sports

 • Indian shooter Elavenil Valarivan shattered the qualification world record in 10-meter women’s air rifle event of the season’s first junior ISSF World Cup in Sydney, Australia.Besides her individual podium finish, Elavenil also combined with Shreya Agrawal and Zeena Khitta to claim the team gold medal.

Obituary

 • Les Payne, a Pulitzer Prize-winning journalistand columnist for Newsday who fiercely championed racial equality has passed away. He was 76.  He won Pulitzer Prize for “Heroin Trail” series in

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube