Today TNPSC Current Affairs March 18 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

மார்ச் 18

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

 • அமெரிக்காவை சேர்ந்த கேசி டி பிகோல் என்ற பெண் ‘சர்வதேச சுற்றுலா மூலமாக அமைதி’ நிறுவனத்தின் தூதராக உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பார்வையிட்டு புதிய சாதனையை படைத்துள்ளார்.

 

 • சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு ஆண்டு தங்கியிருந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையை பெற்ற ‘அஸ்ட்ரோநாட் ஸ்காட் கெல்லி’ என்பவரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

 

 • உலகின் மலிவான மற்றும் விலை அதிகமான நகரங்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 3 மாநிலங்கள் (பெங்களுரு, டெல்லி, சென்னை) இடம் பிடித்துள்ளது. உலகிலேயே மிக மலிவான நகரமாக சிரியாவின் டமாஸ்கஸ் சிட்டி தேர்வாகி உள்ளது.

 

 • உலகிலேயே முதல் முறையாக கடலுக்கடியில் 100 பேர் அமர்ந்து உண்ணும் வகையில் உணவகம் ஒன்றை அமைக்க நார்வே திட்டமிட்டுள்ளது.

 

 • மொரீஷியஸ் அதிபர் அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

 • மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான கிம்பர்லேவைமார்க்கஸ்’ என்ற புயல் தாக்கியுள்ளது.

 

 • இலங்கையில் போடப்பட்டிருந்த அவசர நிலை பிரகடனத்தை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திரும்பப் பெற்றுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

 • கன்னட மற்றும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 • ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு, ‘சிப்’ பொருத்தப்பட்ட சிறப்பு அடையாள அட்டை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

 

 • கேரள மாநலத்திற்கென பறவை, விலங்கு, மலர், மீன் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில பழமாக பலாப்பழத்தை அறிவிக்க உள்ளது.

 

 • திருப்பதி மலைப்பாதையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேட்டரி பேருந்தினை இயக்க ஆந்திர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

 

 • புராஜெக்ட் – 75 திட்டத்தின் கீழ் ஸ்கார்பின் வகையை சேர்ந்த 2வது, 3வது நீர்மூழ்கிக் கப்பல்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

 

 • வடமாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது.

 

 • இந்த ஆண்டு மார்ச் 19, 20ல் டெல்லியில் உலக வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

 • மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ கமிட்டி கூட்டத்தில், இந்தியாவில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

 

 • 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

 

 • மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • கொழும்பு நகரில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் மோதலில் ஈடுபட்ட வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல்ஹாசன் மற்றும் நூருல் ஹாசன் ஆகியோருக்கு ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

 • இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 • ஐ.பி.எல். தொடரின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐ.பி.எல் 11வது சீசன் தொடக்கப் பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி என ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

 • ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பாக பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்க தடைவிதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • சிறிய அளவிலான பிழைகளினால் ஜிஎஸ்டி ரீபண்ட் நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என மத்திய கலால் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டின் கடந்த டிசம்பர் வரையிலான கால அளவில வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு ரூ.611.28 கோடியாக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணையமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

 

 • நான்காம் காலாண்டு முடிவுகளை வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி வெளியிடவுள்ளதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • விண்வெளியில் தற்போது 73 எரிகற்கள் சூரியனை சுற்றி வருவதாக அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா கண்டுபிடித்துள்ளது.

 

 • புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது மீனவர்கள் கரை திரும்ப உதவும் வகையில் இஸ்ரோ நேவிகேஷன் மொபைல் ஆப் தயார் செய்துள்ளதாகவும் விரைவில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 

 • செயற்கைக்கோள் மூலமாக அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் பாடம் நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • The Odisha government will collaborate with Regional Integrated Multi-Hazard Early Warning System (RIMES) for strengthening its early warning services. The partnership will be forged between Odisha State Disaster Mitigation Authority (OSDMA) and RIMES in field of drought monitoring and early warning.

 

 • The Central Institute for Research on Buffaloes (CIRB) claimed that India’s first cloned Assamese buffalo male calf named Sach-Gaurav was born in Hisar, Haryana.

 

 • The Ministry of Health and Family Welfare launched LaQshya program aimed at improving quality of maternity care in labor room and maternity Operation. It is being implemented to ‘fast-track’ interventions for achieving tangible results. Key Facts. The program aims to improve quality of care for pregnant.

 

 • NITI Aayog released comprehensive roadmaps and detailed timelines for its initiative ‘Sustainable Action for Transforming Human Capital in Education (SATH-E)’ project. Amitabh Kant, CEO, NITI Aayog released the forward-looking blueprints.

 

 • India and the Asian Development Bank (ADB) signed a $120 million loan agreement for completion of works for double-tracking and electrification of railways tracks along high-density corridors to improve the operational efficiency of Indian railways.

 

 • Lok Sabha has passed gratuity amendment bill. The Payment of Gratuity (Amendment) Bill, 2017 aims at increasing the upper ceiling of the gratuity from the present 10 lakh rupees to 20 lakh rupees for employees in the private sector and in Public Sector Undertakings at par with Central Government employees.

 

 • The Government of India has approved Pan-India implementation of PMMVY in all districts of the country from 01.01.2017 under which the eligible beneficiaries get Rs. 5,000/- under PMMVY and the remaining cash incentive as per approved norms towards Maternity Benefit under Janani Suraksha Yojana (JSY) after institutional delivery so that on an average, a woman gets Rs. 6000/-. Number of beneficiaries enrolled under Pradhan Mantri Matru VandanaYojana (PMMVY) has increased to 17,66,423

 

International news 

 

 • India to host 17th Annual Conference of International Competition Network 2018 (ICN2018) from 21st to 23rd March 2018 in New Delhi.

 

Sports

 

 • Indian para-athlete Deepa Malik won a gold medal in the F-53/54 category javelin event at the World Para Athletics Grand Prix in Dubai. With this, she became the Asian rank one in the F-53 category.

 

 • After Afghanistan’s rapid rise to prominence in limited-overs cricket, Nepal took a massive step forward after achieving One-day International status, after their victory over Papua New Guinea.

 

 • Nepal defeated the Pacific nation by six wickets in a playoff game in the ICC World Cup Qualifier being held in Zimbabwe, achieving the distinction for the first time.

 

Appointments

 

 • Sangeeta Bahadur appointed as the next Ambassador of India to the Republic of Belarus.

 

 • President Donald Trump named Larry Kudlow as the next head of the White House National Economic Council.

 

 • Xi Jinping was re-elected as President for a second five-year tenure by China’s rubber-stamp parliament. The Parliament has recently allowed Xi to have a life-long tenure

 

 • Tata Sons Chairman N Chandrasekaran was elected President of the court of the Indian Institute of Science (IISc) for three years.

 

Banking and Economy

 

 • Capital markets regulator SEBI raised the exposure limit under exchange-traded currency derivatives trading for residents and FPIs to USD 100 million across all currency pairs involving the Indian rupee.

 

 • The move will help entities engaged in forex transactions to maintain their currency risks in a better manner.

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube