Today TNPSC Current Affairs March 17 2018

 

We Shine Daily News

மார்ச் 17

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • சீன அதிபராக ‘ஜி ஜின்பிங்’ 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • பாகிஸ்தான் விமானப் படையின் புதிய தலைமை தளபதியாக ‘முஹாஜித் அன்வர் கான்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • 2015க்கு பிறகு எகிப்து-ரஷ்யா இடையே விமான போக்குவரத்து 2018 ஏப்ரல் 11ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.

 

  • அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் ‘ஆண்ட்ரூ மெக் காபே’ பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

 

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் குறுக்கிட்டதற்காக, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளார்.

 

  • பிரிட்டனைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளை, ரஷ்யா தனது நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • இந்திய குடியரசு தலைவராக பதவியேற்றப்பின் குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ முதல் முறையாக இன்று ஒடிசா சென்றுள்ளார்.

 

  • 2015-2016ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனைப்படைத்ததற்காக தமிழக அரசுக்கு ‘கிருஷி கர்மான் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

 

  • இம்பாலில்(மணிப்பூர்) நடைபெற்ற 105வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் ‘நரேந்திர மோடி’ சிறப்புரையாற்றினார். இதில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தியை எட்டுவது மத்திய அரசின் இலக்கு என தெரிவித்தார். 9-12ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுடன் ஆண்டுக்கு 100 மணிநேரம் விஞ்ஞானிகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க வேண்டும் என பிரதமர் ‘மோடி’ தனிப்பட்ட முறையில் கேட்டு கொண்டார்.

 

  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னாள் குடியரசு தலைவர் ‘பிரணாப் முகர்ஜியின்’ பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

 

  • தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 298 காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ‘ஏ.கே. விஸ்வநாதன்’ ‘முதல்வர் விருது’ வழங்கினார்.

 

  • இந்தி மொழியை ஊக்குவிக்கம் விதத்தில் 2009-2012ம் ஆண்டுகளில் ரூ.349 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறியப்பட்டுள்ளது.

 

  • காங்கிரஸ் கட்சியின் ‘3 நாள் தேசிய மாநாடு’ ‘டெல்லியில்’ நேற்று(மார்ச் 16) தொடங்கியது.

 

  • மும்பை நவி மாநகராட்சி பகுதியில் பரப்பரப்பான சாலையில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்கும் வகையில் ‘மக்களே சிக்னலை மாற்றும் சிறப்பு பட்டன்’ ஒன்று சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்தினால் சிவப்பு விளக்கு எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ஐஸ்லாந்தில் நடைபெற்ற ‘சர்வதேச செஸ் போட்டியில்’ 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சென்னையைச் சேர்ந்த ‘பிரகனானந்தா’ என்ற மாணவன் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

  • இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிசிசிஐ முன்னாள் தலைவர் ‘ஜக்மோகன் டால்மியா’ குறித்த புத்தகம்(“A Tribute to Jagu”) ஒன்றை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

 

  • திருவனந்தபுரத்தில்(கேரளா) ஆண்களுக்கான ‘சர்வதேச டென்னிஸ் பெடரேசன்’ தொடரை திருவனந்தபுரம் டென்னிஸ் கிளப் நடத்தவுள்ளது.

 

  • ஜெர்மனியின் டென்னிஸ் வீரர் ‘டாமி ஹாஸ்’, சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

  • ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை – பெங்களுரு அணிகள் இன்று மோதுகின்றனர்.

 

  • கொழும்புவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேச அணி பைனலுக்கு தேர்வாகியுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: March 2018 – Science and Technology News Image

 

  • பூமிக்கு கேடு உண்டாக்கும், எரிக்கற்கள் சில சூரியனைச் சுற்றி வருகின்றது. அவற்றை நொறுக்குவதற்கு ‘கேமர்’(சுத்தியல்) என்ற மிகப் பெரிய அணு விண்கலம் ஒன்றை நாசா தயாரித்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • 2017 டிசம்பர் மாதம் வரை பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.7.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை(சிஏடி) 2017 டிசம்பர் மாத காலாண்டில் 1,350 கோடி டாலராக(ரூ.87,750 கோடி) அதிகரித்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

  • இந்தியாவின் ஜி.எஸ்.டி வரி முறை உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

  • வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு ரூ.6 இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

 

  • கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர், 1 லிட்டர் 5 பைசாவுக்கு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிதின் கட்கரி(மத்திய நீர்வள துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

English Current Affairs

 

National News

  • Prime Minister Narendra Modi addressed the Rising India Summit, organized by network 18. Rising India implies the rise of self respect among the people of India.

 

  • NITI Aayog will release comprehensive roadmaps and detailed timelines for its initiative “Sustainable Action for Transforming Human Capital in Education (SATH-E)” It is to introduce system wide governance transformation in school education.

 

  • More than 17 lakh beneficiaries enrolled under Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY). It is an cast incentive Scheme towards maternity benefit, so that an average woman gets Rs.6000/-

 

  • Union Ministry of Environment and Forests (MoEF) has granted environmental clearance for setting up India-based Neutrino Observatory (INO) project at Bodi west hills in Theni, TN

 

  • Three day annual krishi unnati mela focusing on ‘doubling farmers’ income began in new It is to create awareness among farmers about latest agriculture related development.

International

  • India to host 17th Annual conference of International competition network 2018 (ICN2018) from 21st to 23rd March 2018 in New Delhi

 

  • India has ranked 78th among 114 countries on the World Economic Forum Energy Transition Index.

Business

  • Government of India and the Asian Development Bank (ADB) have signed a $120 million loan agreement for completion of works for double – tracking and electrification of railway tracks along high – density corridors.

Appointments

  • Tata Sons Chairman N. Chandrasekaran was elected President of the Court of the Indian Institute of Science (IISC) for three years. He was elected as the 8th

 

  • Sangeeta Bahadur has been appointed as the next ambassador of India to the Republic of Belarus

                                          

Awards

  • KL Rahul is the ‘Cricketer of the year’ in the sixth edition of Wisden India Almanack, which has just been released.

 

Book

  • Sri Lanka Cricket (SLC) on the Occasion of the 70th independence of the Island nation paid a glowing tribute to former BCC President jag Mohan Dalmiya by releasing a book titled “A Tribute to Jagu”

 

­