Today TNPSC Current Affairs March 11 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 11

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • ஐஸ்லாந்து நாட்டின் பிரதமராக கத்ரின் ஜேக்கப்ஸ்டோட்டிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • மனிதர்களின் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பயன்படும் வகையில், வைரஸ் தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான பன்றிகளை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

 

  • சீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டும்தான் அதிபராகப் பொறுப்பேற்க முடியும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. தற்போது அந்த சட்டத்தைத் திருத்தி ஆயுள் முழுவதும் ஜி ஜின்பிங் அதிபராக இருப்பதற்கான வாக்கெடுப்பு சீன நாடாளுமன்றத்தில் இன்று நடக்கவுள்ளது.

 

  • ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவாகும் செய்திகளில் உண்மை செய்திகளை விட பொய் செய்திகளை அதிகமாக மக்கள் நம்புவதாக அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் சர்வே தெரிவித்துள்ளது.

 

  • ஆப்கானிஸ்தானின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா பொறுப்புணர்வுடன் செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.

 

  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் மே மாதம் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்புக்கு ஐ.நா. சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • இன்னும் 5 ஆண்டுகளில் பள்ளிகளில் உள்ள போர்டுகள் எல்லாம் டிஜிட்டல் போர்டுகளாக மாறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

 

  • சர்வதேச சூரிய ஒளியமைப்பு நிறுவகத்தின் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா வந்துள்ளார்.

 

  • வரும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாட நான்கு நகரங்களை (ஜெய்ப்பூர், மைசூர், ஹைதராபாத், அகமதாபாத்) மத்திய அரசு பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

 

  • ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

 

  • இந்திய நிறுவனங்கள், உலக தரத்தில் மின் சாதனங்களை தயாரிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • மெக்சிகோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அகில் ஷெரான் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

  • ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்று ‘ஏ’ பிரிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.

 

  • 2018–ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி ஏப்ரல் 4 முதல் 15 வரை ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற உள்ளது.

 

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஃப்ரீ ரைடு வேர்ல்டு டூர் பனிச்சறுக்கு போட்டியில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டர்டல் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

 

  • புதுச்சேரி ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் 4வது தென்னிந்திய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி இன்று துவங்கியது.

 

  • ஐ.எஸ்.எல் தொடரில் இந்த ஆண்டு ‘அவே கோல் விதி’ (அரையிறுதியின் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு அணிகளும் ஒரே அளவு கோல்கள் அடித்திருந்தால், எந்த அணி எதிரணியின் மைதானத்தில் அதிக கோல்கள் அடித்துள்ளதோ அந்த அணி வெற்றி பெறும்) சேர்க்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இ.வே.பில்(இணைய வழி ரசீது) அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

  • உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்குவதற்கு நாடு முழுவதும் 56 விமான நிலையங்களை புதுப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் மீது 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. (கேஓய்சி விவரங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக)

 

  • வால்வோ கார் நிறுவனம் தனது கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  • ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் காய்ஓய்எஸ் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

 

புதிய நியமனம்

 

  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் விமான போக்குவரத்து துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

  • ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுவயம் சேவக்), அமைப்பின் பொதுச் செயலராக பையாஜி ஜோஷி என்றழைக்கப்படும் சுரேஷ் ஜோஷி நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

English current Affairs

 

National News

  • Prime Minister Narendra Modi inaugurated National Legislators Conference on the theme ‘We for Development’ in New Delhi. The motive of the conference is to bring MPs and MLAs on a single platform where ideas and plans for development can be exchanged.

 

  • India’s biggest Media & Entertainment Services Market – enTTech 2018 was inaugurated in Mumbai. The market, spread over two days (March 7 – 8, 2018) will see fast matchmaking between 100 international delegates and their Indian counterparts.

 

  • The International Solar Alliance (ISA) and the African Development Bank (AfDb), the Asian Development Bank (ADB), the Asian Infrastructure Investment Bank (AIIB), the Green climate fund (GCF), and the New Development Bank (NDB) signed Joint financial partnership Declarations. The International Energy Agency (IEA) also signed a Joint partnership Declaration with the ISA.

 

  • French President Emmanuel Macron arrived in New Delhi on a four-day visit to India. The visit aims at strengthening the bilateral economic, political and strategic dimension of engagement between the two countries.  During the visit, India and France will sign agreements in different fields tomorrow. Prime Minister Narendra Modi and Emmanuel Macron will co-chair the Founding Conference of the International Solar Alliance.

 

  • National Crime Records Bureau (NCRB) celebrated its 33rd Inception Day, on March 11, 2018 in their newly constructed Complex at Mahipalpur, New Delhi and released “Citizen Services” bThis single App is a bouquet of various essential police related services to the citizen.

 

  • World Kidney Day 2018: 8 March: World Kidney Day (WKD) is a global health awareness campaign focusing on the importance of the kidneys and reducing the frequency and impact of kidney disease and its associated health problems worldwide.

 

  • Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan on Women’s day announced ‘Mukhyamantri Mahila Kosh’ scheme under which women who aren’t married and are above the age of 50 will be given pension. Chouhan also took the occasion to assert that any person who will misbehave with women will be hanged in public.

 

  • The harnessing of solar energy has made Diu the country’s first energy surplus Union territory and a model for an effective way for people to harness this renewable energy source. In just three years, b has made rapid progress in solar power generation.

Appointments

  • Civil Aviation Minister Ashok Gajapathi Rajuand Minister of State for Science and Technology Y S Chowdary have submitted their resignations to Prime Minister Narendra Modi. The ministers have resigned but will continue to be a part of PM Modi will control the Civil Aviation Ministry.

Business

  • As per the Second Advance estimates released by Central Statistics Office (CSO) the growth of Gross Domestic Product (GDP) is estimated to be 6.6 per cent in 2017-18, which is same as the annual average GDP growth rate during last 30 years, starting from 1987-88 to 2016-17.

 

 

 

 

­