Today TNPSC Current Affairs March 08 2018

TNPSC Current Affairs: March 2018 – Featured Image

 

We Shine Daily News

மார்ச் 08

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – World News Image

 

  • இலங்கையில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும்  மொபைல் சேவைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

  • அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் கார்ல் வின்ஸன்’ என்ற விமானம் தாங்கிக் கப்பல் வியட்நாம் வந்தடைந்துள்ளது. 

 

  • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6 பெண்கள் உள்பட 121 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

  • தென் கொரியா மற்றும் வட கொரிய நாடுகள் இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கான இருதரப்பு மாநாடு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இது கடந்த 65 வருடங்களில், 3வது முறையாக நடைபெறும் மாநாடாகும். 

 

  • மார்ச் மாதம் இறுதியில் சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் நடைபெறவிருக்கும் அரபு மாநாட்டில் ‘கத்தார்’ பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்று சவுதி அரேபியா இளவரசர் ‘முகமது பின் சல்மான்’ தெரிவித்துள்ளார். 

 

  • டெல்லி – இஸ்ரேல்(டெல் அவிவ்) இடையே மார்ச் 22ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கவுள்ளது.

 

  • லங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ‘ரஞ்சித் மத்தும பண்டார’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – National News Image

 

  • சர்வதேச விமான நிலைய சேவை தரவரிசை(பரப்பளவு மற்றும் பயணிகளின் வரத்து விகிதம்) பட்டியலில் டெல்லி(இந்திராகாந்தி விமான நிலையம்) முதலிடத்தில் உள்ளது.

 

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு உள்பட, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு ‘ஆதார்’ எண்ணைக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

  • ஆந்திராவில், மலைவாழ்மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக பைக் ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதல்வர் ‘சந்திரபாபு நாயுடு’ நேற்று தொடங்கி வைத்தார்.

 

  • தமிழகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் ‘பட்டரை பெரும்புதூர்’ சுங்கச்சாவடி பெண்கள் மட்டும் பணிபுரியும் சுங்கச்சாவடியாக செயல்பட உள்ளது.

 

  • பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல்லி அரசு ‘மாநகர பேருந்துக்களில் அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்பும் கருவியை பொருத்தியுள்ளது. 

 

  • விருப்ப ஓய்வில் செல்லும், எல்லைப் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Sports News Image

 

  • ‘தல் மெமோரியல் ரேபிட் செஸ்’ போட்டியில் இந்திய வீரர் ‘விஸ்வநாதன் ஆனந்த்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

 

  • இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி ‘ஏ கிரேடில்’ உள்ள வீரர்களுக்கு ‘ரூ.7’ கோடியும், ‘பி கிரேடில்’ உள்ள வீரர்களுக்கு ‘ரூ.5’ கோடியும், ‘சி கிரேட்’ வீரர்களுக்கு ‘ரூ.3’ கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ‘ஏ கிரேடில்’ உள்ள வீராங்கனைகளுக்கு ‘ரூ.50’ லட்சமும், ‘பி கிரேடில்’ உள்ளவர்களுக்கு ‘ரூ.30’ லட்சமும், ‘சி கிரேடில்’ உள்ளவர்களுக்கு ‘ரூ.10’ லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

  • இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டியில் ‘ஐசிஎப் அணி’ சாம்பியன் பட்டம் வென்றது. 

 

  • ‘ஃபெடரேஷன்’ கோப்பைக்கான தொடரில் ‘10000 மீ’ ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ‘சூர்யா’ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

  • பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ‘ரோலண்ட் ஓல்ட்மன்ஸ்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • பார்சிலோனாவைச் சேர்ந்த ‘பியூயலியம்’ என்ற ஆய்வு மையம், காகிதத்தால் ஆன மின் கலனை வடிவமைத்திருக்கிறது. இந்த மின் கலன் 1 முதல் 6 வோல்ட் மின் உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது.

 

  • ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மனித கண்களைப் போன்று செயல்படக்கூடிய செயற்கை கண்களை வடிவமைத்துள்ளனர்.

 

புதிய நியமனம்

 

  • உத்திரப்பிரதேசத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினராக நடிகை ‘ஜெயா பச்சன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

விருதுகள்

 

  • உலகளவில் கட்டடக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசுக்கு இணையான ‘பிரிஸ்டர் விருது’ இந்தியாவின் ‘பி.வி. தோஷிக்கு’ வழங்கப்பட்டுள்ளது

 

முக்கிய தினங்கள்

 

  • மார்ச் 08 – உலக மகளிர் தினம், சர்வதேச சிறுநீரக தினம்(மார்ச் மாதம் 2 ஆவது வியாழக்கிழமை)

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: March 2018 – Economic News Image

 

  • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் ‘விஜய் சேகர் ஷர்மா’ 1,394வது(2,208 பேர்களில்) இடத்தில் உள்ளார்.

 

  • உள்ளுரிலும், மாநிலத்திற்குள்ளும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு வரும் ஜுன் 1ம் தேதி முதல் இ-வே பில் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

 

  • இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீஸ் அம்சத்தில் போர்டிரெயிட் விரைவில் வழங்கப்பட உள்ளது.

 

  • பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வென்ச்சர் கேபிடல் முதலீடு 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. 

 

  • பேடிஎம் நிறுவனம் முதலீடு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சொத்து நிர்வாக சேவைகளுக்கு ‘பேடிஎம் மணி’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது.

 

English Current Affairs

 

National News

  • International Women’s Day is a worldwide event that celebrates the achievements of women everywhere. This year’s celebration comes at the heels of an unprecedented movement for women’s rights as2018 marks 100 years since women gained the vote after the suffragette movement.

 

  • Union Minister for Road Transport & Highways Nitin Gadkari has announced that soon there will be no human interface in granting driving licences to heavy vehicle drivers in the country. He has launched the scheme for District Driving Training Centres in New Delhi.

 

  • Tech giant Microsofthas inked its first renewable energy deal in India for powering its new facility in Bangalore. The facility, which will be operational starting June, is spread over 5.85 lakh square feet. The agreement will see Microsoft purchase 3 megawatts of solar-powered electricity from Atria Power for its new office building in Bangalore, meeting 80% of the projected electricity needs at the facility

 

  • Iraq has become India’s biggest crude oil supplier byovertaking Saudi Arabia with a wide margin in this current financial year.

 

  • The Ministry of Human Resource Development has Sanctioned 1000 crore for phase II of Impacting Research Innovation and Technology (IMPRINT) India programme to boost research and innovation in the country

 

  • 40 participants of Indian origin from 9 countries attended 46th edition of Know India Programme. Madhya Pradesh was the partner state of this edition. The objective of the programme is to engage and make students young professional of Indian Diaspora feel sense of connect with their motherland.

 

  • Street Lightning National Programme was launched by prime minister on January 2015 under this scheme Energy Efficiency Service Limited has installed 49 lakh LED Street lights in 28 states and UT’s under this programme.

International news

  • Washington has become the first stateto enact its own net-neutrality requirements after U.S. regulators repealed Obama-era rules designed to keep the internet an even playing field. The new law also requires internet providers to disclose information about their management practices, performance and commercial terms. Violations would be enforceable under the state’s Consumer Protection Act.

 

  • India is all set to become the 69th memberof the European Bank for Reconstruction and Development (EBRD) after shareholders of the international financial institution gave their nod to the country’s candidature. The formal membership process will now get underway, which includes the purchase of shares by India at an estimated cost of around 1 million euros. The EBRD’s Board of Governors, which represents all the existing shareholders of the UK-based bank, voted in favour of India’s membership application.

 

  • With a fortune worth $110 billion, Amazon founder Jeff Bezos is the world’s richest manand tops a 2018 Forbes Magazine list of billionaires. According to the Forbes, Bezos is the first person to top $100 billion as number one on the Forbes list of the World’s Billionaires

 

 Appointments

  • Nagaland Governor PB Acharyahas appointed Neiphiu Rio as the new Chief Minister of the state.  Mr Riowill replaces TR Zeliang. The Governor has received letters of support in favour of Rio from MLAs of BJP, JD(U) and an Independent besides NDPP

 

 Banking

  • The Reserve Bank of India (RBI) has imposed a penalty of Rs 3 crore on private sector Axis Bank for violation of non-performing asset (NPA)classification norms, and Rs 2 crore on state-run Indian Overseas Bank (IOB) for not complying with the Know Your Customer (KYC) regulations.

 

 Awards

  • Architect Balkrishna Vithaldas Doshihas become the first Indian to win the Pritzker Prize, the highest award in architecture. Calling the 90-year-old’s works “poetic“, the foundation commended him for respecting the eastern culture and working towards enhancing the quality of life in India.

Obituary

  • Veteran Bollywood actor,who was fondly called ‘Shammi aunty’ by many in the film fraternity passed away at the age of 89. Born as Nargis Rabadi she has appeared in over 100 films.

 

­