Today TNPSC Current Affairs June 05 2018

TNPSC Current Affairs: June 2018 – Featured Image

 

We Shine Daily News

ஜுன்  05

தமிழ்

உலக செய்திகள்

 

 TNPSC Current Affairs: June 2018 – World News Image

 

  • சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

 

  • ஜோர்டானில் புதிய வரி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் நடத்திய போராட்டத்தினால், அந்நாட்டு பிரதமர் ஹனி முல்கி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

  • சூரிய குடும்பத்திற்கு வெளியே, வியாழன் கோளை விட 1.4 மடங்கு அகலம் அதிகம் உள்ள வாஸ்ப்-127பி என்ற கோளில் தண்ணீர் மற்றும் உலோகங்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

  • ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: June 2018 – National News Image

 

  • எம்.பி, எம்எல்ஏக்கள் தெடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்காக, 11 மாநிலங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் தவணையாக ரூ.179 கோடியை மத்திய சட்ட அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

 

  • ஹரியானா மாநிலத்தில், புதிதாக பிறந்த குழந்தையை பராமரிப்பதற்காக அனைத்து துறையில் உள்ள ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

 

  • மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், பீகாரை சேர்ந்த கல்பனா குமாரி என்ற பெண் 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 679 மதிப்பெண்களுடன் 12வது இடத்தில் உள்ளார்.

 

  • மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை(2018) தமிழகத்தை சேர்ந்த 1,14,602 மாணவ, மாணவியர் எழுதினர். இதில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாகும்.

 

  • கர்நாடகாவில், மக்கள் தங்கள் விவசாய நிலம், வீட்டுமனை, வணிக வளாகம் உள்ளிட்ட ஆவணங்கள் வேண்டுமானால், மாநிலத்தில் வருவாய் முறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் 769 ஒன்றிய அலுவலகங்களில் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Sports News Image

 

  • தென் ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது, தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடாவுக்கு 2வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.

 

  • இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்கேற்கும், இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நடந்து வருகிறது. இப்போட்டி இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியின் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா-கென்யா அணிகள் மோதின. இப்போட்டியில் சுனில் செத்ரி தனது 60வது கோலை அடித்தார்.

 

  • ஆசியக் கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி கோலம்பூரில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஆட்டத்தில், இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

 

  • டேராடூனில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் வங்தேச அணிகள் மோதின, இதில் ஹைதராபாத் அணி வீரர் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் குறைந்த டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: June 2018 – New Appointment News Image

 

  • இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக, ஐடிபிஐ வங்கி மேலாண் இயக்குநர் எம்.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • காவிரி மேலாண்மை வாரியத்திற்கு புதுச்சேரி நீர்வளத்துறை செயலாளர் அன்பரசு, பொதுப்பணித்துறை பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 5 – உலக சுற்றுச்சூழல் தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Economic News Image

 

  • வங்கிகள் இலவசமாக அளிக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

  • நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை(பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா) இணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

 

  • மாருதி சுசுகி நிறுவனம், 34 ஆண்டுகளில் மொத்தம் 2 கோடி வாகனங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

 

English Current Affairs 

National News

  • Govt Launches ‘Krishi Kalyan Abhiyaan’ To Help Farmers In Aspirational Districts To Raise Their Income
    • The Agriculture Ministry in line with the Prime Minister Narendra Modi’s vision of doubling farmers’ income by 2022 has launched the Krishi Kalyan Abhiyaan from 1st June to 31st July 2018.

 

  • Shripad Yesso Naik to inaugurate National Health Editors’ Conference on Yoga in New Delhi on June 05, 2018.
    • This Conference on ‘Evidence Based Recent Innovative Research on Yoga – A Review of Yoga Research’ is being organized to mark the beginning of International Day of Yoga, which takes place on 21st June every year.

 

  • Govt Announces 8,000-Crore Package For Sugarcane Farmers
    • The Union government has announced a package of more than Rs 8,000 crore aimed to provide relief to sugarcane farmers and to clear their dues.

 

  • Financial Literacy Week Begins
    • The Reserve Bank of India has chosen customer protection as a theme for the Financial Literacy Week which has begun on June 4. This event ending on June 8, will focus on creating awareness among customers of banks about financial products and services, good financial practices and going digital.

 

International News

  • French Swimmer Begins Record Pacific Crossing Attempt
    • A French swimmer has set off from Japan aiming to become the first person to swim across the Pacific Ocean.
    • Ben Lecomte will swim for eight hours a day for more than six months as he heads towards the US west coast. He is hoping to raise awareness for climate change.

 

Important Days

  • World Environment Day: 05th June 2018
    • World Environment Day is the United Nations’ (UN) most important day for encouraging worldwide awareness and action for the protection of our environment. Since it began in 1974, it has grown to become a global platform for public outreach that is widely celebrated in over 100 countries.
    • The theme for the World Environment Day 2018, “Beat Plastic Pollution”.

 

Appointments

  • MK Jain Appointed RBI Deputy Governor
    • Urjit Patel is Present Governor of RBI.
    • RBI’s Deputy Governor- NS Vishwanathan, Viral V Acharya, BP Kanungo and newly appointed MK Jain.

 

 

 

­