Today TNPSC Current Affairs February 9 2018

Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 09

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • உலகில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் தென் கொரியா, ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1, 2, 3 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 11வது இடத்தில் உள்ளது

 

 • கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரத்தானியா ஆகிய நாடுகள் உள்ளடங்கிய பன்னாட்டு மக்கள் இயக்கம், தடையற்ற போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் கொள்கை போன்றவற்றை அனுமதிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனைப் போன்று மற்றொரு அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது

 

 • அமெரிக்காவின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் ஹெச்1பி விசா பெறுவதில் 15 நிறுவனங்கள் மீது தடை(சம்பளம் மற்றும் வேலை நேரத்தை மீறிய காரணத்தினால்) விதித்துள்ளது

 

 • உலக தமிழ் பெண்கள் மாநாடு மார்ச் 8ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது

 

 • மாலத்தீவு வெளியிட்டுள்ள நட்பு நாடுகள் பட்டியலில் இந்தியா பெயர் இடம் பெறவில்லை.

 

 • பறவை காய்ச்சல் பாதிப்புள்ளதால், இந்தியாவிலிருந்து கோழி முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது

 

 • இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம், ஜோர்டானுக்கான புதிய தூதராகஅமிர் வெய்ஸ்ப்ராட்டை’ நியமித்துள்ளது

 

 • மல்யுத்த வீரர் ‘ஜான் ஸீனா’ குழந்தைகளுக்காக ‘எல்போ கிரீஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அக்டோபர் 9ம் தேதி வெளிவரவுள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • சர்வதேச அளவில் அறிவுசார் சொத்துரிமை நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கும் நாடுகளுக்கான தரவரிசை பட்டியலை அமெரிக்க தொழில் வர்த்தக சபை வெளியிட்டது. இதில் இந்தியா 44வது இடத்தில் உள்ளது

 

 • 2018ம் ஆண்டு சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் அசாமை சேர்ந்த தேஜ்பூர் மத்திய பல்கலைக்கழகம் 100வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் தேஜ்பூர் மத்திய பல்கலைக்கழகம் 7வது இடத்தில் உள்ளது

 

 • நீட் தேர்வுக்கான மாணவர் விண்ணப்பங்களில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

 

 • மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் ‘பீல் தி ஜெயில்’ என்ற பெயரில் ஒரு நாள் சிறை வாழ்வு திட்டத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகள் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 • 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு விரைவில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

 

 • 2016-2017ம் கல்வி ஆண்டில் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்பட 133 கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

 

 • கோவாவில் முதன்முறையாக பைக் ஆம்புலன்ஸ் வசதியை அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிமுகம் செய்யவுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக கர்நாடகா மாநிலத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது

 

 • நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்பட உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று(பிப்ரவரி 09) தொடங்குகிறது

 

 • உலக குத்துச்சண்டை போட்டிகள் டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் ‘இந்தியன் டைகர்ஸ்’ என்ற பெயரில் இந்திய அணி விளையாடுகிறது

 

 • விளையாடு இந்தியா போட்டியில் சிறுவர்களுக்கான ஹாக்கிப் போட்டியில் ஒடிஸா முதலிடம் பிடித்துள்ளது

 

 • பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் அரியானா மாநிலம் 38 தங்கம், 102 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழகத்துக்கு 28 பதக்கங்கள் கிடைத்துள்ளது

 

 • இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ.3,500 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளது

 

 • இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘லசித் மலிங்கா’ சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

 • ‘2018 சிபி’ என்ற விண்கல் இன்று பூமிக்கும், நிலவுக்கும் இடையே கடக்கவுள்ளது என நாசா அறிவித்துள்ளது

 

விருதுகள்

 

 • கட்டுரைப் போட்டிக்காக பிரிட்டன் பாத் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் ‘இளைய இந்தியா மாணவர் விருதினை(2018)’ வசந்த் வேலி பள்ளியைச்(டெல்லி) சேர்ந்த மாணவன் ‘நமித் மேகிஜா’ வென்றுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • நாடு முழுவதும் 2017ம் ஆண்டு ரூ.16,365.20 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகி உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • மத்திய அரசின் பிரதம மந்திரி ‘ஆவாஸ் யோஜனா’ உள்ளிட்ட திட்டத்தின் கீழ் புதிதாக வீடு வாங்குபவர்களிடம் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

 

 • தென் கொரியாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது

 

 • கூகுள் ஸர்ச் இன்ஜினில் பாரபட்சம் கடைப்பிடிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதால் கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் ரூ.135.86 கோடி அபராதம் விதித்துள்ளது

 

 • பி.எஸ்.என்.எல் நிறுவனம் கேரளாவில் முதல் முறையாக 4ஜி செல்போன் சேவையை தொடங்கியுள்ளது

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த மின் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.ஹெச்.இ.எல்(பெல்) அதன் முதலீட்டாளர்களுக்கு 40 சதவீதம் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது

 

English Current Affairs

National News

 • Defence Minister Nirmala Sitharamanhas constituted a 13-member advisory committee to monitor and expedite capital acquisition projects for the modernisation of the armed forces. The committee will be headed by Vinay Sheel Oberoi, former secretary in the government.

 

 • Prime Minister Narendra Modi will address rallies at Sonamura in Sipahijala district and Kailasahar in Unakoti district. Assam Chief Minister and BJP leader Sarbanand Sonowal addressed public meetings in Teliamura and Majlishpur

 

 • Union Cabinet approved implementation of Prime Minister’s Research Fellows (PMRF) schemeat a total cost of 1,650 crore rupees for a period of seven years beginning 2018-19. The scheme was announced in the Union Budget for 2018-19.Under this scheme, the best students who have completed or are in the final year of B. Tech or Integrated M.Tech or M.Sc. in Science and Technology streams from IISc or IITs or NITs or IISERs or IIITs will be offered direct admission in the Ph.D. programme in the IITs or IISc.

 

 • The Cabinet Committee on Economic Affairs (CCEA) approved to enhance target base of Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) from 5 crore to 8 crores. The revised target of PMUY will be achieved by 2020 with an additional allocation of 4,800 crore. The decision comes in the wake of the huge response to PMUY from the women particularly in rural areas and to cover such households not having LPG connection.

 

 • The Memorandum of understanding between India and Tunisia for co operation on youth matters. Activities under this MoU would include organization of youth exchange programmes invitation to international conference, seminars, youth festivals, and workshops.

 

 • The Memorandum of Co-operation will be signed between Federal Law Enforcement Training Centres, USA and Bureau of police Research and Development. It envisages co operation between two countries in security related matters under the aegis of the India-US Homeland Security Diaglogue.

 

 • The Memorandum of Understanding will be signed between the Department of Economic Affairs and the Treasury, Government of

 

 • MoU with United Kingdom and Northern Ireland on Co operation in Skill Development training institutes will be created.

Sports

 • The first Khelo India School Games concluded in New Delhiwith sports powerhouse Haryana topped the overall medal tally. The state won 102 medals which include 38 gold and 26 silver.

 

 • Maharashtrawith 110 medals (36 of them gold) finished second while Delhi with 94 medals came third. Sports Minister, Col Rajyavardhan Rathore presented the top State Haryana with the glittering trophy.

Appointments

 • SBI Card,the country’s second-largest credit card issuer, has appointed Hardayal Prasad as new Managing Director (MD) & Chief Executive Officer (CEO) of the company. He has replaced Vijay Jasuja.

 

Banking

 • IndusInd Banklaunched its new Sonic Identity, which is essentially a musical logo called ‘MOGO’, as part of its branding initiatives. The objective for associating to a sonic identity is building the Bank’s brand imagery with the strategic use of music and sound for brand experiences and audience connection.

 International news

 • Bermuda has become the first country in the world to abolish same sex marriage.

Awards and Recognition

 • To set a record in the Guinness book for ice hockey on the world’s highest altitude, an international level tournament was organized at Chiba Kargyam in Ladakh region of Jammu and Kashmir. Five international teams from USA, Germany, Canada, Slovakia and Russia and a local team participated in the tournament. 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube