Today TNPSC Current Affairs February 28 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image

 

We Shine Daily News

     பிப்ரவரி 28

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • மொரிஷீயஸ் நாட்டில் மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ள 50வது ஆண்டு சுதந்திர தின விழாவில் இந்திய குடியரசு தலைவர் ‘ராம்நாத் கோவிந்த்’ சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்

 

  • வெளிநாட்டு மக்களிடமிருந்து சிறுநீரகங்களை தானம் பெற இலங்கை அரசு தடை விதித்துள்ளது

 

  • சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலின் போது, பொதுமக்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பதற்கும், தகவல் பரிமாற்றம் செய்வதற்கும் தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தபடவுள்ளது

 

  • சவுதி அரேபியாவில் சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறையில் முதன் முறையாக ‘தாமாதர் பின்ட் யூசுப் அல் ரம்மா’ என்ற பெண் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • ஆப்கானிஸ்தான்(துணை வெளியுறவு துறை மந்திரி -ஹெக்மத் கர்சாய்), இந்தியா(தூதரக இணை செயலர் – தீபக் மிட்டல்), அமெரிக்கா(அலைஸ் வெல்ஸ்) ஆகிய 3 நாடுகளும் 4வது முறையாக முத்தரப்பு கூட்டத்தினை நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு, அமைதி, ஜனநாயகம், பன்முக தன்மை மற்றும் தீவிரவாதத்தில் இருந்து விடுவிப்பதற்கு 3 நாடுகளும் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது

 

  • ஜேர்மனியில், காற்று அதிகளவில் மாசடைவதால் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

  • ஆயுத வலிமை குறைப்புக்கு என்று தனி அமைச்சகத்தை அமைக்க நியூசிலாந்து பிரதமர் ‘ஜெசிந்தா ஆண்டர்ன்’ உத்தரவிட்டுள்ளார்

 

  • சீனா மின்காந்த தண்டவாளம் மூலம் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் இரயிலை தயாரித்து வருவதாக அறிவித்துள்ளது

 

  • கலிஃபோர்னியாவில் உலகின் மிகப் பெரிய விமானத்தின்(ஸ்ட்ராடோலாஞ்ச்) சோதனை ஓட்டம் வெற்றியில் முடிந்தது

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • 16 நாடுகளை சேர்ந்த கடற்படையினருடன் இணைந்து இந்தியா நடத்தும் ‘மிலன்’ கூட்டுப் போர்பயிற்சி மார்ச் 6ம் தேதி அந்தமான் நிகோபர் தீவுகளையொட்டிய கடற்பகுதியில் நடைபெறுகிறது

 

  • 2014-2017 வரை பிரதமர் ‘நரேந்திர மோடி’ மேற்கொண்ட வெளிநாடு பயண செலவுகள் குறித்த விவரங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

 

  • கடைகளுக்கு சீல் வைக்கும் பிரச்சனைக்கு, தீர்வுகாண, ‘மாஸ்டர் பிளான் 2021’ திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

 

  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) கணக்குகளை ‘உமங்’ என்ற செயலி மூலம் ஆதார் எண்ணுடன் இணைக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

  • இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளில், 2016-2017ம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட 35 விருதுகளில் 11 விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது

 

  • நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய இரயில்வே துறை அறிவித்துள்ளது

 

  • தமிழகத்தில் 94 தபால் மையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படவுள்ளது

 

  • குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற பள்ளி ஐடி கார்டினை அடையாள அட்டையாக சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ‘ராஜேந்திரகுமார்’ 55கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்

 

  • அகில இந்திய தேசிய விளையாட்டு போட்டியில் மூத்தோர் பிரிவில் திருவள்ளுரை சேர்ந்த ‘சாமுவேல்’ என்றவர் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்றுள்ளார்

 

  • ‘விஜய ஹஸாரே கோப்பை’ கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

  • சுவிட்சர்லாந்தின் ‘ரோஜர் பெடரலுக்கு’, 2017ம் ஆண்டுக்கான ‘மீண்டு வந்த வீரர்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விளையாட்டு உலகின் ஆஸ்கர் விருதான ‘லாரல்ஸ் விருதினை’ அதிக முறை வென்ற வீரர் என்ற சாதனையை  படைத்துள்ளார்.

 

  • மார்ச் மாதம் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 போட்டியில் இலங்கை அணிக்கு ‘தினேஷ் சந்திமால்’ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • ஆடவர் மற்றும் மகளிருக்கான உலக ஜீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் ஜுலை மாதம் நடைபெறவுள்ளது

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

  • நிலவின் சுற்று பாதையில் உள்ள நாசாவின் விண்கலமான ‘எல்ஆர்ஓ மற்றும் சந்திரன்-2’ விண்கலத்தில் இடம்பெற்ற ‘மூன் மினராலஜி மேப்பர்’ என்ற கருவி மூலம், நிலவின் அனைத்து பகுதியிலும் கனிம வளங்கள் மற்றும் நீர் செரிந்துள்ளதை நாசா கண்டுபிடித்துள்ளது

 

  • விண்வெளி வீரர்களுக்கு என்று உயிர்காக்கும் கருவி மற்றும் கழிவறை வசதி கொண்ட புதிய ஆடையை நாசா தயாரித்துள்ளது

 

முக்கிய தினங்கள்

 

  • பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • 2018 சர்வதேச மொபைல் விருதுகள் பட்டியலில் ‘சிறந்த நுகர்வோர் சேவையை வழங்கும் மொபைல் ஆப்ரேட்டருக்கான விருது’ ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

 

  • மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் சென்ற மாதம் (ஜனவரி) ரூ.86,318 கோடியாக குறைந்துள்ளது

 

  • பிஎஃப் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் எடுக்க ஆன்லைனில் மட்டுமே விண்ணிபிக்க வேண்டும் என பிஎஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது

 

  • பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து இந்திய பங்குச்சந்தைகள் ஆண்டுக்கு 13 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்

 

English Current Affairs

 

National News

 

  • In a move to provide Delhi residents relief from the burgeoning air pollution crisis in the city, the Central Government has sanctioned schemes worth Rs.1200 crore an alarming pollution levels in the capital.

 

  • Union Minister of Drinking water and sanitation Sushri Uma Bharati launched the Swajal Pilot Project at Village Bhikampura, Karauli, and Rajasthan. It ensures the availability of clean drinking water to every household round the year.

 

  • Shri J P Nadda, Union Minister of Health and Family Welfare chaired the 5th meeting of the Mission steering Group of the National Health Mission (NHM) in New Delhi.

 

  • Country’s first Aviation Multi Skill development Centre launched in Chandigarh by Union Civil aviation Minister P. Ashok Gajapthai Raju

 

  • A High level Committee chaired by Union Home Minister Rajnath singh approved a Central assistance of around Rs.6000 Crore for nine states which suffered from natural calamities during 2017 – 2018.

 

  • Government starts process to build India’s first defence industrial ‘Quad’ (quadrilateral corridor) linking Chennai with four other cities of Tamil Nadu to promote industries manufacturing weapons and military equipments.

 

  • Haryana cabinet approves death penalty for rape of victim aged 12 or less.

 

  • Indian Railways launch idea competition ‘SRIJAN’ to redevelop over 600 major railway stations in India. SRIJAN stands for ‘Station Rejuvenation through Joint Action’.

 

International

 

  • The seventh meeting of Eminent persons. Group (EPG) on Nepal – India relations was held in Kathmandu, Nepal.

 

  • India has ranked 47th out of 86 countries on Inclusive Internet Index 2018. This year’s ranking marks a drop of 11 spots as compared 36th rank in 2017.

 

  • Saudi Arabia for the very first time opened applications for women to enlist in the military as the Kingdom continues to enact granting females more access to a wide range of previously for bidden careers.

 

Business

 

  • Internet giant Google has tied up with State Bank of India (SBI) for its mobile payments app Tez.

 

  • Users for prepaid payment Instruments (PPI) such as mobile wallets will have to complete the KYC requirements by Feb 28 as the RBI has refused to extend the deadline any further.

 

Obituary

 

  • On 28th Feb Kanchi acharya Sri Jayendra Saraswathi died after suffering from breathing problems at a hospital in Kanchipuram, Tamil Nadu.

 

Important Days

 

  • On 28th February ‘National Science Day’ was celebrated all over India with theme “Science and Technology for a sustainable future”.

 

­