Today TNPSC Current Affairs February 25 2018

 

We Shine Daily News

     பிப்ரவரி 25

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • பெய்ஜிங்கில் (சீனா) இருந்து நியூயார்க் (அமெரிக்கா) நகருக்கு குறைந்த நேரத்தில் மிக அதிவேகமாக (6 ஆயிரம் கி.மீ.) பறந்து செல்லும் ஹைபர் சோனிக் விமானத்தை சீனா தயாரித்துள்ளது.

 

  • ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் பாக்கெட் சேஞ்ச் என்ற புதிய செயலியை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிகா பண்டாரி (இந்திய மாணவி) உருவாக்கியுள்ளார்.

 

  • பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு சொற்களை ஒலி வடிவில் மாற்றி தரும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை ஜப்பான் வடிவமைத்துள்ளது.

 

  • அணு ஆயுத சோதனை நடத்தி, அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் வடகொரியா நாட்டின் மீது புதியதாக 56 தடைகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • மும்பை துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்துள்ள எலிபண்டா தீவுகளில் உள்ள மூன்று கிராமங்கள் 70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார இணைப்புகளை பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

  • துறைமுக செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க உள்ளதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

 

  • இமயமலையின் உச்சியில் உள்ள ஹமனூர் கிராமம் முதன் முறையாக சோலார் பேனல்கள் எனப்படும் சூரியத் தகடுகள் மூலம் மின்சார வசதி பெற்றுள்ளது.

 

  • யூனியன் பிரதேசமான டாமன் – டையு மேம்பாட்டுக்காக ரூ.1000 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

 

  • ஆரோவில் (விழுப்புரம்) பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

 

  • புதுச்சேரியை சிறந்த சுற்றுலா தலமாக்க மத்திய அரசு உதவி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ‘வால்ட்’ பிரிவில் அருணா ரெட்டி (இந்திய வீராங்கனை) வெண்கலம் வென்றுள்ளார்.

 

  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து வேலைப்பளு காரணமாக விராட் கோலி மற்றும் தோனி (முன்னாள் கேப்டன்) ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

  • இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

  • சிறந்த டெஸ்ட் அணிக்கான விருதை இந்திய அணி வென்றுள்ளது. பரிசாக ரூ.10 இலட்சம் அமெரிக்க டாலரை விரைவில் வழங்க உள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

 

  • தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது டுவெண்டி-20 போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

  • தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டன் அணி முதல் முறையாக அதிக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

  • சரக்கு போக்குவரத்துக்கான ‘இ-வே’ ரசீது எனப்படும், மின் வழிச் சீட்டு ஏப்ரல் 1 முதல் மீண்டும் அறிமுகமாக உள்ளது.

 

  • இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் மேற்கொள்ளும் முதலீடு கடந்த ஜனவரி மாதத்தில் 70 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

 

  • ஏர் ஆசியா நிறுவனம் பெங்களுர் – சென்னை வழித்தடத்தில் மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

  • Union Commerce and Industry ministry has appointed four institutes (IIFT, ICAI, NICMAR and ICSI) to interact with stakeholders and suggest measures to push up India’s ranking in “ease of doing business” Index.

 

  • 15th editions of BioAsia, the Annual flagship event of the government of Telangana was held in Hyderabad.  The theme of BioAsia 2018 was “Right Time, Right Now

 

  • India’s premier defense research institute DRDO carried out successful flight of its “RUSTOM 2 DRONE”, a medium altitude long endurance unmanned aerial vehicle (UAV) at Karnataka.

 

  • Scientists from BSI have identified a new plant species from two protected National Parks in West Bengal. Named “Drypetes Kalamii”. The plant is named after President Abdul Kalam.

 

International News

 

  • Saudi Arabia conducted the first ever jazz festival in Riyadh. It is conducted for 3 days.

 

  • 7th meeting of the Eminent Persons Group (EPG) on Nepal-India relations began in Kathmandu, Nepal.

 

Business

 

  • Energy Efficiency Services Ltd (EESL) signed MOU with Andhra Pradesh to invest Rs.3730 crore in the state.  MOU for establishment of small solar PV bared power projects.

 

  • In a bid to protect domestic producers, India has imposed anti-dumping duty on import of ceramic tableware and kitchenware from China.

 

  • Tamil Nadu state government announced an agreement with Microsoft to improve the integration of technology in teaching and learning across the state.

 

Sports

 

  • Aruna Budda Reddy became the first Indian gymnast to win an individual medal at the gymnastics world cup by bagging a bronze medal in the woman’s vault event in Melbourne, Australia.

 

  • Jithin Paul becomes first Indian athlete to be banned by National Anti-Doping Agency (NADA) for possession of drug.

­