Today TNPSC Current Affairs February 18 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 18

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • அமெரிக்காவின் பில்கேட்ஸ் அறக்கட்டளை வழங்கும், கல்வி உதவித்தாகையை பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படிக்க, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள்(காம்யா வரகூர், மோனிகா குல்லார், நீல் தவே, அயன் மண்டல், பிரணாய் நாதெல்லா, வைத்தீஷ் வேல் அழகன்) தேர்வாகியுள்ளனர்

 

 • அமெரிக்கா, தாய்லாந்து இணைந்து நடத்தும் வருடாந்திர இராணுவப் பயிற்சியில்(கோப்ரா கோல்டு) பிற நாடுகளை சேர்ந்த இராணுவ வீரர்களும் பங்குபெற்றுள்ளனர். இதனால் இந்த பயிற்சி தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய இராணுவ பயிற்சியாக கருதப்பட்டுள்ளது

 

 • விண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்கு ரோபோ ஒன்றினை நாசா நிறுவனம் அனுப்பி வைத்திருந்தது. தற்போது அந்த ரோபோ செயல் இழந்து வருவதால் அதை பணி நீக்கம் செய்ய நாசா தீர்மானித்துள்ளது

 

 • பிரான்ஸில், கால்களால் பெடல் செய்யும் ஏர்பலூன் எனப்படும் இலகு ரக விமானம் ஒன்று தயாரித்தும், நீண்ட தூரம் அதனை இயக்கியும் ‘ஸ்டீபன் ரவ்ஸன்’ என்பவர் சாதனை படைத்துள்ளார்

 

 • ஈரான் நாட்டின் சபஹார் துறைமுகத்தை இனி இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம் என ஈரான் அதிபர் ‘ஹசன் ரூஹானி’ தெரிவித்துள்ளார்

 

 • திபெத்தில், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழைமை வாய்த்த ‘ஜோகாங்’ என்ற புத்த மடாலயம் தீப்பற்றி எரிந்தது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன 15 மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) உத்தரவிட்டுள்ளது

 

 • வர்த்தகம், எரிசக்தி, தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக ஈரான் மற்றும் இந்தியா இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

 

 • அன்னிய ஆடவர்களிடம், வளையல் அணிந்து கொள்ளக் கூடாது. திருமணம் போன்ற விழாக்களில், ஆடவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என முஸ்லிம் பெண்களுக்கு ‘தாரும் உலும் தேவ்பந்த்’ எனப்படும் முஸ்லிம் அமைப்புபத்வா’ எனும் தடை விதித்துள்ளது

 

 • சிறப்பு இரயில்களில் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இனி ஆன்லைன் மூலமாக அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 • திருநங்கைகளுக்காக தனி கழிவறை அமைக்க நாக்பூர் மாவட்ட அரசு முடிவு செய்துள்ளது

 

 • பா.ஜ.காவின் புதிய தலைமையகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்

 

 • சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் 2018-2019ம் கல்வியாண்டு முதல் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • தேசிய நடைப்பந்தய சாம்பியன்ஷிப்  போட்டியில் ஆடவருக்கான 50 கி.மீ. பிரிவில் ஹரியாணா வீரர் ‘சந்தீப் குமார்’ சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ‘ஜோர்டான் தாம்சன்’ சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • நார்வே வீராங்கனை ‘பிஜோர்ஜென்’ குளிர்க்கால ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்

 

 • இங்கிலாந்து வீராங்கனை ‘லிஸ்சி யார்னால்டு’ குளிர்கால ஒலிம்பிக் ஸ்கெல்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

 

 • குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் போட்டியில் பிரிஸ்டைல் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ‘டாரியோ கலோக்னா’ தங்கப்பதக்கம் வென்றார்

 

 • தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில இறகு பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் மதுரை அணியும், ஆண்கள் பிரிவில் கோவை அணியும் முதலிடம் பிடித்துள்ளது

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • உலகில் அதிக மதிப்புள்ள நிறுவனங்கள் பட்டியலில் அமேசான் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • மத்திய கனரக தொழில்துறை, தேசிய வாகன கொள்கைளின் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது

 

 • இந்திய நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் ரூ.97,500 கோடி மதிப்புக்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன

 

 • இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்க அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

 

 • உணவுப் பொருட்கள் விலை குறைவால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், இந்தாண்டு ஜனவரியில் 2.84 சதவீதமாக சரிவடைந்துள்ளது

 

 • நெஸ்லே இந்தியா நிறுவனம் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.311.83 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது

 

English Current Affairs

National News

 • The Union Agriculture & Farmers welfare Minister addressed at the National Banana festival, 2018 held in Thiruvananthapuram, Kerala

 

 • PM Modi will inaugurate the Fourth Container Terminal (FCT) of Jawaharlal Nehru port Trust in Mumbai

 

 • The Government will set up 562 more Ekalavya Model Residential School (EMRS) in tribal areas across the country

 

 • PM Modi inaugurates the ‘Magnetic Maharashtra’ convergence summit 2018 in Mumbai, Maharashtra.

 

 • Lok Sabha Speaker sumitra Mahajan inaugurated the common wealth parliamentary Association (CPA) conference in Patna, Bihar.

 

 • Shilpa Shetty’s the Dairy of Domestic Diva’ It contains recipes of various dishes along with the caloric intake details.

International News

 • India’s defence budget broke into the world’s top fine, beating the UK for the first time, a new report by a London – based global think – tank

 

 • President of Iran, Hassan Rouhani arrived in India on a three – day state visit. He has signed these MOUs with India.

 

 • East China’s Qingdao city will host the shanghai cooperation organization in June this year

Business

 • India’s largest IT services company TCS is recognized as World’s best employer by the TOP Employer Institute for the third consecutive year.

 

 • India ranked as 78th position on a globalization index brought out by international logistics company DHL.

Awards

 • Vikas sathaye, a pune born person has been honoured with the scientific and Engineering Academy Award at the Oscars scientific and Technical awards 2018.

Appointment

 • Sachin Tendulkar has been made the brand ambassador of the upcoming T20 Mumbai league.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube