Today TNPSC Current Affairs February 11 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 11

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • உலகில் முதல் முறையாக பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனையை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

 

 • உலகிலேயே மிக உயரமாக கண்ணாடி தொங்கு பாலத்தை (தென் மேற்கு சீனாவின் பெடாய் மலை – 6,500 அடி உயரம்) அமைத்து சீனா சாதனை படைத்துள்ளது.

 

 • அரபு நாடுகளுக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் முதல் நாடாக இந்தியா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

 

 • 2011 முதல் 2016ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் இந்துக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து 4,40,300பேர் உள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபர கழகம் தெரிவித்துள்ளது.

 

 • அபுதாபியில் முதல் முறையாக இந்துக் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

 

 • அமெரிக்க அரசின் துணை அட்டர்னி ஜெனரல் ரிச்செல் பிராண்ட், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • உலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களுரு இடம் பிடித்துள்ளது.

 

 • போலி நிறுவனங்கள், மோசடி தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றை ஒழிக்க நிறுவனங்களின் அடையாளமாக பான் எண்ணை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • ஆந்திராவில் திருடர்களை பிடிக்க புதிய மொபைல் செயலி (லாக் ஹவுஸ் மானிட்டரிங் சிஸ்டம் மொபைல் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

 • ஆதார் எண் இல்லாத காரணத்திற்காக எந்த ஒரு குடிமகனுக்கும், எந்த ஒரு சேவையும் நிறுத்தப்படக் கூடாது என்று மத்திய அரசிடம் தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

 

 • ஆந்திராவின் பல்வேறு திட்டப் பணிகளுக்காக மத்திய அரசு 1,269 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • ஓமனில் நடைபெற்று வரும் ITTF உலக ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

 

 • தென்கொரியாவில் நடைபெற்று வரும் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான ‘ஸ்கியத்லான்’ என்ற பனிச்சறுக்கு போட்டியில் வென்று முதல் தங்கப்பதக்கத்தை “சார்லோட் கல்லா” (சுவீடன் வீராங்கனை) பெற்றுள்ளார்.

 

 • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது இதில் “ஷிகர் தவான்” (இந்திய அணியின் துவக்க வீரர்) சதம் அடித்ததை அடுத்து, 100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

 • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • இந்திய போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி (இந்தியா) ஏப்ரல் மாதம் முதல் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே வங்கி சேவைகளை பெறுவதற்கான திட்டம் தயாரித்து வருகிறது.

 

 • சொகுசு கார் நிறுவனங்களான போர்ஸெ (Porsche) மற்றும் ஆடி (AUDI) இணைந்து மின்சாரத்தால் இயங்கும் கார் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

 

 • ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) மூன்றாவது காலாண்டு லாபம் ரூ.1,950 ஆகும்.

 

 • வாட்ஸ் அப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான சோதனை இந்தியாவில் செய்யப்பட்டு வருகிறது.

 

 • ஏடிஎம் மையங்களில் ஆதார் பையோமெட்ரிக் விவரங்கள் மூலமாகச் சரிபார்த்துப் பணத்தினை விநியோகிக்கும் முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

 

 • இந்தியாவின் ஓஎன்ஜிசிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அபுதாபி நேஷனல் ஆஃப்ஷோர் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

ஒப்பந்தம்

 

 • இந்தியா – அபுதாபி இடையே ரயில்வே, மின்சாரம், நிதி சேவை உள்ளிட்ட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

 • இந்தியா – பாலஸ்தீனம் இடையே 5 கோடி டாலர் மதிப்பீட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

புதிய நியமனம்

 

 • ஐ.நா சார்பில் சூடான் நாட்டுக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படை குழுவின் தலைவராக முதல் முறையாக பிரிட்டனை சேர்ந்த பெண் லெப்டினன்ட் கர்னலான கேட்டி ஹிஸ்லோப் பொறுப்பேற்றுள்ளார்.

 

விருதுகள்

 

 • இந்தியா-பாலஸ்தீனம் இடையே நல்லுறவை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பாலஸ்தீனத்தின் உயரிய விருதானகிரேட் காலர் ஆப் பாலஸ்தீனம்வருது வழங்கப்பட்டுள்ளது.

 

English Current Affairs

 

National News

 • The Union Home Minister (Rajnath Singh) has said the government has decided to establish a cyber crime Reporting portal to report cyber crimes against women.

 

 • The Delhi government and MOEF jointly launched the clean Air Campaign, which will continue for 2 weeks till February 23

 

 • com. the country’s largest digital lending platform has entered into partnership with Microsoft to develop ‘Industry first’ innovations.

International News

 • MOU between India and Palestine for setting up of India – Palestine super – specialty hospital at Beit sahour in Bethelhem.

 

 • PM Modi has laid the foundation stone for a new temple for the Hindu Community living in the United Arab Emirates (UAE). It will be the first Hindu temple at Abu Dhabi,

 

 • India’s financial capital Mumbai has been named among the top 15 wealthiest cities globally.

 

Business

 • OVL partners acquire 10% stake in Abu Dhabi This is the first time that Indian oil companies have taken part in Abu Dhabi oil and gas concession.

 

 • India Post Payments Bank (IPPB) enables digital payments in post offices by April 2018.

Awards

 • Renowned Hindi writer ‘Krishna Sobti’ has been conferred upon the Jnanpith Award for her contribution to Hindi literature.

Appointments

 • Rakesh Singh has been appointed as head of private banking at HDFC Bank.

Book

 • Union Home Minister Rajnath Singh released a book on best interviews of former Prime Minister Atal Bihari Vajpayee.

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube