Today TNPSC Current Affairs February 10 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image

 

We Shine Daily News

     பிப்ரவரி 10

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • ரேடாரால் கூட கண்டுபிடிக்க முடியாத ஜே.20 என்ற அதிநவீன விமானத்தை சீனா தனது இராணுவத்தில் இணைத்துள்ளது

 

  • அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக உள்ள ராஜ் ஷா(இந்திய வம்சாவளி) முதன் முறையாக அமெரிக்க அதிபரின் அறிவிப்பை செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார் 

 

  • அமெரிக்க சென்ட் அவையில் ‘செலவுக்கு நிதி ஒதுக்கீடு மசோதா’ ஜனவரி 20ம் தேதி தோல்வி அடைந்ததால் அரசு நிர்வாகம் 3 நாட்கள் முடங்கியது. அரசு நிர்வாக முடக்கத்தை தவிர்க்க அமெரிக்காவில் 2 ஆண்டு பட்ஜெட்டை  நிறைவேற்ற டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது

 

  • நாசாவின் நியூ ஹோரிசான் விண்கலம், 612 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பூமியை படம் எடுத்து அனுப்பியுள்ளது

 

  • முதல் முறையாக ஆய்வகத்தில் மனித கருமுட்டையை உருவாக்கி இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார குறியீடு(மருத்துவம் மற்றும் சுகாதார சேவை) தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது

 

  • அமெரிக்க தூதரகம் சார்பில் ‘நெக்சஸ் தொடக்க மையம்’ இன்று டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது

 

  • 2014-2016ம் ஆண்டு காலக்கட்டத்தில் வரதட்சணை கொடுமையால் அதிகமாக உயிரிழந்தவர்கள் பட்டியலில் உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது

 

  • 2017ம் நிதியாண்டின் முதல் 10 மாத கால கட்டத்தில் நேரடி வரி வசூல் 19.3 சதவீதம் அதிகரித்து ரூ.6.95 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

  • ஓட்டுநர் உரிமம் பெற முகவரி மற்றும் வயது சான்றாக ஆதாரைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது

 

  • அனுமதியற்ற நீண்ட நாள் விடுப்பில் இருக்கும் 13 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது

 

  • உத்திரப் பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் ‘தாருல் உலமா தேவ்பந்த்’ என்ற இஸ்லாமிய அமைப்பு இஸ்லாமியர்கள் ஆயுள் காப்பீடு செய்வதற்கு ‘பத்வா’ என்னும் தடையை விதித்துள்ளது

 

  • நாடு முழுவதும் 2017-2018ம் நிதியாண்டில் இந்திய இரயில்வே துறையில், டிக்கெட் எடுக்காமல் மற்றும் உரிய டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணிகளிடம் இருந்து அபராதம் மூலம் ரூ.867 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று இரயில்வே துறை தெரிவித்துள்ளது

 

  • இந்தியாவில் முதன்முறையாக கர்நாடகா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்காக ‘சார்ஜிங் பாயின்ட்’ அமைக்கப்பட உள்ளது

 

  • மத்திய அமைச்சர்கள் (மனோஜ் சின்கா, தர்மேந்திர பிரதான்) புவனேஸ்வரம் – டெல்லிக்கு வாரம் ஒருமுறை செல்லும் ராஜதானி விரைவு இரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தனர்

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐசிசி) முதல் பெண் தனி இயக்குநராக  ‘இந்திரா நூயி'(இந்தியா) நியமிக்கப்பட்டு உள்ளார்

 

  • குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ‘கிராஸ்-கன்ட்ரி’ பனிச்சறுக்கில் பெண்களுக்கான ‘ஸ்கையாத்லான்’ போட்டியில் ஸ்வீடனைச் சேர்ந்த சார்லொட்டே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

 

  • அகில இந்திய அளவில் நடைபெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் 23 பதக்கங்களை(11 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ளனர்

 

  • ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் ஓய்வூதியம்(ரூ.10000 இருந்து ரூ.20000) மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களின் ஓய்வூதியங்கள்(ரூ.8000 இருந்து ரூ.16000) இருமடங்காக உயர்த்தப்பட்டது

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும், ‘பிளை – ஆஷ்’ என்ற நிலக்கரி சாம்பல் தொடர்பான விவரங்களுக்கு வலைதளம் மற்றும் மொபைல் அப்பை(ASH TRACK) மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் துவக்கி வைத்தார்

 

  • கத்தார் நாட்டின் முன்னணி வங்கியான தோஹா வங்கியின் கிளை இன்று சென்னையில் திறக்கப்பட்டது

 

  • செயலி மூலமான பணப் பரிவர்த்தனைக்கான பயிற்சி, விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பேடிஎம் செயலி ரூ.500 கோடியை முதலீடு செய்ய உள்ளது

 

  • நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) டிசம்பர் காலாண்டு நிகர நஷ்டம் ரூ.18,876 கோடியாக அதிகரித்துள்ளது 

 

 

English Current Affairs

 

National News

  • International conference on Unani medicine inaugurated on 10th February. The theme of the conference is Integration of Unani system of Medicine in main stream Health care.

 

  • Swachh Bharath Sanitation Park” inaugurated in Delhi. The park demonstrates about toilet and liquid waste management technologies.

 

  • Shri RK singh launches ASH TRACK. It is a web bared monitoring system that will enable better management of the ash produced by thermal power plants.

 

  • The Ministry of women and child development is considering to establish National Women Entrepreneurship Council (NWEC)

 

  • NITI Aayog releases “Healthy States, Progressive India” at a function in Delhi by the CEO, NITI Aayog.

 

  • National Informatics Centre (NIC) has Organized a three – day National Meet on Grassroot Informatics – VIVID 2018 at Delhi

International News

  • PM Modi laid the foundation stone for the first Hindu temple in the United Arab Emirates Capital

 

  • External Affairs Minister Sushma Swaraj met Saudi King salman bin Abdulaziz who inaugurated the prestigious National Heritage and culture festival ‘Janadriyah’ in

 Appointments

  • Abdul Hamid re-elected as President of

 

  • Amitabh Bachchan to be brand ambassador for the Muthoot group.

Awards

  • Reliance Industries wins Golden Peacock Award 2017 for Corporate Social responsibility (CSR)

 

  • PM Modi conferred with highest Palestinian honour

Sports

  • Haryana Crowned campions of Khelo India school games that concluded in New Delhi.

Books

  • Sachin Tendulkar launches book on child health care titled ‘Even when There is a Doctor’

 

­