Today TNPSC Current Affairs April 22 2018

Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 22

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • வங்க தேசத்திற்கு அகதிகளாக வந்த ரோஹிங்கயா முஸ்லீம்களை மீண்டும் சேர்த்து கொள்ள மியான்மருக்கு காமன்வெல்த் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

 • ஹூவாய் நிறுவனத்தின் 2018 சர்வதேச அனலிஸ்ட் நிகழ்வு ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது.

 

 • உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு 226 விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பன்னாட்டு பண நிதியம் தெரிவித்துள்ளது.

 

 • அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மனச்சோர்வு அதிகளவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) மாகாண பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்வி பேராசிரியர் எரிக் பெப்பர், இணை பேராசிரியர் ரிச்சர்டு ஹார்வி நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • தினை, ராகி, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • தெலுங்கானா மாநில அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

 

 • தெலுங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் கருப்பு பணப்புழக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • சென்னை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவராக ஒலிம்பியன் பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 2ம் நிலை போட்டிகள் தென் கொரியாவின் சாங்வோன் நகரில் நடைபெற உள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை விரைவில் அமலாக்கப்படும் என மத்திய நிதித்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

 

 • ஹெச்டிஎஃப்சி வங்கி நான்காம் காலாண்டில் ரூ.4,799.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

 

 • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தகவல் பயன்பாட்டு சேவைக்காக மத்திய அரசின் தேசிய மின் ஆளுமை சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டின் 51 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • குழந்தை கருவில் உருவான உடனே அதன் டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் அதன் குணத்தை மாற்ற முடியும் என கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி என்ற மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 22 – உலக பூமி தினம்

 

 • ஏப்ரல் 21 – பிரிட்டன் ராணி எலிசபெத்தின் 92வது பிறந்தநாள்

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • சுவீடன் மற்றும் பிரிட்டன் பயணத்துக்கு பின் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார்.

 

இறப்பு செய்தி

 

 • உலகிலேயே முதன் முதலாக அணுகுண்டு தயாரித்த நெர்சஸ் கிரிக் கிகோரியன் (97) கடந்த 18ம் தேதி காலமானார்.

 

 • உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான ஜப்பானைச் சேர்ந்த நபி தஜிமா (117) உடல் நல குறைவு காரணமாக நேற்று காலமானார்.

 

 • ஐரோப்பாவின் மின்னணு நடன இசைக் கலைஞர், ஆவிசி என்றழைக்கப்படும் டிம் பெர்கிளிங் (28) நேற்று முன்தினம் காலமானார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • The Punjab government led by CM Captain Amarinder Singh approved the extension of the facility of accidental insurance cover to nearly accredited 4200 media persons with yellow cards.

 

 • Petrol price today hit 74.40 a litre — the highest level under the BJP-led government, while diesel rates touched a record high of 65.65, renewing calls for cut in excise duty to ease burden on consumers.

 

 • The Ministry of Human Resource Development (HRD) launched integration of e-SANAD portal and NAD – National Academic Depository in a bid to make education system in India more transparent.

 

 • The Maharashtra government has pulled 11 websites down after receiving complaints from the entertainment industry that pirated content was displayed.

 

 • Hydro power major Sutlej Jal Vidut Nigam (SJVN) Limited has signed Memorandum of Understanding (MoU) with Ministry of Power for generating 9200 million units for the year 2018-2019.

 

 • The first International SME (Small, Medium Enterprises) convention will be held in New Delhi from 22nd to 24th April, 2018.

 

 • The Group of Ministers (GoM) constituted by Union Ministry of Road Transport and Highways has proposed One Nation One Tax policy for seamless movement of commercial vehicles across the country

 

 • Chairman & Managing Director, Shekhar Mittal said that Goa Shipyard Limited (GSL) is planned to go public this year.

 

International News

 

 • With an aim to strengthen trade ties with India, Taipei World Trade Centre (TWTC) launched its office in Delhi, ahead of Taiwan’s first-ever expo that will showcase cutting-edge technology and smart city solutions in Delhi in May 2018.

 

 • India has pressed the BRICS (Brazil, Russia, India, China and South Africa) nations to set up an independent credit rating agency of the five-member group.

 

 • The Union Ministry of Health and Family Welfare has decided to roll out ‘Integrated initiative for prevention & control of viral hepatitis’ under National Health Mission

 

 • India and Finland have reached an agreement on the tax dispute with Nokia under the Mutual Agreement Procedure System (MAP). This involves payment of Rs 1,600 crores a sum.

 

Science & Technology

 

 • Scientists at the Indian Association for the Cultivation of Science (IACS), Kolkata, have been successful in designing DNA-based logic devices that would find application in DNA-based computation.

 

Obituary

 

 • Nabi Tajima world’s oldest person has died in southern Japan at the age of 117.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube