Today TNPSC Current Affairs April 21 2018

Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 21

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • 2025ம் ஆண்டில் உலகை ஆளக்கூடிய பெருநகரங்கள் குறித்த பட்டியலை மெக்கன்சி அண்ட் கம்பெனி என்னும் நிறுவனம் வெளியிட்டது. இதில் லண்டன் மாநகரம் முதலிடத்தில் உள்ளது. பாரிஸ் 2வது இடத்தில் உள்ளது.

 

 • பிரிட்டன் வின்ட்ஸோர் கோட்டையில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று முடிவடைந்தது.

 

 • அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாகவும் சோதனை தளத்தை மூடுவதாகவும் வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன்’ தெரிவித்துள்ளார்.

 

 • மாலத்தீவில், உலகிலேயே முதன் முறையாக கடலுக்கடியில் கட்டப்பட்டு வந்த சொகுசு விடுதி நவம்பர் மாதம் திறக்கப்படவுள்ளது.

 

 • துபாய், மினா ரஷீத் துறைமுகத்தில் மிதக்கும் நட்சத்திர ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.

 

 • இலங்கையில் உள்ள சுற்றுலா மையங்களையும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய போலீஸ் சாவடிகள் அமைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

 • சீன அரசு, வைபை, ஏடிஎம், டிவி ஆகிய நவீன வசதிகளுடன் கூடிய பப்ளிக் டாய்லெட்டுக்களை அறிமுகம் செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • மாநில முதல்வர்களின் அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கங்களில் உத்திரப்பிரதேச முதல்வர் ‘யோகி ஆதித்யநாத்’ பேஸ்புக் பக்கம் முதலிடத்தில் உள்ளது.

 

 • அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் புதிய முறையை குரூப் ஏ தேர்வில் டிஎன்பிஎஸ்சி முதல் முறையாக அறிமுகப்படுத்த உள்ளது.

 

 • 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • ஜார்க்கண்ட் மாநில அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மருத்துவ படிப்பிற்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி மருத்துவ படிப்பை இடைநிறுத்தம் செய்பவர்களுக்கு ரூ.20 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் மற்றும் படிப்புக்கு பின் அரசு மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் பணிப்புரிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

 

 • தமிழகத்தில் கூட்டுறவுச் சங்க தேர்தல்களை நடத்த உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் தேர்தல் நடத்தலாம் ஆனால் வழக்கு முடியும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 • ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ‘சுஷ்மா ஸ்வராஜ்’ இன்று சென்றுள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களுரு எஃப் சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • 2018 ஐபிஎல் தொடரின் 11-வது சீசனின், 17வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

 

 • சிறந்த விளையாட்டு விரர் – வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை ‘மணிகா பத்ராவின்’ பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

 • ஹீரோ இன்டர் காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து சீன தைபே அணிகள் மோதுகின்றன.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 21 – உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • ஆவின் நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் செயல்படும் பால் விற்பனை மையம், புதிய நவீன பாலகங்கள் மற்றும் புதிய பொருட்கள், புதிய செயலிகள் ஆகியவற்றை பால்வளத்துறை அமைச்சர் ‘ராஜேந்திர பாலாஜி’ நேற்று தொடங்கி வைத்தார்.

 

 • வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்களின் விவரங்களை சரிபார்க்க ஆதார் அட்டை கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 • வீட்டு வசதி தேவைகளுக்கு கடனுதவி அளித்து வரும் இந்தியா புல்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டில் ரூ.1,030 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • சென்னையில் உள்ள நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலையை ஏற்று நடத்த, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் முன் வந்துள்ளது.

 

இறப்பு செய்தி

 

 • டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ‘ராஜிந்தர்சிங் சச்சார்’ நேற்று காலமானார்.

 

English Current Affairs

 

National News

 

 • Adani Foundation has partnered with ‘Room to Read’ to implement the project ‘Utthan’. The project was formally inaugurated on April 21, 2018, at Bhat Primary School, Bhat, Gandhinagar.

 

 • In a major boost to sports infrastructure in Telangana, Chief Minister K Chandrashekhar Rao on Saturday announced 2 percent reservation in state government jobs for sportspersons.

 

 • The Centre on approved the ordinance to award death sentence to the rapists of children below the age of 12. Following a meeting of the Union Cabinet here, the government cleared the amendment in the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

 

 • The Cabinet Committee on Economic Affairs approved a restructured Rashtriya Gram Swaraj Abhiyan (RGSA) scheme aimed at making rural local bodies self-sustainable, financially stable and more efficient.

 

 • The Union Cabinet on Saturday approved a proposal for the promulgation of the Fugitive Economic Offenders Ordinance 2018 that seeks to confiscate properties and assets of economic offenders, like Nirav Modi, who flee the country to avoid facing criminal prosecution.

 

 • An exhibition titled “Dhvani se Sabd aur Chinh” was inaugurated at National Gallery of Modern Art, Mumbai on April 21, 2018.

 

International news

 

 • The Commonwealth countries have unanimously agreed to take action on cybersecurity by 2020.The landmark declaration was made at the end of Commonwealth Heads of Government meeting (CHOGM) in London

 

Banking & finance

 

 • Indian Overseas Bank (IOB), one of the leading public sector banks entered into an agreement for information utility services with the National E-Governance Services Limited (NeSL).

 

 • Tata Consultancy Services has touched $100 billion mark in market capitalisation as its share price surged nearly 7%.The IT major is the first listed Indian company to achieve this milestone.

 

Appointments

 

 • Miguel Díaz-Canel was officially named as the new leader of Cuba, one day after a secret vote in the country’s National Assembly.

 

Obituary

 

 • Human rights activist and former Chief Justice of the Delhi High Court Justice Rajinder Sachar (94) passed away at a New Delhi hospital.

 

Books

 

 • The President of India, Shri Ram Nath Kovind, received the first copy of the book “Adi Shankaracharya: Hinduism’s Greatest Thinker”, from the author Shri Pavan Varma, at Rashtrapati Bhavan .

 

 • The Second Book reading session of ‘Archives Reads’ was organised by NAI with Author & Prof Deepak Kumar, former Professor, JNU reading from his latest publication “Trishanku Nation – Memory, Self and Society in Contemporary India”.

 

Sports

 

 • Differently abled indian arm wrestler shrimant jha won a bronze medal at asian arm wrestling championship which is held in kazakhstan

 

Important Days

 

 • On april 21, World creativity and Innovation day will be celebrated.

 

 • The Government of india celebrates april 21 as “Civil Service Day”

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube