Today TNPSC Current Affairs April 08 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

 

We Shine Daily News

ஏப்ரல் 08

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • 2018ம் ஆண்டின் “போஆவ் ஆசிய மன்றம் மாநாடு” சீன ஹைய்நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் ஏப்ரல் 8 முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

  • தெற்காசியாவில் உள்ள கம்போடியா நாட்டில் அடுத்த தமிழ் மாநாடு நடத்தவுள்ளதாக உலக தமிழ் வம்சாவழி அமைப்பை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

  • சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க வரியை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • சென்னை திருவிடந்தையில் நடைபெற உள்ள ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஏப்ரல் 12ம் தேதி ஒருநாள் பயணமாக சென்னை வர உள்ளார்.

 

  • வேளாண்துறை திட்டங்கள் மற்றும் முக்கியக் கட்டமைப்பு துறைகளில் இணைந்து செயல்பட இந்தியாவும் நேபாளமும் சம்மதம் தெரிவித்துள்ளது.

 

  • இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் நேற்று சந்தித்துள்ளார்.

 

  • நாட்டிலேயே முதன் முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி சேவையை கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப் பதக்கமும், ஹூனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

 

  • கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதலில் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.

 

  • கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான பளுதூக்குதலில் 85 கி.கி. பிரிவில் இந்தியாவின் வெங்கட் ராகுல் 338 கி.கி. எடை தூக்கி தங்கம் வென்றுள்ளார்.

 

  • கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் ரவிக்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

 

  • கோல்டுகோஸ்ட் (ஆஸ்திரேலியா) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பளுதூக்குதல் 94 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

 

  • 11வது ஐ.பி.எல். போட்டியில், மும்பை அணியின் ஆட்ட வீரர் ஹார்த்திக் பாண்டயா (பந்து காலில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதால்) விலகவுள்ளார்.

 

  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் 43வது முறையாக வெற்றி பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

 

  • கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் மேரி கோம் (இந்தியா) 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

  • ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவுக்கு பதிலாக (முதுகுவலி காரணமாக) இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கெட் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: April 2018 – Science and Technology News Image

 

  • ஓரியன் ஸ்பான் என்ற நிறுவனம் (அமெரிக்கா) ‘அரோரா ஸ்டேஷன்’ என்ற பெயரில் பூமியை சுற்றி வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இணையாக விண்வெளி ஓட்டலை உருவாக்கி வருகிறது.

 

  • சத்தமின்றி பேசுவதை கேட்கச் செய்யும் ‘ஆல்டெர்இகோ’ என்ற ஹெட்செட் கருவியை அர்னவ் கபூர் (அமெரிக்க இந்தியர்) கண்டுபிடித்துள்ளார்.

 

  • சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளதை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

  • கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.விc-41 ராக்கெட் மூலம் வரும் 12ம் தேதி செலுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

  • சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு ஆட்களை கொண்டு செல்லும் விண்கலத்தை தயாரிப்பதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா உடன்பாடு செய்துள்ளது. (தற்போது ஆட்கள் விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்கலம் ரஷ்யாவிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது)

 

  • தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் ‘உழவன்’ என்னும் செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • 1,500 கோடி டாலர் மதிப்பில் 110 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.

 

  • 20 பெரிய நகரங்களின் 4ஜி இணைப்பில் பாட்னா முதலிடத்தில் உள்ளதாக “ஓப்பன் சிக்னல் மற்றும் ஒரு வயர்லெஸ் மேப்பிங் நிறுவனம்” தெரிவித்துள்ளது.

 

  • குருகிராமில் உள்ள இந்தியன் யூனிட் ஆப் தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டேட்டர்ஜி மற்றும் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் உள்ள காம்பட்டீவ்னஸ் மையம் மேற்கொண்ட ஆய்வில் ஜியோ மூலம் உள்நாட்டு உற்பத்தி 5.65 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • அமெரிக்காவின் டெலிரக்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் சி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தினை எச்சிஎல் மென்பொருள் நிறுவனம் 60 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளது.

 

  • 4ஜி சிக்னல் நகரங்களில் சென்னை 2வது இடத்தில் உள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • ஏப்ரல் 08 சர்வதேச ரோமானிய தினம்

 

இறப்பு செய்தி

 

  • ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவின் கணவர் நிரஞ்சன் தாமஸ் ஆல்வா உடல்நலக்குறைவால் காலமானார்.

 

English Current Affairs

National news

 

  • Indian Railway has inducted three ‘09-3X Dynamic Tamping Express machines’, the state of the art integrated track maintenance machines. A new 3D state-of-the-art tamping simulator has been installed and commissioned at Indian Railway Track Machine Training Centre Allahabad (IRTMTC) for practical hands-on training to operate such advanced track maintenance machines

 

  • Indian Government banned imports of the hormone oxytocin to stop its misuse in the livestock industry. Oxytocin is referred to as “love hormone”, Union Women and Child Development Minister Maneka Gandhi has stated that abuse of ‘oxytocin’ in animals, especially milch animals, causes hormonal imbalances and makes them barren sooner.

 

  • NITI Aayog is planning to build National Data & Analytics Platform (NDAP) to host and interpret huge amount of data which shall be helpful for citizens to understand spend patterns of the government, consumption trends and the success of various government policies.

 

  • As per a report by OpenSignal, Patna has ranked No.1 among 20 largest cities in India in terms of 4G availability. OpenSignal is Lonon-based company that specializes in wireless coverage mapping

 

  • Tamil Nadu (TN) Chief Minister K Palaniswami recently launched ‘Uzhavan’ (meaning – farmer), a mobile application for farmers. This app allows farmers to have access to nine types of services, including details about their crop insurance, information on farm subsidies, book farm equipment and related infrastructure and receiving weather forecast.

 

International News

 

  • From 10th to 23rd April, 2018, Indian Air Force (IAF) will conduct exercise ‘Gagan Shakti, 2018’, its biggest ever combat exercise along Pakistan and China borders. Indigenous Light Combat Aircraft (LCA) Tejas will be taking part in the exercise for the first time.

 

  • RH300 sounding rocket was launched from Thumba Equatorial Rocket Launching Station (TERLS), in Thiruvananthapuram, Kerala. The RH300 sounding rocket was developed by Vikram Sarabhai Space Centre (VSSC).

 

Awards

 

  • Chhattisgarh won the ‘State of the Year’ Award under the ‘business leader’ category at the India Business Leader Awards (IBLA) in New Delhi.  Union Information Technology and Electronics Minister Ravi Shankar Prasad presented the award to Chhattisgarh Minister Prem Prakash Pandey.

 

Appointments

 

  • Rakesh Kumar Vats has been given the additional charge of chairman of NPPA (National Pharmaceutical Pricing Authority) with immediate effect.

 

Important days

 

  • On 7th April 2018, World Health Day 2018 was celebrated all over the world. The theme for World Health Day 2018 is: Universal health coverage: everyone, everywhere.

­