Today TNPSC Current Affairs April 07 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 07

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • உலக தமிழ் மாநாடு, கம்போடியாவில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கோவில்(அந்தோர்வாட்) வளாகத்தில், மே மாதம் 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

 

 • ஆப்பிரிக்கா நாடான சியராலியோனின் புதிய அதிபராக ‘ஜுலியஸ் மாடா பயோ’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 •  உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகம்  நடைபெறும் நாடுகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 

 •  அமெரிக்காவைச் சேர்ந்த ‘விர்ஜின் கேலட்டிக்’ என்ற தனியார் நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் விண்வெளி ஓட சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தது.

 

 •  சிங்கபூருக்கு அடுத்த படியாக, ‘சூரிச் விமான நிலையம்’ ஐரோப்பாவின்; சிறந்த விமான நிலையமாக கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

 •  வேகமாக அழிந்து வரும்  காண்டாமிருகங்களை பாதுகாக்க சுமார் 6 லட்சம் டாலர் மதிப்பில் ‘ட்ரான்மீட்டர் கருவிகளை’ பொருத்த கென்யா அரசு முடிவு செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • உலகளவில் பருத்தி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் 114 போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான பணிகளை இந்திய விமானப் படை தொடங்கியுள்ளது.

 

 • 2017 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரை நாட்டில் 22,207 இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதில் 114 அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் ‘அண்ணா பல்கலைக்கழகம்’ 10வது இடத்தில் உள்ளது.

 

 • தமிழகத்தில், 2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 90 விருதுகளை முதலமைச்சர் ‘எடப்பாடி பழனிச்சாமி’ நேற்று வழங்கினார்.

 

 • கம்பியில்லாத இணைய வசதி(இன்டர்நெட்) திட்டமான ‘அம்மா வைஃபை திட்டம்’, சென்னை உள்பட 5 இடங்களில் தொடங்கப்பட்டது.

 

 • தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்துவதை தடுக்கும் விதத்தில் அவசர சட்டம் நிறைவேற்ற, உத்திரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • நேபாளப் பிரதமர் கே.பி. ‘சர்மா ஒலி’, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • 21வது காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தமிழக வீரர் ‘சதீஷ் சிவலிங்கம்’ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 14 தங்கம் உள்பட 36 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

 

 முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 07 – உலக சுகாதார தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • இந்திய இரயில்வே துறையின் கீழ் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு மத்திய அரசு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை விதித்துள்ளது.

 

 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான கடன் வட்டியை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி குறைத்துள்ளது. இதன்படி ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு அரை சதவீதமும், ரூ.2 கோடிக்கு மேல் உள்ள கடன்களுக்கு நிறுவன மதிப்பீட்டுக்கு ஏற்ப 0.15 சதவீதம் முதல் 0.96 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

 

 • இந்தியாவில் கிரிப்டோ கரண்சிகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கையில், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரெண்சி வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதிநிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

 • இந்திய தொலை தொடர்பு சேவையில், ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் நுழைந்ததால், நுகர்வோருக்கு, ஆண்டுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் ஆகி உள்ளது என ‘ஐ.எப்.சி. நிறுவனம்’ அறிவித்துள்ளது.

 

English Current Affairs

 

 National News

 • The Ministry of Information and Broadcasting has instituted a committee to regulate online portals, including news websites, entertainment sites and media aggregators. The 10-member committee will include secretaries of the departments of Home, Legal Affairs, Electronics and Information and Technology, and Industrial Policy and Promotion.

 

 • The Global Logistics Summit was held in New Delhi. It was organized by the Department of Commerce, Ministry of Commerce & Industry, along with FICCI (Federation of Indian Chambers of Commerce & Industry) and the World Bank Group.

 

 • An all encompassing coordinated and composite exercise named “Gaganshakti” is being conducted by the IAF from 08-22 Apr 18.The aim of this exercise is real time coordination, deployment and employment of Air Power in a short & intense battle scenario

 

 • The Tamil Nadu government launched Amma Free Wi-Fi zones in 5 cities of Tamil Nadu.  This scheme was announced by former Tamil Nadu Chief Minister J Jayalalithaa in September 2016.

 

 • The Ministry of Tribal affairs has approved establishment of the firstmultipurpose “Van Dhan Vikas Kendra” on pilot basis for establishment in Bijapur District of Chhattisgarh It has been setup for providing skill up gradation and capacity building training and setting up of primary processing and value addition facility.

 

 • The Central Information Commission (CIC) is holding a seminar on the topic “Health and Right to Information Act”. The Seminar is aimed at Health and Right to Information Act 2005, with a view to improve governance in the Health sector.

 

 • Minister of State for Micro, Small & Medium Enterprises (Independent Charge), Giriraj Singhlaunched a mobile phone application for locating Khadi stores in the country. The app was launched during 9th meeting of National Board of Khadi and Village Industries Commission (KVIC) in New Delhi.

 

 International News

 • External Affairs Minister Sushma Swaraj is in Baku to attend the ministerial conference of the Non-Aligned Movement being held in the capital of

 

 • Indo-Korean joint anti-piracy, search and rescue exercise ‘Sahyog- Hyeoblyeog 2018’ was conducted off the Chennai coast, in Tamil Nadu. The Korean Coast Guard ship ‘Bodaro’ took part in the exercise.

 

 • The Government of India, Government of Maharashtra and the World Bank signed a US$ 420 million project to help Small and Marginal farmers in the Marathwada and Vidarbha regions of Maharashtra. The project will help in increasing climate resilient practices in agriculture and ensuring that farming continues to remain a financially viable activity for them.

 

 • Qatar has introduced national service for women for the first time as per a law issued by Qatar’s Emir Tamim bin Hamad al-Thani. According to the law, women above the age of 18 can volunteer for national service. 

 

 Banking & Finance

 • Indian Bank has introduced Public Financial Management System (PFMS) and has launched ‘Bharat QR’ Indian Bank, Managing Director and CEO, Kishor Kharat launched these initiatives in Chennai. ‘Bharat QR’ is a mobile payment collection scheme to accept digital payments

 

 • ICICI Bank goes live with SWIFT’s gpi Tracker The improved cross-border payments service which is being referred to is the gpi (Global Payment Innovation) Tracker, which has been extended to cover all payment instructions sent across the SWIFT network.

 

 Sports

 • Satish Kumar Sivalingam retained his sway over the men’s 77kg title at the Commonwealth Games. He claimed India’s third gold medal at the Commonwealth Games

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube