Today TNPSC Current Affairs April 06 2018

TNPSC Current Affairs: April 2018 – National News Image
Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 06

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • விண்வெளியில் நொடிக்கு ஆயிரம் புகைப்படங்களை எடுக்கும் ஹைபர் கேமராவை இந்தியாவை சேர்ந்த பேராசிரியர் “விக் தில்லோன்” தலைமையிலான “ஷெப்பீல்ட் பல்கலைக்கழக குழு” கண்டுபிடித்துள்ளது.

 

 • பூமியில் இருந்து மிக அதிக தூரத்தில் இருக்கும் இக்கார்ஸ் என்ற நீல நிற நட்சத்திரம் ஒன்றை “தி ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப்” என்ற தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது.

 

 • பஹ்ரைன் (வங்காள விரிகுடா) நாட்டில் எட்டு ஆயிரம் கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சுரக்கும் புதிய பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் “முஹம்மது பின் கலிபா” தெரிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் காவல் துறை துணை ஆய்வாளராக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா சென்னை அண்ணா பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஷாக்யா மேலும் சில அமைச்சர்களுடன் இன்று இந்தியா வந்துள்ளார்.

 

 • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரஷ்ய அதிபர் புதினை வரும் 8ம் தேதி சந்திக்க இருக்கிறார்.

 

 • ஐந்து நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் மோடி ஏப்ரல் 16ம் தேதி முதல் சுவீடன் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் செய்கிறார். பின்பு ஸ்டாக்ஹோம் நகரில் நடக்க உள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

 

 • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 • ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

 

 • ஆஸ்திரேலியாவில் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதலில் 69கி.கி. எடைப்பிரிவில் தீபக் லாதர் மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

 

 • இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ரூ.6,138.1 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

 

 • 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்டத்தை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்மித்துக்கு பதிலாக ஹென்ரிச் க்ளாசன் பங்கேற்க உள்ளார்.

 

 • 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியதை அடுத்து டாம் குர்ரான் விளையாட உள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • 2018-19ம் ஆண்டிற்கான நிதிக் கொள்கையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

 

 • வளைவான செல்போன் திரைகளுக்கு அருகே விரல்களை கொண்டு சென்றாலே செயல்படத்தக்க வகையில் புதிய தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

 • நிதி சேவைத் துறையைச் சேர்ந்த ஐஎல்ரூஎஃப்எஸ் செக்யூரிட்டீஸ் சர்வீஸஸ் (ஐஎஸ்எஸ்எல்) நிறுவனத்தை தனியார் வங்கியான இன்டஸ்இண்ட் கையகப்படுத்துவதற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

 

 • நேரடி மானியத் திட்டத்தால் ரூ.83 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது என மத்திய கொள்கைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 06 – முன்னாள் துணை பிரதமர் “பாபுஜெகஜீவன் பிறந்த நாள்

 

இறப்பு செய்தி

 

 • மலையாள நடிகர் கொல்லம் அஜித் (56) உடல் நலக்குறைவால் நேற்று (05-06-2018) காலமானார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • The Union Minister for Railways and Coal Shri Piyush Goyal launched UTTAM App for Coal Quality Monitoring. UTTAM stands for – Unlocking Transparency by Third Party Assessment of Mined Coal (uttam.coalindia.in). The Ministry of Coal and Coal India Limited (CIL) developed UTTAM, aims to provide an App for all citizens and coal consumers to monitor the process of Third Party Sampling of coal across CIL subsidiaries.

 

 • On 5th April 2018, President Ram Nath Kovind addressed the 34th annual session of FICCI Ladies Organisation (FLO) in New Delhi. At the Annual session 10 Indian Women Achievers were presented the FLO ICON AWARDS.

 

 • In a major achievement, India has overtaken Japan to become the world’s second largest producer of crude steel in February, according to the Steel Users Federation of India (Sufi). At present, China is the largest producer of crude steel in the world, accounting for more than 50 per cent of the production.

 

 • On April 5, 2018, Union Civil Aviation Minister Suresh Prabhu inaugurated first flight from Delhi to Pathankot (in Punjab), at a ceremony held at the Indira Gandhi International Airport in Delhi

 

International News

 

 • Nasa’s Hubble Space Telescope has discovered the farthest individual star ever seen – an enormous blue stellar body nicknamed Icarus located over halfway across the universe. The star, harboured in a very distant spiral galaxy, is so far away that its light has taken nine billion years to reach Earth.

 

 • President Donald Trump instructed the U.S. trade representative to consider slapping an additional $100 billion in tariffs on Chinese goods on Thursday in a dramatic escalation of the trade dispute between the two countries.

 

Banking & Finance

 

 • Reserve Bank of India (RBI) announced First Bi-Monthly Monetary Policy Statement for financial year 2018-19. This time too, the Policy Repo Rate has been kept unchanged.
 1. Growth rate: 7.4 percent
 2. Inflation target for the first half of current fiscal: 4.7-5.1 percent
 3. Repo rate: 6 percent
 4. Reverse repo rate: 5.75 percent
 5. MSF: 6.25%
 6. Bank Rate: 6.25%
 7. CRR: 4%
 8. SLR:19.5%

 

 • Leading private lender ICICI Bank announced the launch of a service that enables Non Resident Indians (NRIs) to send money to a beneficiary in India using social media platforms like WhatsApp and e-mail.

 

Sports

 

 • India defeated Bangladesh by 27-10 in a one-sided match to win the fifth South East Asian Women Handball Championship at K.D. Singh Babu Stadium in Lucknow.

 

 • World champion weightlifter Mirabai Chanu (48kg) secured India’s first gold medal at 21st common wealth game in gold coast.

 

Obituary

 

 • Malayalam film star Ajith, known for portraying negative roles, has passed away. Ajith, 56, was admitted to the hospital 10 days ago following health issues.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube