Today TNPSC Current Affairs April 02 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 02

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • உலகத்திலேயே முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் நகரில் தண்ணீரைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

 • சீன விண்வெளி ஆய்வு மையம் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பிய ‘டியாங்காங் 1 தெவ்’ பசுபிக் கடலில் விழுந்தது. 

 

 • பசுபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள தீவுப்பகுதியான ‘பிஜி’ நாடு உள்பட ‘பா’ நகரை ‘ஜோசி புயல்’ தாக்கியது. 

 

 • அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 128 பொருட்கள் மீது சீன அரசு சுமார் 3 பில்லியன் டாலர் இறக்குமதி வரி விதித்துள்ளது. 

 

 • இலங்கையில் 2வது உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட கப்பல் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மிதக்கவிடப்பட்டுள்ளது. 

 

 • எதிரிகள் நாட்டு ஏவுகணைகளை தடுத்து, தாக்கி அழிக்கும் அதிநவீன தடுப்பு ஏவுகணையை கஜகஸ்தான் பகுதியில் ரஷ்யா இன்று சோதனை செய்தது. இந்த சோதனை வெற்றியில் முடிந்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • மேற்கு வங்கத்தில், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும், ‘ரூபஸ்ரீ’ திட்டத்தை, முதல்வர் ‘மம்தா பானர்ஜி’ துவக்கி வைத்தார். 

 

 • இந்தியா மற்றும் தென்கொரியா இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இருநாட்டு கடற்படை வீரர்களும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த பயிற்சியை மேற்கொள்ள தென் கொரிய கடலோர காவற்படை வீரர்கள் ‘பதாரா’ என்ற கப்பலில் சென்னை வந்துள்ளனர். 

 

 • ராஜஸ்தான் மாநிலத்தில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து தனியார் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 • அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் உள்ள மொபைல் போன்களில் சீன சிக்கல் மற்றும் ‘வெல்கம் டூ சீனா’ என்ற மெசேஜ் வருவதாக அந்நகர மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

 • அருணாச்சல பிரதேசத்தில், 76 பேர் மட்டுமே வாழும் காஹூ (அஞ்சாவ்) என்ற கிராமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • தாய்லாந்தில் நடைபெற்ற அலைதுடுப்பு விளையாட்டு போட்டியில் 6 கிலோ மீட்டர் பிரிவில், இந்திய வீரர் ‘சேகர்’ தங்கம் வென்றார். 

 

 • சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் ‘ஜெர்மனி அணி’ உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

 

 • அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீரர் ‘ஜான் இஸ்னெர்’ சாம்பியன் பட்டம் வென்றார். 

 

 • அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கணை ‘ஸ்லோனே ஸ்டீபன்ஸ்’ சாம்பியன் பட்டத்தை வென்றார். 

 

 • ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட ‘ஸ்மீத்துக்கு’ பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ‘ஹெய்ன்ரிச் க்ளாஸென்’(தென் ஆப்பிரிக்கா) நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 • ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய ‘மிட்சல் ஸ்டார்க்கிற்கு’ பதிலாக கொல்கத்தா அணியில் ‘டாம் குர்ரான்’ சேர்க்கப்பட்டுள்ளார். 

 

 • 45வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 

 

 • சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில், கேரள அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 01 – ஒரிஷா தினம்.

 

 • ஏப்ரல் 02 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • உலகில் அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

 

 • புதிதாக கார் வாங்கும் போதே எண் பலகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ‘நிதின் கட்கரி’ தெரிவித்துள்ளார்.

 

 • 2017-2018ம் நிதியாண்டில் மட்டுமே சென்னை ஐசிஎப் சுமார் 2,500 இரயில் பெட்டிகளை தயாரித்து சாதனைப் படைத்துள்ளது.

 

 • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி), கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரண்டு மடங்காக அதிகரிக்க ரூ.1.43 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 

 

 • சுசுகி மற்றும் டொயோடா நிறுவனங்கள், வியாபார ரீதியாக கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 

 

 • நாட்டின் மிகப் பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி கடந்த நிதியாண்டில் 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. 

 

 

English Current Affairs

 

National news

 

 • The West Bengal government has rolled out Chief Minister Mamata Banerjee’s dream project ‘Rupashree’ which provides one time financial support to the marriages of poor women. ‘Rupashree’ scheme follows the chief minister’s ambitious ‘Kanyashree’ project which has drawn global applause.

 

 • Hyderabad has been ranked the top city in the short-term Momentum Ranking of JLL’s annual global survey. The ‘CMI Short-Term Momentum rankings’ published by Jones Lang LaSalle (JLL) features Hyderabad, Bengaluru, Pune and Kolkata among the top five cities with Delhi, Chennai and Mumbai also earning a spot among the top 20 in the Global Top 30 index.

 

 • In the survey conducted across 53 airports in the country by AAI, Mangalore International Airport was adjudged the cleanest. A team of officials from AAI had inspected the airport terminal, parking area, toilets, commercial stalls, and the road leading to the airport and customer lounge.

 

 • India ranked 37th in the global startup ecosystem in 2017, according to a report released by global startup ecosystem map Startup blink. The list, measuring startup ecosystem strength and activity, was topped by the United States followed by the United Kingdom.

 

International news

 

 • The fifth Indo-Kyrgyzstan joint training exercise KHANJAR V culminated after a Joint Tactical Validation Exercise and a closing ceremony held at Counter Insurgency Jungle Warfare School, Vairengte, and Mizoram.

 

 • The Indian delegation for the annual meeting comprises India’s Indus Water Commissioner P K Saxena and Pakistan’s six-member delegation for the commission’s 114th meeting is being led by Syed Muhammad Mehar Ali Shah begins in Delhi.

 

 • India is now the second-largest mobile phone producer in the world after China. According to the data shared by Indian Cellular Association with the government, annual production of mobile phones in India increased from 3 million units in 2014 to 11 million units in 2017.

 

 • India has now become the largest importer of almonds in the world. India, the second largest almond importer in the world in 2017, has already imported 154 million pounds till February this crop year (August 2017 to July 2018), overtaking Spain and China.

 

Appointments 

 

 • Debjani Ghosh, former managing director of Intel South Asia, is the new president of Nasscom. Ms. Ghosh had taken charge as the president, succeeding R. Chandrashekhar upon completion of his term.

 

Awards

 

 • Cricketer Mahendra Singh Dhoni and billiards champion Pankaj Advani are among the 41 prominent personalities who will be conferred with the prestigious Padma awards of 2018 by President Ram Nath Kovind in New Delhi today.

 

Sports

 

 • Kerala have lifted their sixth Santosh Trophy Football title. In a thrilling final at the Salt Lake Stadium in Kolkata, they held their nerves to beat defending champions and 32-time winners Bengal via penalty shootout.

 

 • American John Isner won his first ever Masters 1,000 title with a 6-7 (4-7) 6-4 6-4 victory over German Alexander Zverev in the Miami Open final.

 

 • Indian women’s cricket team captain Mithali Raj was adjudged ‘Sportsperson of the Year’ while ace shuttlers Kidambi Srikanth and PV Sindhu bagged the best senior male and female athletes at the Telangana Sports Journalists Association annual awards for 2017.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube