TNPSC Current Affairs – February 04, 2018

 

We Shine Daily News

     பிப்ரவரி 04 

தமிழ்

உலக செய்திகள்

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 

  • உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஜப்பான் சாதனை படைத்துள்ளது.

 

  • அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிக்கழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது

 

  • உலகின் முதல் மின்காந்த இரயில் துப்பாக்கியை (ஏவுகணையை செலுத்த) பொருத்திய போர்க்கப்பலை சீனா உருவாக்கியுள்ளது.

 

  • ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் விண்வெளியில் 8 மணி 13 நிமிடம் நடந்து சாதனை படைத்துள்ளனர்.

 

  • ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹிரோஷி இசிகுரோ (ரோபாடிக் ஆய்வக இயக்குனர்) டிவியில் தொகுப்பாளர் வேலை செய்யும் விதமாக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவை ஏப்ரல் மாதத்தில் இருந்து டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

 

  • உலகிலேயே ஹாங்காங்கில்தான் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகளாக உள்ளது என ஐ.நா. சபையின் மனித அபிவிருத்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவுடனான நட்புறவு நீடிப்பதாகவும், அதிபர் டிரம்ப் அந்நாட்டுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறார் என்றும் ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் “நிக்கி ஹேலி” (இந்திய வம்சாவளி) தெரிவித்துள்ளார்.

 

  • இந்தியாவுடனான நட்புறவை மதிப்பதாகவும், அதேசமயம் சீனாவின் இறையாண்மை உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் எனவும் “யாங் ஸி” (சீன வெளியுறவுத்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 

  • இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என்று ஜெயந்த் சின்கா (விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

  • 2016-2017ம் ஆண்டு இந்தியாவுக்கு அன்னிய முதலீடாக ரூ.4 லட்சம் கோடி வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

  • புதுடெல்லியில் உள்ள இரண்டு தமிழ்நாடு இல்லங்களின் புதிய பெயர்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. (வைகை இல்லத்துக்கு பதிலாக வைகை தமிழ்நாடு இல்லம் எனவும், பொதிகை இல்லத்துக்கு பதிலாக பொதிகை தமிழ்நாடு இல்லம்)

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 

  • யு-19 உலகக்கோப்பை போட்டியில் இளம் வயதில் கேப்டனாகப் பங்கேற்று கோப்பையை வென்ற கேப்டன் எனும் பெருமையை “பிரித்வி ஷா” பெற்றுள்ளார்.

 

  • யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சமும், வீரர்களுக்கு 30 லட்சமும், அணியின் ஊழியர்களுக்கு 20 லட்சமும் ஊக்கத்தொகையாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

  • தென்னாப்பிரிக்கா அணிக்கான புதிய கேப்டனாகஎய்டன் மார்கிராம்” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 

  • கவுகாத்தியில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு செய்வதற்கு உலகில் மிகச் சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றன என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

  • திருச்சி – பாங்காக் இடையேயான நேரடி விமான சேவை பிப்ரவரி மாத இறுதியுடன் ரத்து செய்யப்படுவதாக “தாய் ஏர் ஏசியா” நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  • முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த “ஈஐடி பாரி நிறுவனம்” “சிந்தைட் இண்டஸ்ட்ரீஸூடன்” இணைந்து ரூ.40 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

  • சிம்பனி நிறுவனத்தின் நிகர லாபம் 21 சதவீதம் அடைந்துள்ளது.

 

  • ஸொமோடோவில் (உணவுகளை முன்பதிவு செய்யும் செயலி) ஆண்ட் ஸ்மால் அண்ட் மைக்ரோ பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனம் (அலிபாபா குழுமம்) 20 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • பிப்ரவரி 04உலக புற்றுநோய் தினம்

 

 

English Current Affairs

National News

  • Maharashtra State Government launched four schemes aimed at promoting entrepreneurship in agriculture and allied sectors among the economically backward sectors of the state.

 

  • Prime Minister Modi inaugurated Global Investors Summit 2018 – Advantage Assam in Guwahati. This summit is expected to position Assam as India’s Express way to Association of South East Asian Nations (ASEAN) countries.

 

  • Government to launch Kisan Urja Suraksha evam Utthaan Mahaabhiyan scheme which aimed at promoting use of solar energy for pumps and encourage use of barren land for setting up decentralized solar power plants.

 

  • India’s largest floating Treatment Wetland launched in Hyderabad’s Neknampur Lake.

 

  • Assam State Government has signed a MOU with National Building construction corporation. For setting up a twin tower trade centre in Guwahati.

 

  • Uttar Pradesh State Government inaugurated State’s first even butterfly Park in Kanpur.

 

  • Cochin Shipyard limited and Joint Stock company united shipbuilding corporation Russia have signed a MOU to collaborate and engage in Design, Development and Execution of contemporary State of Art vessel for Inland and coastal waterways.

 

International Affairs

  • UK has permitted doctors to create three parent babies through Mitochondrial donation in a move to prevent passing of incurable genetic disease from mother to babies.

 

  • New Manchester India partnership aimed at connecting Indian companies with Northern regions of England was launched in London, UK

 

Banking and Finance

  • Inland waterways Authority of India signed a project agreement with World Bank for Jal Marg Vikas Project aimed at enhancing navigation on National Waterway – 1 from Varanasi to Haldia.

 

  • Under the Union Budget 2018 India’s annual Financial allocation to Nepal for 2018 – 19 has nearly doubled to Rs.650 crore.

 

Business

  • Union, Minister for Finance and corporate affairs Arun Jaitely launched Crisid Ex, India’s first sentiment index for micro and small enterprise (MSE’s)

 

Awards

  • Malaysia’s Lai Jia Yi won the fourth edition of International Young Chef Olympiad in Kolkata.

 

  • Veteran Film Producer and director Shyam Benegal to be bestowed with V.Shantaram Lifetime achievement award.

 

Appointments

  • Neelam Kapur appointed as Director General of Sports Authority of India

 

  • N.Chandrasekaran headed Task Force to study Artificial Intelligence application in Ministry.

 

Science and Technology

  • China successfully launched Zhangheng – 1 its first Seismo electromagnetic satellite to study seismic precursors.

 

Sports

  • India won U-19 cricket cup at the Bay Oval in New Zealand.

 

  • Saurav Ghosal becomes the highest Ranked Indian squash player.

 

  • Two athletes Luger Shiva Keshavan and Jagdish Singh will represent India at winter Olympics.

­